Blogger news

Welcome to myZone and thanks for ur visit ((((ஸ்ரீநிவாஸ்))))

Blogger templates

மர்பி விதிகள் - 501 - 1000

501. உங்களுக்கு எந்த பல்பு எட்டாத இடத்தில் இருக்கிறதோ அது தான் முதலில் பழுதாகும்.

502. இரண்டு தகுதியில்லாதவர்களைப் பணிக்கமர்த்துவதால் தகுதியானவர்களாகி விட மாட்டார்கள்.

503. இரண்டு தகுதியானவர்களைப் பணிக்கமர்த்தினால் இருவரும் தகுதியில்லாதவர்களாகி விடுவார்கள்.

504. ஒரு பழைய கட்டிடத்தைத் திருத்தியமக்க அதைப் புதிதாகக் கட்ட ஆகும் செலவைப் போல் இரு மடங்கும், காலத்தைப் போல் மூன்று மடங்கும் ஆகும்.

505. திருத்தியமைக்கும் கட்டிடத்தில் இருந்து மறு உபயோகம் செய்து கொள்ளலாம் என நீங்கள் எந்த விலையுயர்ந்த பொருளை நினைத்து வாங்காமல் இருந்தீர்களோ அது ஏற்கனவே கெட்டுப் போயிருக்கும்.

506. கட்டமைப்பில் முக்கியமான கட்டத்தைத் தாண்டியவுடன் அதை மாற்றலாம் என்ற யோசனையே வரும்.

507. உற்பத்தியாளரின் உத்திரவாதத்தை 0.5 ஆல் பெருக்கினால் அந்தப் பொருளின் உண்மையான செயல்பாட்டின் அளவு தெரியவரும்.

508. பயிற்சியின் போது கனகச்சிதமாக செயல்படும் ஒருவரைக் களத்தில் இறக்கினால் தான் தெரியும் வேடிக்கை!

509. யாரிடம் ஒரு அழைப்புக்கு (கால்) மட்டும் பணமிருக்கிறதோ அவருக்கு தான் தவறான அழைப்பாக (ராங் கால்) செல்லும்.

510. நீங்கள் வேகமாகச் செல்கின்றீர்கள் என்றால் மேலிருந்து கீழாக இறங்குகிறீர்கள் என்று தானே அர்த்தம்?

511. புகை பிடிக்கும் குழல் மேதைகளுக்கு யோசிக்கும் காலத்தையும், முட்டாள்களுக்கு ஏதோ குச்சியை வைத்திருக்கவும் உதவுகிறது.

512. ஒரு இரயில் தாமதமாகச் செல்லும் நேரமும் நேரத்துக்குச் செல்ல வேண்டிய ஆட்களின் எண்ணிக்கையும் நேர் விகிதத்தில் இருக்கும்.

513. கருத்துக் கணிப்பு உங்களுக்கு சாதகமாக வந்தால் அதைக் கையில் எடுத்துக் கொண்டு புகழுங்கள்.

514. கருத்துக் கணிப்பு உங்களுக்கு அடியோடு சாதகமாக வரவில்லையெனில் (1) அதைப் புறந் தள்ளுங்கள் (2) மக்களின் அடிக்கடி மனம் மாறும் தன்மையின் கடந்தகால வரலாற்றை அவிழ்த்து விடுங்கள்.

515. கருத்துக் கணிப்பு உங்களுக்கு சிறிது ஏமாற்றம் மட்டுமே அளித்தால் மக்களின் பரிதாப ஓட்டைப் பெற ஏதேனும் வழி இருக்கிறதா எனப் பாருங்கள்.

516. கருத்துக் கணிப்பு உங்களுக்கு அமோக ஆதரவைத் தருமாயின் உங்கள் கட்சிக்காரர்களிடம் இல்லாத ஒற்றுமையை இருப்பதாக மக்க்ள் நினைப்பதை நினைத்துப் பெருமை கொள்ளுங்கள்.

517. எந்த ஒரு பொருளையும் முழுமையாக உபயோகித்தால் அது உடைந்து விடும்.

518. எந்த ஒரு பொருளையும் முழுமையாக உபயோகிக்கவில்லையெனில் அது பழுதுபடும்.

519. யாரிடமும் நீங்கள் எதைச் செய்யப்போவதில்லை என்பதை மட்டும் சொல்லிவிடாதீர்கள்.

520. உலகத்திலேயே மக்களை ஈர்க்கும் சக்தியுடைய இரண்டாவது வசனம், "இதைப் பாருங்கள்!".முதலாவது, "அட! இதைப் பாருங்கள்!".

521. மின் விசிறியில் படும் எதுவும் சரி சமமாக விநியோகிக்கப்படுவதில்லை.

522. ஒரு பழமொழியானது எதைச் சொல்கிறதோ அதை அப்படியே மாற்றிச் சொல்லும் பழமொழியும் இருக்கத் தான் செய்யும்.

523. ஒரு கூட்டத்தில் அறிவாளிகள் சீக்கிரம் தமது பேச்சை முடித்துக் கொள்வார்கள்.

524. எது சரியாக ஆரம்பிக்கப்படுகிறதோ அது தவறாக முடியும். எது தவறாக ஆரம்பிக்கப்படுகிறதோ அது மோசமாக முடியும்.

525. உங்களுக்கு ஒரு விஷயம் சுகமளிப்பதாகத் தெரிந்தால் அதைச் செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள்! (LIVEஐ மாற்றிப் போட்டால் EVIL!)

526. தொழில்நுட்பம் என்பது இருவரால் மட்டுமே கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. (1) நிர்வாகம்செய்பவர் - புரிந்து கொள்ளாதவர் (2) புரிந்து கொண்டவர் - நிர்வாகம் செய்யத் தெரியாதவர்.

527. ஒரு கட்சிக்காரர் தேர்தல் நேரத்தில் இழுத்துப் போட்டுக் கொண்டு பார்க்கும் வேலைக்கும்,அந்த வெற்றியால் அவருக்குக் கிடைக்கும் தனிப்பட்ட வருமானமும் நேர் விகிதத்திலேயே இருக்கும்.

528. அடுத்தவருக்கு நீங்கள் அவசரமாக இருப்பதாகத் தெரிந்தால் அந்த வேலை நடக்காது.

529. சும்மா இருக்கும் ஒரு விஷயத்தைத் தேவையில்லாமல் சீண்டாதீர்கள்.

530. கண்டிப்பாக ஒரு முடிவை எடுத்தாக வேண்டியிருந்தால் அதைத் தள்ளிப் போடுங்கள்.

531. இன்னொருவரை உங்களால் நியமிக்க முடிந்தால் முடிவெடுக்கும் பொறுப்பை அவரிடம் விடுங்கள்.

532. ஒரு கமிட்டியை நியமிக்க முடிந்தால் முடிவெடுப்பதை அதனிடம் விட்டு விடுங்கள்.

533. செய்தியாளர்களிடம் பேசுகையில் கீழ்க்கண்ட மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள்
(1) எனக்குத் தெரியும். அதைச் சொல்லப் போகிறேன்.
(2) எனக்குத் தெரியும், ஆனால் சொல்ல மாட்டேன்.
(3) எனக்குத் தெரியாது.

534. முன்னேற்றம் கீழிருந்து தான் வரும்.

535. நீங்கள் தொலைக்காட்சித் தொடரை ஒரு நாள் பார்த்திருந்து மீண்டும் மற்றொரு நாள் அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தால் அது மறு ஒளிபரப்பாகவே இருக்கும்.

536. ஒரு இடத்தில் உங்கள் அருகில் உட்கார்ந்து ஒருவர் பேசும் சத்தமும் அந்தப் பேச்சில் இருக்கும் நல்ல விஷயங்களும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

537. மறைக்கப்படும் தவறுகள் எப்போதும் மறைக்கப்பட்டே இருப்பதில்லை.

538. உங்களிடம் ஒரு பொருள் வெகு நாட்கள் இருந்தால் அது தூக்கி எறியப்பட வேண்டியதாகவே இருக்கும்.

539. அப்படி நீங்கள் தூக்கி எறிந்த நேரத்தில் இருந்து அதன் தேவை ஆரம்பிக்கும்!

540. 'போதும்' எப்போதுமே போதுமில்லை.

541. பிறந்த நாள் விழாக்கள் பெரும்பாலும் கண்ணீரிலேயே முடிவுறும்.

542. நீங்கள் அயர்ந்து போய் எப்போது வீட்டுக்குப் போனாலும் அங்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பு தான் குழந்தைகளுக்குள் சண்டை போட்டுக் கொண்டு அழுது கொண்டிருப்பார்கள்.

543. ஒரு நிர்வாகத்தில் மேலாளர் பணியாளரைக் கட்டுப்படுத்துவதை விட பணியாளர் மேலாளரைக் கட்டுப்படுத்துவதே அதிகம் நடைபெறும்.

544. ஒரு ஆலோசகரிடம் போய் நேரம் என்ன என்று நீங்கள் கேட்டால் உங்கள் கடிகாரத்தைப் பார்த்தே பதில் சொல்வார்!

545. தொலைந்த பொருளைக் கண்டுபிடிக்க எளிதான வழி அதற்கு மாற்றை வாங்குவதாகும்.

546. மிக விலை உயர்ந்த உடையக் கூடிய பொருள் மட்டுமே உங்கள் கைகளில் இருந்து தவறி விழும்.

547. செருப்பில்லாத கால்களுக்கு ஊசியாக இருக்கும் இரும்புப் பொருட்களை ஈர்க்கும் காந்தத் தன்மை உண்டு. அதுவும் துருப்பிடித்திருக்க வேண்டும். இருட்டாகவும் இருக்க வேண்டும்.

548. அவசரகதியில் எடுக்கவேண்டியிருக்கும் முடிவுக்காக சில தீர்வுகளை முன்வைத்தால் பெரும்பாலான மக்கள் மோசமானதையே தேர்ந்தெடுப்பர். உதாரணம் - தேர்தல்.

549. மக்களில் நான்கு வகை உண்டு (1) பேசாதவர்கள், செய்யாதவர்கள் (2) பேசாதவர்கள் செய்பவர்கள் (3) செய்பவர்கள் (4) செய்வதைப் பற்றி பேசுபவர்கள்.

550. உங்களின் யூகங்கள் வரிசையாக மூன்று முறை நடைபெற்றுவிட்டால் நீங்களும் மேதை தான்.

551. திசை காட்டியில் 32 அளவைகள் இருப்பதும் உண்மை தான். இது 32 கோணங்கள் இருப்பதை உறுதி செய்தாலும், ஒரு கரண்டியை வைத்து தக்காளியையோ, திராட்சையையோ அழுத்தினால் சாறு உங்கள் கண்களில் தான் சரியாக பீச்சியடிக்கும்.

552. சோம்பேறித்தனம் தான் 10ல் 9 கண்டுபிடிப்புகளின் காரண கர்த்தாவாகும்.

553. மீதி இருக்கும் அந்த ஒரு கண்டுபிடிப்பும் சோம்பேறித்தனமாக இருக்கும் போது கண்டுபிடித்ததாக இருக்கும்.

554. தொலைக்காட்சியில் எந்தக் காட்சியை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்து உருகி உருகி இயக்குநர் எடுத்துள்ளாரோ அப்போது தான் அனைவரும் ஏதாவது கொறித்துக் கொண்டே அந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

555. சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளை வயோதிகர்கள் தான் விரும்பிப் பார்ப்பார்கள்.

556. வயோதிகர்களின் நிகழ்ச்சிகளை சிறுவர்களுக்குத் தெரியாமல் வயோதிகர்களும்,வயோதிகர்களுக்குத் தெரியாமல் சிறுவர்களும் விரும்பிப் பார்ப்பார்கள்.

557. எந்த ஒரு விசயம் தவறாக நடந்து கொண்டிருந்தாலும் நாம் பார்க்கும் போது சரியாகவே நமக்குத் தோன்றும்.

558. ஒரு கடிகாரம் மட்டும் வைத்திருக்கும் மனிதன் சரியான நேரத்தை அறிந்து கொள்வான்.

559. ஒரு தேர்வுத் தாளைத் திருத்தும் ஆசிரியருக்கு முதலில் திருத்தப்பட்ட தாளையே அனைவரும் பார்த்து எழுதியது போலவே தான் தோன்றும்.

560. தரத்தில் உயர்ந்த ஒரு பொருளைத் தயாரிக்க உங்களுக்கு முதலில் தரமற்ற பொருளைத் தயாரித்தல் எப்படி என்பது தெரிந்திருக்க வேண்டும்.

561. எந்தப் பிரச்னைக்கும் காரணகர்த்தாவே அதன் தீர்வு தான்.

562. ஒரு அரசியல்வாதியின் வளர்ச்சியும் அவர் தனது கொள்கையில் வைத்திருக்கும் பிடிப்பும் எப்போதும் எதிர்விகிதத்திலேயே இருக்கும்.

563. ஒரு திரைப்படத்திற்குத் தரப்படும் விளம்பரமும் அத்திரைப்படத்தின் தரமும் எப்பொதும் எதிர்விகிதத்திலேயே இருக்கும்.

564. முக்கியமான கோப்பை சேமித்துக் கொண்டிருக்கும் போது தான் உங்கள் மடிக்கணிணியின் மின்கலன் தன் சேமிப்பை இழந்திருக்கும்.

565. நீங்கள் எதில் மக்கு என்பதைத் தெரிந்து வைத்திருப்பது பாதி புத்திசாலித்தனமாகும்.

566. சிறிதளவு முட்டாள்தனமே போதுமானது. கடைசி வரை முட்டாளாக இருப்பதற்கு.

567. சர்வ உண்மை என்று எதுவுமே கிடையாது - இதுவே சர்வ உண்மை.

568. இயற்கை விதிகளை நாம் அறிந்து கொண்டு விட்டதால் நாம் அதற்கு அடிமை அல்ல என்றாகிவிட முடியாது.

569. சேர்த்து ஒட்டி வைத்த எதுவுமே எப்போதாவது பிரிந்து விழத் தான் செய்யும்.

570. உங்கள் எதிரிகள் நீங்கள் என்ன செய்யக் கூடாது என்று நினைக்கிறார்களோ அதை மட்டும் செய்து கொண்டே இருங்கள்.

571. எப்போதுமே "என்னிடம் அந்தப் பொருள் இல்லை என்று கூறாதீர்கள்". "நேற்று தான் விற்று முடித்தேன்", என்று கூறுங்கள்.

572. 10 வார்த்தைகள் இருந்தால் போதும் என்னும் இடத்தில் ஒரு வார்த்தை கூட இடாதீர்கள்.

573. ஒரு விஷயம் புரிந்து விட்டால் அது இன்னும் முழுமையாக உங்களுக்குப் புலப்படவில்லை என்று அர்த்தம்.

574. எதையும் நீங்கள் முதல் ஆளாகச் செய்யாதீர்கள்.

575. எது உங்களுக்கு மிகவும் அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படுகிறதோ அது பற்றாக்குறையாகவே இருக்கும்.

576. காதல் சொர்க்கம் போன்றது தான். ஆனால் அது தரும் அவஸ்தை நரகம் போன்றதாக இருக்கும்.

577. ஒரு மனிதன் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து ஒரு பிரச்னைக்கு தீர்வு ஒன்றைக் கண்டுபிடித்தால், அந்தப் பிரச்னைக்கு அதை விட எளிமையான தீர்வு அவனைத் தவிர அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

578. துரதிருஷ்டம் தனியாக வருவதில்லை.

579. ஒரு வேலையின் கடினத் தன்மையும் அதற்குத் தரப்படும் கூலியும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

580. எந்த ஒரு ஆட்சிக்கும் எதிர்க்கட்சியினர் இருப்பார்கள்.

581. எந்த ஒரு தோல்வியின் அளவும், உங்களுக்கு வெற்றி எந்த அளவு அவசியம் என்பதிலும்,நீங்கள் அதற்காக எவ்வளவு உழைத்துள்ளீர்கள் என்பதிலும் இருக்கிறது.

582. உங்கள் மேஜையிலிருந்து விழுந்து விட்ட ஒரு நுண்ணிய பொருள் உங்களுக்கு கைக்கு கிடைக்காமலிருப்பது அதன் முக்கியத்துவத்தையும், அதன் விலையையும் பொருத்தது.

மேலாளராவதற்கு உண்டான 8 தகுதிகள்:


583. எப்போதும் தம்மை முக்கியமானவராகக் கருதவேண்டும்.

584. முக்கியமான மனிதர்களுடன் உங்களை அடிக்கடி காண முடிய வேண்டும்.

585. அதிகாரத்துடன் பேச வேண்டும். தகுந்த ஆதாரம் காட்டப்பட்டால் படத்தைக் கீழே போடவும் தெரிந்திருக்க வேண்டும்.

586. விவாதத்தில் எப்போதும் கலந்து கொள்ளக் கூடாது. அவ்வாறு கலந்து கொள்வதாயிருந்தால் சாவதானமாக அமர்ந்து கொண்டு அந்த விவாதத்துக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வியைக் கேட்டு வைக்க வேண்டும்.

587. உங்களுக்குக் கிழே உள்ளவர் உங்களை மாட்டும்படி ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தால் அவரை ஒரு எறும்பைப் பார்ப்பது போல் பார்க்க வேண்டும். அவர் தமது தலையைத் தாழ்த்தும் போது அவர் கேட்ட கேள்வியை அப்படியே சொற்களை மட்டும் மாற்றி கேள்வி கேட்கத் தெரிந்திருக்க வேண்டும்.

588. அலுவலகத்தை விட்டு வெளியே செல்கையில் புயல் போல செல்ல வேண்டும். அப்போது தான் யாருக்கும் எந்தக் கேள்வியும் உங்களைக் கேட்க இயலாது.

589. உங்கள் அறைக் கதவு எப்போதும் பூட்டப்பட்டே இருக்க வேண்டும்.

590. எந்த உத்தரவும் வாய் மொழியாய் இருக்க வேண்டுமே ஒழிய தவறியும் கைப்பட எழுதி விடாதீர்கள்.

591. அரசாங்கத்தின் அனைத்து புள்ளியியல் விபரங்களும் பாமரர்களிடமிருந்து பெறப்பட்டது.

592. நீங்கள் போக வேண்டிய ஊர் எப்போதுமே தூரத்தில் தான் இருக்கும்.

593. உங்கள் கார் சாவியை உள்ளே வைத்து தவறுதலாக பூட்டிய பிறகு தான் மாற்று சாவி வைத்திருக்கும் வீட்டின் சாவியும் காருக்குள்ளேயே இருப்பது தெரிய வரும்.

594. மரணம் தான் இறுதியானது. இறுதி எப்போதுமே நேர்த்தியானது. எதற்குமே இறுதி என்பதே கிடையாது. எதுவுமே நேர்த்தியானது கிடையாது.

595. அனுமதி வாங்குவதை விட மன்னிப்பு வாங்குவது எளிது.

596. எது எளிதாக தெரிகிறதோ அது கடினமானதாகும். எது கடினமாக தெரிகிறதோ அதைச் செய்யவே முடியாது.

597. மூடநம்பிக்கை கொள்வது துரதிருஷ்டம் உடையது.

598. பணம் இருக்கும் இடத்துக்கு செல்லுங்கள்.

599. யார் அதிக இரைச்சலுடன் கத்துகிறார்களோ அவர்களுக்கு தான் பதவி சொந்தம்.

600. உள்ளே நுழையும் முன் எவ்வளவு செலவாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மர்பி விதிகள் - 601 - 700
601. ஒரு கல்வி நிலையத்தின் தரத்திற்கும் அங்கு வசூலிக்கப்படும் கட்டணத்துக்கும் நேரடித் தொடர்பே கிடையாது.

602. நீங்கள் ஜெயிப்பதற்கான தகவு 1 ஆக இல்லையென்றால் அது நிச்சயம் 0 க்கு அருகிலேயே இருக்கும்.

603. நீங்கள் ஒரு விசயத்தைத் தவறு என்று நினைத்தால் அது தவறாகவே இருக்கும்.

604. நீங்கள் ஒரு விசயத்தைத் தவறு என்று நினைத்தால் நீங்கள் சரியாகத் தான் நினைத்திருக்கிறீர்கள்!

605. உங்களை நோக்கி ஒருவர் உங்களுக்கு நல்லது செய்வதற்காக வருகிறேன் என்று வந்தால் உயிருக்குப் பயந்து ஓடுவது போல் ஓடுங்கள்.

606. முட்டாள்கள் சட்டம் போடுகிறார்கள். முட்டாள்கள் மட்டும் தானே கடைப் பிடிக்க வேண்டும்.

607. சுய விமரிசனம் சரியாகவே இருக்கும். சுய பாராட்டு தவறாகவே இருக்கும்.

608. யாரொருவர் ஓட்டலில் டிப்ஸ் அதிகம் எதிர்பார்க்கிறாரோ அந்த சர்வர் தான் இருப்பதிலேயே மோசமாக பரிமாறுவார்.

609. மிகச் சரியாக திட்டமிடப்பட்ட ஒரு இயந்திரத்தில் குறைந்த தகவே உடைய இரண்டு எதிர்பாராத நிகழ்ச்சிகள் எதிர்பாராத நேரத்தில் ஒரே சமயத்தில் நடைபெற்று அந்த இயந்திரம் பழுது ஏற்பட வாய்ப்பாகிறது.

610. மேலாளரைப் பொருத்தவரை சாத்தியமில்லாதது என்று எதுவுமே கிடையாது அவர் செய்து பார்க்கும் வரை.

611. சமயங்களில் மோசமான முடிவை எடுப்பதை விட சும்மா இருப்பதே மேல்.

612. சமயங்களில் சும்மா இருப்பதை விட மோசமான முடிவை எடுப்பதே மேல்.

613. போர் நடக்கும் சமயத்தில் ஒரு ஆயுதம் பயன்படும் அளவும், அந்த ஆயுதத்தால் உங்களுக்கு ஏற்படும் தேவையும் எதிர்விகிதத்திலேயே இருக்கும். (எ.கா. கர்ணனின் கையில் நாகாஸ்திரம்)

614. வெற்றியின் தகவு நீங்கள் எவ்வளவு தூரம் சாகக் கூட தயாராக இருக்கிறீர்கள் என்பதை வைத்தே அமையும்.

615. ஒரு வேலையில் தவறின் அளவு அதைச் செய்தவர்களின் எண்ணிக்கையை அந்த எண்ணிக்கையாலேயே பெருக்கி வரும் அளவுக்கு சமமாக இருக்கும்.

616. யார் அதி வேகமாகச் செல்கிறார்களோ அவர்கள் தனியாகவே பயணிப்பார்கள். அங்கு சென்றால் அவர் தான் முதல் ஆளாக இருப்பார்.

617. நீங்கள் தங்கியிருக்கும் விடுதி எவ்வளவு பெரிய விடுதியாக இருந்தாலும் அதிகாலை 4மணிக்கு கிளம்பும் வாகனங்கள் உங்கள் சாளரத்திற்கு அருகிலேயே நிறுத்தப்பட்டிருக்கும்.

618. உங்களால் அவர்களைத் திருப்திப்படுத்த முடியவில்லையா? அவர்களுக்குள் குழப்பத்தை உண்டாக்கி விடுங்கள்.

619. தொழில்கள் அனைத்தும் பொருளாதார வெற்றிடத்தை நோக்கியே ஈர்க்கப் பெறும்.

620. அனைவருக்கும் பொதுவானதாக சொல்லப்படும் தீர்க்கதரிசனங்கள் அவ்வாறில்லாமல் மாறித் தான் நடைபெறும்.

621. ஒரு கூட்டத்தில் உணவின் சுவையும், அக்கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சின் சுவையும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

622. ஒரு கூட்டத்தில் உணவின் சுவையும், அதை ருசிக்கும் ஆட்களின் எண்ணிக்கையும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

623. நீங்கள் உங்கள் வாகனத்தினைக் கழுவி முடித்தவுடன் மழை வந்து நன்றாகக் கழுவி விடும்.

624. அதற்காக மழை வரவேண்டி வாகனத்தைக் கழுவினால் அன்று மழையே வராது.

625. ஒரு விசயம் நடைபெற்றால் அது சாத்தியமே.

626. நீங்கள் நல்லது சொன்னால் நடக்கவும் செய்யலாம், நடக்காமலும் போகலாம். கெட்டது சொன்னால் கண்டிப்பாக நடந்தே தீரும்.

627. எந்த ஒரு நிர்வாகத்திலும் வேலை கீழ்மட்டத்தை நோக்கியே செல்லும்.

628. நீங்கள் விரும்பும் எல்லாப் பொருட்களும் உங்கள் வசம் ஏற்கனவே இருந்தால் வாழ்வில் எப்படி சுவாரசியம் இருக்கும்?

629. எந்த ஒரு மாபெரும் திட்டமும், திட்டத்துக்கு ஆகும் காலத்திலும் பணத்திலும் இரண்டு மடங்கு எடுப்பதோடு நின்று விடாது. அதில் கிடைக்கும் பலன் பாதி தான் இருக்கும்.

630. ஒரு பொருள் அடிக்கடி உடைய வேண்டுமானால் அது கிடைக்காத பொருளாக இருக்கவேண்டும்.

631. தற்போதுள்ள காகிதமில்லா அலுவலக யுகத்தில் அதிகம் சம்பாதிப்பவர்கள் கணிணிக்குரிய அச்சுத் தாள்கள் விற்பவர்களே.

632. ஒரு மனிதனுக்கு எது மோசமோ அதுவே மற்றொருவனுக்கு அம்சம்.

633. 12 கோமாளிகளுக்கு நடுவில் இருந்து நீங்கள் இராமாயணம் வாசித்தாலும் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நீங்கள் 13வது கோமாளி தான்.

634. நல்ல மனிதர்களுடன் பழகினால் அவர்கள் நல்ல பழக்கங்கள் உங்களுக்கு வரும். ஆனால் பணக்காரர்களுடன் பழகினால் உங்கள் பணம் தான் அவர்களுக்கு செல்லும்.

635. நீங்கள் ஏற்கனவே ஒரு துளைக்குள் இருந்தால், தோண்டுவதால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை.

636. யானைக்கு ஞாபக சக்தி அதிகம் தான். ஆனால் அப்படி எதை அது ஞாபகம் வைத்துக் கொள்ளப் போகிறது?

637. அலை வரும். அலை போகும். உங்களுக்கு அதனால் என்ன கிடைக்கிறது?

638. ஒரு ஊர்வலத்தில் மேளம் இருக்கலாம் அல்லது குதிரை இருக்கலாம். இரண்டும் இருக்கக் கூடாது.

639. ஒரு வேலைக்கு ஆகும் நேரத்தைக் கணிக்க கீழ்க்கண்ட சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்.வேலை செய்யும் நேரம் X 2. வரும் விடைக்கு உள்ள அளவையின் அடுத்த அதிக அளவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் 1 மணி நேரத்தில் செய்யும் வேலையை 2 நாட்களில் செய்யலாம் என்னும் விடை வரும்.

640. மக்களை ஒரு விசயத்தை நம்ப வைக்க வேண்டுமானால் அதை கிசுகிசுப்பாக சொன்னால் போதும்.

641. ஒரு கெட்ட செய்தியை எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாகவும் விளக்கமாகவும் சொல்கிறோமோ அவ்வளவு நல்லது.

642. இதயத்தைத் தளரவிடாதீர்கள். அதை வெட்டுவதற்கு ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.

643. முக்கியமான ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் கூர்மையாக ஆராய்ச்சி செய்வார்கள் தாங்கள் எதை ஆராய்ச்சி செய்கிறோம் என்பது கூட தெரியாத அளவுக்கு.

644. ஒரு பெரிய ஆராய்ச்சியை நிர்வாகம் செய்யும் நடத்துநருக்கு அந்த ஆராய்ச்சி பற்றிய சின்ன சின்ன விஷயங்கள் தெரிந்திருக்கக் கூடாது.

645. அரசாங்கத்தின் வருமானத்திற்கேற்ப செலவும் உயரும். அதை விடச் சிறிது அதிகமாகவும்.

646. ஒரு அரசாங்கத்தைப் பற்றி அறிய அதன் அரசியல் சாசனத்தைப் படித்தால் ஆகாது.தலைநகரத்தின் தொலைபேசி எண்களின் பட்டியலில் "தேசிய" என்று ஆரம்பிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் போதும்.

647. லாட்டரிச் சீட்டு வாங்காமலே அதிர்ஷ்டம் வராது.

648. பொதுமக்கள் என்போர் யாரெனின் செய்தித் தாள்களில் பெயர் வராதவர்கள் ஆவர்.

649. வேறு ஏதாவதைப் பிடிக்கும் வரை இருக்கும் பிடியை விட்டுவிடக் கூடாது.

650. எந்த ஒரு முடிவும் நால்வருக்குள் மட்டுமே எடுக்கப்படும். நீங்கள் ஒரு மாபெரும் கூட்டத்தில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டதாக நினைத்தால் அதுவும் கூட்டம் தொடங்குவதற்கு முன்னமே நால்வருக்குள் எடுக்கப்பட்ட முடிவாகத்தான் இருக்கும்; அல்லது கூட்டம் முடிந்த பின் நால்வருக்குள் கூடிப் பேசி தீர்மானம் மாற்றப்படும்.

651. சரித்திரத்தை அறியாதவர்கள் அதில் உள்ள தவறுகளைத் திரும்பச் செய்வார்கள்.அறிந்தவர்களோ, புது விதமான தவறுகளைச் செய்து அதை சரித்திரமாக்குவார்கள்.

652. உடனடியாக செய்யக் கூடிய வேலை எதுவுமே சின்ன வேலை தான். அதைச் செய்யாமல் விட்டால் தான் அது பெரிய வேலையாக மாறும்.

653. நீங்கள் தற்போது நிற்கும் இடம் தான் தொடங்குவதற்கு தோதான இடம் ஆகும்.

654. உங்களால் அவர்களை அடிக்க முடியாவிட்டால் அவர்களுடன் சேர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

655. ஆண்கள் செய்யும் ஒரு வேலையில் பாதியைத் தான் பெண்களால் இரண்டு மடங்கு கஷ்டப்பட்டு செய்ய இயலும். ஆனால் அது பெண்களால் எளிதில் முடியும் என்பது தான் பிரச்னையே!

656. ஒரு திட்டம் தீட்டப் படும் போது எவ்வளவு மோசமாக தீட்டப் படுகிறதோ அவ்வளவு எளிதாக அதை நிறைவேற்ற இயலும்.

657. முடியக் கூடிய எதுவுமே நல்லது தான்.

658. நீங்கள் சேமித்த ஒரு பைசா ஒரு பைசா தான்.

659. எதையுமே முடிக்காமல் விடாதீர்க

660. நாளை மறுநாள் வரை தள்ளிப்போடக் கூடிய வேலையை நாளைக்கே செய்யாதீர்கள்.

661. இப்போதே தள்ளிப் போடுங்கள்! நாளை என்பது மிகவும் தாமதமாகி விடும்.

662. இப்போது தான் வேலையைப் பிறகு செய்யலாம் என முடிவு செய்யும் காலமாகும்.

663. உங்களால் முதல் முயற்சியிலேயே முடியவில்லை என்றால் எதற்கு மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்?

664. ஒரு விதி அதன் விளக்கத்தை விட எளிதில் புரியக் கூடியதாக இருக்கும்.

665. எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு வேலையை நீங்கள் செய்தாலும், நிர்வாகத்தின் பார்வைக்கு இன்னும் கொஞ்சம் நீங்கள் கஷ்டப்பட்டிருக்கலாம் என்றே தோன்றும்.

666. நீங்கள் செய்யாமல் விட்ட அந்த வேலை மட்டுமே மிக முக்கியமானது.

667. எந்த ஒரு சோதனையையுமே வெற்றிகரமாக மீண்டுமொரு முறை நிகழ்த்த இயலாது.

668. ஒரு பொருளை அதை விடச் சிறிய இடத்திற்குள் உங்களால் செலுத்த முடியவில்லையென்றாலும் ஒரு மேதாவி அதையும் செய்து விடுவான்!

669. பச்சையாக இருந்து ஆட முடியுமென்றால் - தாவர இயல், சுருங்க முடியுமென்றால் -வேதியியல், வேலை பார்க்க வில்லை என்றால் - இயற்பியல்!

670. அனைத்து கண்டுபிடிப்புகளுமே தவறுதலாக கண்டுபிடித்தவைகளாகவே இருக்கும்.

671. ஆராய்ச்சிக்கான பணம் உங்களுக்கு எவ்வளவு வழங்கப்பட்டிருக்கிறதோ அவ்வளவுக்கு மேற்படி தவறு நடைபெறாது!

672. வேலை நடக்கிறதோ இல்லையோ, நிர்வாகச் செலவு மட்டும் உயர்ந்து கொண்டே செல்லும்.

673. ஒரு வேலையை நீங்கள் சரியாக செய்து கொண்டிருந்தால் அது யார் கண்களிலும் படாது.

674. வேலைக்குத் தகுதியான ஆட்கள் எப்போதுமே இறந்த காலத்தில் தான் இருந்திருப்பார்கள்.

675. ஒரு கூட்டத்தின் வெற்றிக்கும் அங்கு போடப்பட்ட விருந்திற்கும் நேரடி தொடர்புண்டு.

676. உங்களிடம் சில்லறை இல்லையென்றால் நடத்துனரிடம் மட்டும் எப்படி இருக்கும்?

677. நீங்கள் இரவில் தூங்கி காலையில் எப்போது எழுந்து பார்த்தாலும் 6 மணி போலவே தான் இருக்கும்.

678. ஒவ்வொருவரும் தனக்கு அழகான, அறிவான, பணக்கார, சிக்கனமறிந்த, குறிப்பறிந்து செயல்படும், நன்றாகச் சமைக்கக் கூடிய மனைவி தான் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.ஆனால், அந்தோ பரிதாபம், சட்டம் ஒரு மனைவிக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.

679. உங்கள் பழுதான பழைய காரை ஓட வைக்கும் ஒரே வழி புது காரின் விலையை விசாரிப்பது தான்.

680. இருவரை நல்ல நண்பர்களாக இருக்க வைப்பது எதுவென்றால் இருவரும் பரஸ்பரம் மறைத்துக் கொண்ட விஷயங்கள் தான்.

681. காதல் என்பது ஒரு வேதியியல் அதனால் தான் திருமணம் முடிந்ததும் வேதிப் பொருள் கழிவைப் போல் ஒருவர் மற்றவர்களை நடத்துகிறார்கள்.

682. எப்படியாவது திருமணம் செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி வாய்த்தால் நன்றாக வாழலாம். இல்லையென்றால் தத்துவமேதையாகலாம்.

683. திருமணம் என்பது இருவர் ஒருவர் ஆவது. பிரச்னை யார் அந்த ஒருவர் என்பது தான்.

684. திருமணம் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறது. இடியும் மின்னலும் கூட அங்கு தான் நிச்சயிக்கப்படுகிறது!

685. உங்கள் மனைவி நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் தூங்கும் போது அதை உளறிப் பாருங்கள்!

686. நீங்கள் ஒரு வேலையைச் செய்து முடித்ததும் அதற்கு முன்னர் வேறொரு வேலை முடித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும்.

687. எந்த ஒரு நல்ல எண்ணமும் தண்டிக்கப்படாமல் இருந்ததில்லை.

688. யார் தயங்குகிறார்களோ அவரே கடைசி.

689. ரகசிய வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் செய்திகளே நம்பத் தகுந்தவை.

690. எதுவுமே சரியான காரணங்களுக்காகச் செய்யப்படுவதில்லை.

691. வெளியே தட்பவெப்பநிலை எவ்வளவு மோசமாக இருக்கிறதோ அவ்வளவு நீங்கள் வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

692. ஜாதகத்தில் உங்கள் நேரம் மட்டும் எப்போதுமே சரியில்லாமல் இருக்கும்.

693. ஒரு நம்பிக்கையின் கரடு முரட்டுத் தனமும், அதன் வெற்றியும் நேர் விகிதத்திலேயே இருக்கும்.

694. எல்லா மக்களுமே இறந்தவுடன் சமம் தான்.

695. யாருமே ஒரு விஷயத்தை விரும்பவில்லையா, அது உடனே கவனிக்கப் படவேண்டியது.அனைவருமே ஒரு விஷயத்தை விரும்புகிறார்களா, அது உடனே கவனிக்கப் படவேண்டியது.

696. யார் வேண்டுமானாலும் அந்த வேலையைச் செய்ய இயலும். ஆனால் அப்போது அவருக்கு அந்த வேலை தரப்பட்டிருக்கக் கூடாது.

697. வயதாக ஆக தொப்பையைத் தவிர எதுவும் முன்னேறுவதில்லை.

698. எந்த ஒரு வீடாக இருந்தாலும் குப்பைகள் இருக்கும் இடத்துக்குத் தகுந்தவாறு பெருகிக் கொள்ளும்.

699. ஒரு பாத்திரத்திலுள்ளவற்றைக் கொட்டி விட்டால் அதை எடுக்க அதை விட பெரிய பாத்திரம் தேவைப்படும்.

700. அழகான இளவரசன் கிடைப்பதற்கு முன் நிறையத் தவளைகளுக்கு முத்தமிட்டிருக்க வேண்டும்.
மர்பி விதிகள் - 701 - 800
701. கூரையில் ஓட்டை இருக்கிறது என்று கீழே பாத்திரம் வைத்தால் ஒரு சொட்டு கூட அதில் ஒழுகாது.

702. உண்மையை நான் கண்டறிந்து கொண்டேன். ஆனால் அது யாருக்கும் பிடிக்காது.

703. ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இயந்திரத்தைக் கழட்டி மீண்டும் மாட்டினால், ஒரே ஒரு பாகம் மட்டும் எதிலும் மாட்ட முடியாமல் மீதி இருக்கும். இயந்திரமும் ஓடாது.

704. காதல் என்பது அறிவுக்கும் கற்பனைக்கும் நடைபெற்ற பந்தயத்தில் கற்பனை வெற்றி பெற்றவுடன் வருவதாகும்.

705. எந்த ஒரு இயந்திரத்திற்கும் நீங்கள் அவசரமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளாதீர்கள்!

706. எந்த ஒரு சிறிய பிரச்னைக்குள்ளும் ஒரு பெரிய பிரச்னை வெளியே வரத் துடித்துக் கொண்டிருக்கும்.

707. எந்த ஒரு பெண்ணும் தான் அடையப் போகும் ஆணைப் பற்றியே நினைப்பாள். ஆணோ,தன்னால் அடைய முடியாதவளைப் பற்றி.

708. நீங்கள் சேகரிக்கும் தகவல் உங்கள் ஆராய்ச்சிக்கும், எண்ணத்திற்கும் புறம்பாக இருந்தால் அது நிராகரிக்கப்படவேண்டியதாகும்.

709. நீதி எப்போதும் நிலைக்கும். 3/7 சமயங்களில்.

710. ஒரு மென்பொருள் சரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், கண்டுபிடிக்க முடியாத தவறுகள் இருக்கிறது என்று அர்த்தம்.

711. ஒரு மென்பொருள் சரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அதற்கு அடுத்த பதிப்பு வெளிவந்து விட்டது என்று அர்த்தம்.

712. எந்த ஒரு வன்பொருள் தயாரிப்பாளர் தனது உத்திரவாதத்தில் எர்த் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரோ, அந்த வன்பொருள் இரண்டு வயர்களை மட்டுமே கொண்டிருக்கும்.

713. வியாபாரத்தின் மூன்று மறக்கக் கூடாத விதிகள் (1) உங்களால் ஜெயிக்க முடியாது. (2)உங்களால் நஷ்டத்தைத் தவிர்க்க இயலாது. (3) உங்களால் வெளியேறவும் முடியாது.

714. பின் விளைவு இல்லாத மருந்தே கிடையாது.

715. எது தேவையில்லையோ அது தாராளமாகவே கிடைக்கும்.

716. வரைபடத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை கட்டிடம் கட்ட தொடங்கிய பின்னரே ஏற்படும்.

717. தயங்கித் தயங்கி ஒரு காதல் கடிதத்தைத் தபாலில் அனுப்பினால், அது தாமதமாகி, நீங்கள் நேரடியாகக் கேட்டு அவமானப்பட்ட பின்னரே காதலியிடம் கிடைக்கும்.

718. எந்த ஒரு இயந்திரத்தையும் குடைந்து கொண்டே இருந்தால் ஓட ஆரம்பித்து விடும்.

719. எந்த ஒரு இயந்திரத்தையும் குடைந்து கொண்டே இருந்தால் அது உடைந்தும் விடும்.

720. கஷ்டப்படும் ஒருவனுக்கு உதவி செய்யுங்கள். அப்போது தான் அவன் மீண்டும் கஷ்டம் வரும் போது உங்களைத் தேடி வருவான்.

721. தட்டச்சு இயந்திரத்தில் ஒரே நேரத்தில் தவறி இரண்டு பொத்தான்களை அழுத்தினால், எந்த எழுத்து உங்களுக்குத் தேவையில்லையோ அது தான் விழும்/

722. அந்த தவறான எழுத்தினால் மொத்த வார்த்தையின் பொருளே மாறி விடும்.

723. ஒரு தடிமனான மனிதர் ஒல்லியான மனிதரை விட அதிகமான சோப்பை உபயோகிப்பார்.

724. முட்டாள்கள் எப்போதுமே முந்திரிக் கொட்டைகளாக இருப்பார்கள். மற்ற முட்டாள்கள் இருந்த இடத்தைச் சென்றடைவதற்கு.

725. ஒரு பிரச்னையைக் கூர்ந்து கவனித்தால், அந்தப் பிரச்னையில் நீங்களும் ஒரு அங்கம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

726. புரிந்தவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை

727. புரியாதவர்களுக்கு சொன்னாலும் புரியாது.

728. ஒரு நிமிடத்தின் அவசியம் நீங்கள் கழிவறைக் கதவின் எந்தப் பக்கம் நிற்கின்றீர்கள் என்பதில் இருக்கிறது.

729. தேவையின் அவசியத்தை ஆராய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தேவை தானாகவே மறைந்து போகும்.

730. அறிவியல் உண்மையானது. தகவல்கள் பொய்யானவை.

731. கீழ்க்கண்ட நேரங்களில் எல்லாம் நீங்கள் ஒரு அழகான பெண்ணைச் சந்திக்கலாம். (1) உங்கள் காதலியுடன் இருக்கும் போது. (2) உங்கள் மனைவியுடன் இருக்கும் போது. (3) உங்களை விட பணக்கார, அழகிய நண்பனுடன் நீங்கள் இருக்கும் போது.

732. ஒரு மென்பொருளைத் தவறாக எழுதுவதற்குக் கஷ்டமான ஒரு மொழி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டுபிடிக்கவும் முடியாது.

733. அனைத்துமே சார்ந்திருக்கிறது.

734. எந்த ஒரு செயலுக்கும் சமமான எதிர் விமரிசனம் இருக்கும்.

735. ஒரு விஷயத்தை மறப்பதை இதனுடன் ஒப்பிடலாம். ...அட.....ம்... என்ன சொல்ல வந்தேன்?

736. ஆராய்ச்சிக் கூடத்திற்கு வெளியிலிருக்கும் வெளி உலகத்தை ஆராய்ச்சிக் கூடத்திற்குள் கொண்டு வரவே முடியாது.

737. இந்த செருப்பு அழகாக இருந்தால் கடிக்கும். சுகமாக இருந்தால் அசிங்கமாக இருக்கும்.

738. எல்லோரும் பொய் சொல்கிறார்கள். அதற்காக கவலைப் படவேண்டியதில்லை. யாரும் அதைக் கேட்பதில்லை.

739. மன்னியுங்கள். மறந்து விடாதீர்கள்!

740. ஒரு சிறு முட்டாள்தனம் அனைத்து பிரச்னைகளையும் உருவாக்கிவிடும்.

741. நட்பு முறை துப்பாக்கிச் சூடு நட்புடன் செய்யப்படுவதில்லை. (ராணுவத்தில்)

742. போர்க்களத்தில் நீங்கள் செல்லுமிடத்தில் எல்லாம் எதிரி இல்லையென்றால் நீங்கள் ஏற்கனவே கண்ணி வெடியின் மீது நிற்கின்றீர்கள் என்று அர்த்தம்.

743. போர்க்களத்தில் நீங்கள் முன்னேற முன்னேற உங்கள் துப்பாக்கியில் இருந்து செல்லும் குண்டு குறைந்த தூரத்திற்கே செல்லும்.

744. ஒரு நிர்வாகத்தில் உங்கள் இடத்திலேயே நீங்கள் இருக்க வேண்டுமானால் வேகமாக முன்னேறுபவர்களை வெளியேற்றுங்கள்.

745. ஒரு வேலையில் கணிணி மட்டும் ஈடுபடுத்தப் பட்டிருந்தால் எந்தத் தவறுக்கும் அந்தக் கணிணியே பொறுப்பு.

746. எந்த ஒரு பொருளும் சந்தைக்கு வரும் வரை சரியாக வேலை பார்க்கும்.

747. எந்த ஒரு கணிணி வன்பொருளின் ஒரு பாகமும் பழங்காலத்ததாகவும், ஒரு பாகம் எங்குமே கிடைக்காததாகவும், ஒரு பாகம் ஏற்கனவே ஆராய்ச்சியில் இருப்பதாகவும் இருக்கும்.

748. வரவை விட பரிசு மேல்.

749. உங்களுக்குப் புரியவில்லை என்றால் எளிதில் மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.

750. நாளை இப்போது இருப்பதை விட பாதி தான் மகிழ்ச்சி தருமென்றால், நீங்கள் நேற்றே இரண்டு மடங்கு மகிழ்ச்சியை அனுபவித்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

751. வண்டி வெகு வேகமாகப் போகும் போது வேகத்தடையைப் பற்றி கவலை கொள்ள வேண்டியது இல்லை.

752. உங்களுக்கு முன்னால் செல்லும் வண்டி எப்போதும் உங்களை விட மெதுவாகவே செல்லும்.

753. நீங்கள் செல்லும் இந்தப் பாதை 500 அடியுடன் முடிவடைந்து விடும்.

754. அந்த அறையில் அணையப் போகும் ஒரே ஒரு விளக்கு மட்டுமே இருக்கும்.

755. உங்களுக்கென ஒரு வேலை ஒதுக்கப்பட்டு அதை நீங்கள் செய்யாமல் விட்டால்உங்களுக்காக அதை யாரேனும் செய்து கொடுப்பார்கள். எனவே கவலை வேண்டாம்.

756. முடிவெடுக்கும் தருணத்தில் கையிலிருக்கும் தகவல்களும், முடிவின் முக்கியத்துவமும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

757. எந்த ஒரு விசயமும் குழம்பிக் கொள்ளாமல் இருக்கும் அளவுக்கு எளிதானது அல்ல.

758. எதுவும் வேலை செய்யாது.

759. நல்லவேளை மகிழ்ச்சியை பணத்தால் வாங்க முடியவில்லை. இல்லாவிட்டால் இதற்கும் டிவியில் விளம்பரம் வந்திருக்கும்.

760. பல்வலி சனிக்கிழமை இரவில் தான் வரும். ஞாயிறு இரவில் மறைந்து விடும்.

761. மொத்த வேலைக்காரர்களில் 10ல் ஒரு பங்கு ஆட்களே மூன்றில் ஒரு பங்கு வேலையைச் செய்வார்கள். அதற்காக ஆட்களை நீங்கள் அதிகரித்தால் சராசரி வேலைநேரம் அதிகமாகுமே தவிர வேலை அதிகமாக நடந்து விடாது.

762. எது அதிக நபர்களுக்கு அசௌகரியத்தை அளிக்கிறதோ அது கண்டிப்பாக நடந்தே தீரும்.

763. செலவு = வரவு + 1%

764. உற்பத்தி குறைவதால் நிரந்தரச் செலவுகள் குறைவதில்லை. ஆனால் உற்பத்தி அதிகரித்தால் நிரந்தரச் செலவும் அதே அளவு அதிகரிக்கும்.

765. யார் அதிகம் உற்பத்தி செய்கிறார்களோ அவர்களுக்கு குறைவாகவே கிடைக்கும்.

766. நீங்கள் கட்டியிருக்கும் டை புதிதாக இருந்தால் அது சூப் கோப்பையை தன் பக்கம் ஈர்க்கும்.

767. விதி விலக்குகள் விதிகளை விட அதிகமாகவே இருக்கும்.

768. அனுபவம் என்னும் ஆசிரியர் பரீட்சை வைத்த பின்னரே பாடம் சொல்லிக் கொடுப்பார்.

769. யார் தயங்குகிறாரோ அது நேர்மையான காரணத்துக்காகத் தான் இருக்கும்.

770. எந்த உடை அனைவருக்கும் பொருந்தும் என்று எழுதப்பட்டிருக்கிறதோ அது யாருக்குமே பொருந்தாது.

771. எது ரகசியமாக வைக்கப்பட வேண்டியிருக்குமோ அது ஜெராக்ஸ் இயந்திரத்திலேயே இருக்கும்.

772. வாழ்க்கையை பின்னோக்கியே புரிந்து கொள்ள முடியும். ஆனால், நீங்கள் முன்னோக்கியே வாழ வேண்டியிருக்கிறது.

773. நீங்கள் தவறு செய்யும் வரை யாருமே உங்களைக் கவனிப்பது இல்லை.

774. ஒரு குழந்தை போதுமானதில்லை. இரண்டு குழந்தைகளோ தேவைக்கும் மிக அதிகம்.

775. தரச்சான்றிதழ் தரத்திற்கு சான்று தருவதில்லை.

776. வெற்றி தனிமையிலும், தோல்வி பலர் முன்னிலையிலும் தான் கிடைக்கும்.

777. எந்தப் பை அறுந்து போகிறதோ, அதில் தான் முட்டை இருக்கும்.

778. ஒருவரை வேலைக்கமர்த்திய பின்னரே தகுதியான நபரின் விண்ணப்பம் கைக்கு கிடைக்கும்.

779. கைக்கு எட்டாத இடத்தில் தான் அரிப்பு அதிகம் எடுக்கும்.

780. வீட்டுச் சாவியை வெளியிலிருந்து பைக்குள் தேடும் போது தான் தொலைபேசி அழைக்கும்.

781. வீட்டுக்குள் நுழைந்து தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்தால் எதிர் முனை டொக் என வைக்கும் ஓசை தெளிவாகக் கேட்கும்.

782. இந்தத் தவறு ஒரு தொடக்கம் தான்.

783. நம் கணக்கில் பணம் நிறைய இருந்தால் நாம் வெளியூர்க்காரருக்குக் கொடுத்த காசோலை வந்து நமது கணக்கில் பற்று வைக்க வாரக் கணக்கில் ஆகும்.

784. நம் கணக்கில் பணம் இல்லை என்றால், நாம் வெளியூர்க்காரருக்குக் கொடுத்த காசோலை ஒரே நாளில் வசூலுக்கு வந்து நிற்கும்.

785. சில்லறைக் காசுகள் கிழே விழும் போது 50 பைசா கண்ணுக்குத் தெரியும் இடத்திலும், 5 ரூ.காசு கண்ணுக்குத் தெரியாத இடத்திலும் தான் விழும்.

786. உங்களால் வாங்க முடிந்ததை நீங்கள் விரும்பவே மாட்டீர்கள்.

787. கணிணியில் சேமிக்காமலேயே ஒரு வேலையை அதிக நேரம் பார்த்திருந்தீர்களேயானால் அதுவே கணிணி இயங்காமல் நிற்பதற்கான நேரமாகும்.

788. தீர்ப்பு அனுபவத்தால் வருவது. அனுபவம் தப்பான தீர்ப்புகளினால் வரும்.

789. எந்தப் பொருளிலும் கழிவு 90% இருக்கும்.

790. குழந்தை அசிங்கமான இடத்தில் மலம் கழிப்பதில்லை.

791. உங்களுக்கு அதிகம் பிடித்த சமையல் குறிப்பில் பொருட்களின் அளவுகள் இருக்கும் இடம் மட்டும் கிழிந்து போயிருக்கும்.

792. ஒரு பதார்த்தம் செய்யும் போது கெட்டு விட்டால் அதனுடன் எதைச் சேர்த்தும் மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வர முடியாது.

793. நீங்கள் கஷ்டப்படாமல் பார்த்த வேலைக்குப் பாராட்டு மழை இருக்கும்.

794. கஷ்டப்பட்டு ஒரு வேலை பார்த்திருந்தீர்களேயானால் அதற்கு எந்த ஒரு அங்கீகாரம் இல்லாமலிருப்பதுடன் வசவுகளும் கிடைக்கும்.

795. எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியதாகத் தான் இருக்கும்.

796. நீங்கள் எதைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களோ அதைக் கடைசியில் தான் கண்டு கொள்வீர்கள்.

797. நீங்கள் தேடாத பொருட்கள் உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

798. ஒரு பொருளை சுத்தமாக ஆக்க வேண்டுமானால் மற்றொரு பொருள் அழுக்காக ஆக வேண்டி இருக்கும்.

799. ஆனால் எந்தப் பொருளையும் சுத்தம் ஆக்காமலேயே பல பொருட்களை உங்களால் அழுக்காக ஆக்க முடியும்.

800. திரும்பி வரும் நேரத்தை விட, போய்ச் சேரும் நேரம் அதிகமாகவே ஆகும்.

மர்பி விதிகள் - 801 - 900
801. உங்கள் தந்தை ஏழையாக இருந்தால் அது உங்கள் விதி. உங்கள் மாமனார் ஏழையாக இருந்தால் அது உங்கள் முட்டாள்தனம்.

802. நீங்கள் பிறக்கும் போது அறிவாளி தான். கல்வி தான் உங்களைக் கெடுத்து விட்டது.

803. நாம் இங்கிருப்பது அடுத்தவர்க்கு உதவி செய்யத் தான் என்றால், அடுத்தவர்கள் இங்கிருப்பது எதற்காக?

804. ஆம். ஒளி ஒலியை விட அதிக வேகத்தில் செல்லும். நீங்கள் பேசுவதற்கு முன் உங்கள் எதிரில் அமர்ந்திருப்பவர்கள் முகம் பிரகாசமாக இருப்பதில் இருந்து இதை உணரலாம்.

805. பணமே அனைத்துமல்ல. கடனட்டைகளும் இருக்கின்றன.

806. ஓவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். தோல்விக்குப் பின் இருவர்.

807. காரின் சீட்டுகளில் இருக்கும் குழந்தைகளால் விபத்துக்கள் ஏற்படலாம். காரின் சீட்டுகளில் ஏற்படும் விபத்துக்களால் குழந்தைகளும் ஏற்படலாம்.

808. உங்கள் எதிர்காலம் நீங்கள் காணும் கனவுகளில் இருக்கிறது. எனவே உடனே உறங்கச் செல்லுங்கள்.

809. வேலையை உங்களுக்கு ரொம்பப் பிடித்தால், அதைச் செய்யாமல் பார்த்து ரசித்துக் கொண்டே இருங்கள்.

810. நீங்கள் அதிகம் கற்றால், அதிகம் தெரிந்து கொள்வீர்கள்; அதிகம் தெரிந்து கொண்டால் அதிகம் மறப்பீர்கள்; அதிகம் மறந்தால் பின் ஏன் கற்க வேண்டும்?

811. தகவல் தொடர்பு சாதனங்களை அதன் வேகத்தின் அடிப்படையில் வரிசைப் படுத்தினால், 1.தந்தி 2. தொலைபேசி 3. ஹும். அதாங்க. ரகசியம்!

812. வெறுமனே யோசித்துக் கொண்டிருப்பது வேலையைச் செய்வதை விட எடையைக் குறைக்க உதவும் தந்திரமாகும்.

813. எந்த ஒரு எளிய பொருளும் சற்றுக் கூர்ந்து கவனித்தால் மிகவும் கஷ்டம் என்பது புரியும்.

814. எந்த ஒரு கஷ்டனான பொருளும் சற்றுக் கூர்ந்து கவனித்தால் மேலும் கஷ்டம் என்பது புரியும்.

815. எந்த ஒரு பொருளும் விழுந்து உருண்டோடி கண்ணுக்குத் தெரியாத மூலைக்குச் செல்லும் முன் உங்கள் கால் சுண்டு விரலில் விழுந்து தான் செல்லும்.

816. எந்த ஒரு கணக்கின் விடையும் ஒரு சமன்பாடின் விடையேயன்றி, பிரச்னையின் தீர்வு அல்ல.

817. குகைக்குள் தெரியும் வெளிச்சம் உங்களை நோக்கி வரும் ரயிலினுடையதாகவும் இருக்கலாம்.

818. கட்டுப்பாடற்ற சந்தையில் நல்ல பணத்தைக் கெட்ட பணம் புழக்கத்திலிருந்து வெளியேற்றிக் கொண்டே இருக்கும்.

819. சில தவறுகளை மீண்டும் செய்து காட்டச் சொன்னால் உங்களால் முடியாது.

820. ஆனால் எதிர்பாராத வேறு தவறு ஏற்பட்டிருக்கும்!

821. ஒரு விதி விலக்கு அந்த விதியை பரிசோதனை செய்து பார்க்கவேயன்றி அதை நிரூபிக்க அல்ல.

822. எந்த ஒரு விதிக்கும் மறைந்திருக்கும் பல விதி விலக்குகள் உண்டு.

823. புத்திசாலிகளால் (விதியை எழுதுபவர்களால்) அந்த மறைந்திருக்கும் விதி விலக்குகளைக் கண்டு கொள்ள முடியாது.

824. ஒரு நேர்மையான மனிதனால் அனைத்தையுமே அடைந்து விட முடியாது.

825. மீண்டும் மீண்டும் ஒரு வேலையைச் செய்வது பலனைத் தராது. அனுபவம் பெறுவதில் கூட.

826. ஒரு கடையில் நீங்கள் பார்த்து வைத்திருக்கும் பொருளை நீங்கள் எடுக்கக் கையை நீட்டுமுன் ஒருவர் எடுத்து விடுவார். அதுவே கடைசி இருப்பாக இருக்கும்.

827. வரிசையில் அதிக நேரம் கால் கடுக்க நின்று கவுண்டரின் அருகில் வந்ததும் தான் நீங்கள் தவறான வரிசையில் நின்றது தெரியவரும்.

828. ஒரு திருமணம் நிலைத்து நிற்கும் கால அளவும் அந்தத் திருமணத்திற்குச் செய்திருக்கும் செலவும் எதிர்விகிதத்திலேயே இருக்கும்.

829. இருப்பதிலேயே குறைந்த லாபம் தரும் வாடிக்கையாளர் தான் புகார் செய்து கொண்டே இருப்பார்.

830. யாராவது எதையாவது கீழே போட்டால் அதை எடுப்பதை விட காலால் உதைப்பதற்கு தான் ஆட்கள் இருப்பார்கள்.

831. உங்களால் ஒரு வேலையைக் கூட நேர்த்தியாய் செய்ய இயலாது.

832. செய்யக்கூடியதாக இருக்கும் எந்த வேலையும், செய்ய முடிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்றாக இருக்கும்.

833. நீங்கள் நேர்த்தியாக வடிவமைத்த ஒரு திட்டம், சிறு தவறு நேர்ந்து விட்டால் அதிக குழப்பங்களைக் கொண்டிருக்கும்.

834. பகலில் அருமையாக வேலை செய்த கணிணி, இரவில் உங்கள் சொந்த வேலையைப்பார்ப்பதற்காக அலுவலகத்துக்கு வந்து அமர்ந்தால் வேலை பார்க்க மறுக்கும்.

835. தபால் தலை காகிதத்தை விட உங்கள் விரலில் நன்றாக ஒட்டிக் கொள்ளும்.

836. முக்கியமான தாள்கள் தாம் முக்கியமானவை என்பதை நிரூபிக்க, நீங்கள் வைத்த இடத்திலிருந்து உங்களால் கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு நகர்ந்து கொண்டே இருக்கும்.

837. ஒரு படகில் நீங்கள் செல்லும் போது, காற்றின் வேகமும், நீச்சல் தெரிந்தவர்களின் எண்ணிக்கையும் எதிர்விகிதத்திலேயே இருக்கும்.

838. காற்று சாதகமாக இருப்பதை உணர்ந்து நீங்கள் உங்கள் பாய்மரத்தை ஏற்றியவுடன் காற்று எதிர் திசையில் வீச ஆரம்பிக்கும்.

839. துவைக்கும் இயந்திரம் விலை அதிகமுள்ள துணியாய் பார்த்து தான் கிழிக்கும்.

840. அதிக சமன்பாடுகளைக் கொண்ட ஒரு கணக்கில் தவறு ஏற்பட்டு அதை நீங்கள் சரி செய்ய நினைத்து மேலிருந்து ஆரம்பித்தால் தவறு கீழ் சமன்பாட்டில் தான் இருக்கும்.

841. எந்த ஒரு பயணத்திலும், ஜன்னலின் அருகில் அமர வேண்டியவர் தான் கடைசியில் வருவார்!

842. எந்த ஒரு மலையும் பார்க்க பக்கத்தில் உள்ளது போலத் தான் இருக்கும்.

843. மற்ற அனைத்து விஷயங்களும் சமமாக இருக்கும் போது, நீங்கள் இழந்து விடுவீர்கள்.

844. மற்ற அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும் போது, அப்போதும் நீங்கள் இழந்து விடுவீர்கள்.

845. நீங்கள் ஒரு காரை உங்களை முந்த விட்டு, இரு கார்களும் ஒரே இடத்துக்குச் செல்வதாக இருந்தால், முன்னால் சென்ற கார் நிறுத்தும் இடத்துடன் காலி இடம் முடிந்து விடும்.

846. தேவைப்பட்டால், உங்கள் அருகிலுள்ள எந்தப் பொருளையும் சுத்தியலாக உபயோகிக்கலாம்!

847. எவ்வளவு சிறிய வேலையாயிருந்தாலும், உங்கள் கையில் மோட்டார் எண்ணெய்க் கறை படுவதைத் தடுக்க இயலாது.

848. குறட்டை விடுபவர் தான் முதலில் தூங்குவார்.

849. நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தைச் சரியாகச் செய்து விட்டால் அதை யாராவது மீண்டும் ஒரு முறை செய்து காட்டச் சொல்வார்கள்.

850. தவறு செய்வது மனித இயற்கை. அதை மற்றவர் மேல் பழி போடுவதும்.

851. நீங்கள் எந்தப் பழத்தைக் காயாக வாங்கி பழுக்க வைக்க நினைத்தாலும் அதை நீங்கள் சாப்பிடுவதற்குள் வீட்டில் சாப்பிட்டுவிடுவார்கள்.

852. நீங்கள் அதைப் பழுக்க வைத்தே வாங்கி வந்தீர்களேயானால் அது நீங்கள் சாப்பிடும் போது அழுகியிருக்கும்.

853. நீங்கள் ஆசையுடன் பார்க்க உட்கார்ந்திருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி நேர மாற்றம் செய்யப்பட்டிருக்கும்.

854. நீங்கள் எடுத்து படிக்க ஆசைப்படும் பாடம் நீங்கள் சேர்ந்தவுடன் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கும்.

855. முக்கியமான இடத்தில் மட்டும் உங்கள் கையெழுத்தே உங்களுக்குப் புரியாது.

856. ஒவ்வொரு ஆசிரியரும் தனது பாடத்தைத் தவிர இந்த மாணவர்கள் வேறெதையும் படிக்க வேண்டியதில்லை என்றே எண்ணுவார்.

857. எந்த ஒரு பாடம் பொதுவான விஷயத்தைப் பற்றி விளக்குகிறதோ அதிலிருந்து நீங்கள் அதிகம் கற்றுக் கொள்ள முடியாது.

858. எந்த ஒரு பாடம் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி தெளிவாக விளக்குகிறதோ அதிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டதை எங்குமே உபயோகப்படுத்திப் பார்க்க முடியாது.

859. ஆட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி (டெண்டுல்கர் சிக்ஸர் அடிப்பது) நீங்கள் பாப்கார்ன் வாங்கிக் கொண்டிருக்கும் போது தான் நிகழ்த்தப்படும்.

860. ஒரு விஷயத்தில் மேதாவி என்பவர் வேறு நகரத்தில் இருந்து வந்தவராக இருக்கவேண்டும். (உள்ளூர் மாடு விலை போகாது)

861. உங்கள் மருத்துவர் உங்கள் வியாதியைக் கண்டறிந்துவிட்டதாலேயே உங்களைக் குணப்படுத்திவிடுவார் என்று நம்பாதீர்கள்.

862. உங்களுக்கு வெறுப்புத் தரக்கூடிய பத்திரிகைகள் வரவேற்பறையில் இருந்தால் நீங்கள் சந்திக்கவேண்டியவர் மிகவும் தாமதமாகவே உங்களை அழைப்பார்.

863. குழந்தைகளின் பாட்டில்களை வயதானவர்களால் தான் திறக்க முடியாது.

864. இரண்டு விதமான பிளாஸ்திரிகள் தான் உண்டு. 1. புண்ணின் மேல் ஒட்டாதது. 2. புண்ணின் மேல் ஒட்டிக் கொண்டு எடுக்க முடியாதது.

865. வீட்டில் பல கதைகள் பேசும் குழந்தைகள் விருந்தினர் முன் நீங்கள் பேசிக் காட்டச் சொன்னால் ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள்.

866. ஒரு விளையாட்டுச் சாமான் உடைக்க முடியாததாக இருந்தால் அது அடுத்த விளையாட்டுச் சாமானை உடைக்கப் பயன்படும்.

867. உங்கள் வீட்டுப் பூனை சாப்பிடுவதற்கும், அது சாப்பிடும் பண்டத்தின் விலைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.

868. உங்கள் வீட்டுக்கு எவ்வளவு முக்கியமான விருந்தாளிகள் வந்துள்ளனரோ அதற்கேற்பவே உங்கள் செல்லப் பிராணிகள் அசுத்தம் செய்வதும் இருக்கும்.

869. காதலியைக் காணும் வரை பரு தெரியவராது.

870. சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளவே முடியாது. அது எந்த விஷயங்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடியாது.

871. அரசாங்கத்தின் ஊழல்கள் இறந்தகாலத்திலேயே எப்போதும் சொல்லப்படும்.

872. எதைப் பற்றி வேண்டுமானாலும் அவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். அதில் உண்மை இருக்கப் போவதில்லை.

873. எதைப் பற்றி வேண்டுமானாலும் அவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். அதில் கண்டிப்பாக பணத்தைப் பற்றிய பேச்சு இருந்தே தீரும்.

874. நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பது நீங்கள் எங்கு உட்காருகிறீர்கள் என்பதைப் பொருத்தது.

875. பிலிம் முடிந்தவுடன் தான் முக்கியமான புகைப்படம் எடுக்கவேண்டிய நிகழ்ச்சி நடக்கும்.

876. முக்கியமான புகைப்படம் எடுக்க நினைக்கும்போது தான் லென்சின் மூடியை எடுக்க மறந்திருப்பீர்கள்.

877. முக்கியமான புகைப்பட ரோலைக் கழுவும் போது தான் இருட்டறையின் கதவைத் திறந்து கொண்டு யாராவது வந்து அதைப் பாழாக்குவார்கள்.

878. நேரடியான வினை நேரடியான எதிர்வினையை உருவாக்கும்.

879. ஒரு மூன்று மாடிக்கட்டடத்தில் மின் தூக்கி (லிப்ட்) வேலை செய்யுமானால் 10க்கு 9 முறை நீங்கள் நிற்கும் மாடியில் அது இருக்காது.

880. எந்தத் தகவல் உங்களுக்கு மிக மிக தேவையோ அது மட்டுமே கிடைக்காது.

881. ஒரு பொருளின் விலை ரூ.50/-க்கும் குறைவு என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தால் அதன் விலை கண்டிப்பாக ரூ.19.95 ஆக இருக்காது. ஹி ஹி.

882. முன்கூட்டியே நீங்கள் வந்தால் கூட்டம் ரத்து செய்யப் பட்டிருக்கும்.

883. சரியான நேரத்தில் நீங்கள் வந்தால் கூட்டம் நடக்க இன்னும் நேரம் ஆகும்.

884. தாமதமாக கூட்டத்திற்கு வந்தால், அடடா! நீங்கள் மிகத் தாமதமாக வந்து விட்டீர்கள்.

885. சாதாரண வேலைகள் செய்யாமல் மூடி வைக்க உகந்தவை. அதைச் செய்வதற்கென எதிர்காலம் இருக்கிறது.

886. எளிதான, புரியக் கூடிய பொய், குழப்பமான உண்மையை விட மேல்.

887. யார் விளையாட ஆர்வமில்லாமல் இருக்கிறார்களோ அவ்ர்களே ஜெயிப்பார்கள்.

888. ஏதாவது ஒரு பொருளின் மேல் "புதிது"/"சிறந்த தொழில் நுட்பத்துடன் செய்யப்பட்டது" என்று அச்சடித்திருந்தால் அது பழைய சரக்கு என்று அர்த்தம்.

889. அவ்வாறு அச்சடித்திருந்தால் விலை அதிகமாகி விட்டது என்று பொருள்.

890. உங்களுக்கு ஒரு சட்டை பிடித்திருந்தால் உங்கள் அளவைத் தவிர எல்லா அளவுகளிலும் இருப்பு இருக்கும்.

891. உங்களுக்கு ஒரு சட்டை பிடித்திருந்தால் உங்கள் அளவுக்கே இருப்பு இருந்தாலும் எப்படியும் உங்களுக்கு அது எட்டாது.

892. அப்படியே உங்களுக்கு கன கச்சிதமாகப் பொருந்தியிருந்தால் அதன் விலை உங்களால் வாங்க முடியாத அளவுக்கு இருக்கும்.

893. அப்படியே உங்களுக்கு பிடித்திருந்து, இருப்பும் இருந்து, பொருந்தியும் இருந்து, விலையும் மலிவாக இருந்தால் முதல் முறை துவைத்த வுடன் கிழிந்து விடும்.

894. கொள்முதல் சோதனைக்கு அனுப்பிய பொருளின் அறிக்கை நீங்கள் அதை வாங்கியவுடன் தான் வந்து சேரும். அதில் நீங்கள் வாங்கிய பொருள் உபயோகமற்றது என்றும், நீங்கள் வாங்காமல் விட்ட பொருளே சிறந்ததென்றும் அறிவிக்கப் பட்டிருக்கும்.

895. 60 நாட்கள் உத்திரவாதம் உடைய ஒரு பொருள் 61ம் நாள் தான் பழுதாகும்.

896. ஒப்புதலை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து நீங்கள் செய்யும் எந்தப் பணியும் ஒப்புதல் பெற முடியாததுடன் யாருக்கும் விரும்பத் தகாததாகவும் இருக்கும்.

897. அனைவருக்குமே புரியும்படியாக நீங்கள் ஒரு விஷயத்தை விளக்கினால், ஒரு மேதாவி கேள்வி கேட்டு உங்களுக்கே குழப்பத்தை உண்டாக்கி விடுவார்.

898. புது சட்ட திட்டம் புது ஓட்டைகளை உருவாக்குவதாகவே இருக்கும்.

899. புதிய சட்டம் புத்தகத்தின் அளவுக்கு ஏற்ப விரிந்து கொள்ளும்.

900. தீயணைக்கும் கருவி தீ எரியும் போது தான் வேலை செய்யாது.

மர்பி விதிகள் - 901 - 1000
901. பாதையிலுள்ள குண்டு குழி நீங்கள் நினைப்பதை விட ஆழமானது ஆகும்.

902. ஒரு விசயம் தவறாக நடந்த பிறகு அதைச் சரி செய்வதற்கு அடுத்தவர் சொல்லும் எந்த ஒரு வழிமுறையும் ஏற்கனவே நீங்கள் செய்து பார்த்ததாகவே இருக்கும்.

903. ஆனால் அவர்கள் முன் செய்து பார்க்கும் போது மட்டும் தவறு சரியாகி விடும்.

904. குழுவாகக் கூடி விவாதிக்கும் ஒரு பொருளை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.தனிமையில் கேட்டால் அதைப் போல் முட்டாள்தனம் இல்லை என்பார்கள்.

905. 10 நிமிட அடி உதையில் எடுக்க முடியாத முடிவை சில சமயங்களில் நான்கு மணி நேரக் கூட்டம் தந்து விடும்.

906. 100000 முறைகளானாலும் ஒன்றுமில்லை என்பது ஒன்றுமில்லை தான்.

907. இல்லை என்பது மூன்றெழுத்து வார்த்தை அல்ல. வாக்கியம். அதைப் பல பேர் சொல்ல முடியாமல் மாட்டிக் கொள்வார்கள்.

908. விளையாட்டில் அனுபவமானவர்களை விட அனுபவக் குறைவானவர்களும், சிறுவர்களும் எளிதில் வெற்றி பெறுவார்கள்.

909. பந்தயத்தில் முன்னால் ஓட முடியவில்லை என்றால் பாதியிலேயே நின்று விடுவது புத்திசாலித்தனம்.

910. எந்த ஒரு விசயமும் தவறாக நடக்கும் போது அது எவ்வாறு தவறாக நடந்தது என்று விளக்க முடியாமலேயே தவறாக நடக்கும்.

911. எந்த விளக்கமும் எளிதாக இருந்தால் சரியானதாகவும் இருக்கும்.

912. 100 லிட்டர் சாக்கடையில் 1 சொட்டு தேன் விட்டாலும் அது சாக்கடை தான். 100 லிட்டர் தேனில் 1 சொட்டு சாக்கடை நீரை விட்டாலும் அது சாக்கடை தான்.

913. ஒரு சிறு கயிறைக் கூட உங்களால் நேர் கோட்டில் தள்ள முடியாது.

914. தவறுகளே மிஞ்சும்.

915. எது நடந்தாலும் அதை நீங்கள் எதிர்பார்த்தது போலக் காட்டிக் கொள்ளுங்கள்.

916. வாழ்க்கை என்பது வினையாக எடுத்துக் கொள்ளும் அளவுக்கு வினையானது.விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் அளவுக்கு விளையாட்டானது.

917. ஒரே மாதிரியான இரு பொருட்களைத் தயாரிக்கவே முடியாது.

918. உங்களுக்கு வரும் கெடுதலுக்கு மட்டும் எல்லையே இருக்காது.

919. அச்சடிப்பானை விட்டு நீங்கள் நகர்ந்ததும் காகிதம் சிக்கிக் கொள்ளும்.

920. அந்தப் பொருளின் விலை எவ்வளவு என்பதல்ல உங்கள் பிரச்னை. அதிலிருந்து எவ்வளவு சேமிக்க முடியும் என்பதில் இருக்கிறது.

921. நமது நண்பர்கள் ஏதேனும் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்த உடன் நமது நண்பர்கள் என்னும் பதவியில் இருந்து இறங்கி விடுவார்கள்.

922. காரின் விலையும், ஓட்டுநரின் நிதானமின்மையும் நேர்விகிதத்திலேயே இருக்கும்.

923. உங்களை விட குறைவான வேகத்தில் ஓட்டும் அனைவரும் முட்டாள்கள்.

924. உங்களை விட அதிகமான வேகத்தில் ஓட்டும் அனைவரும் நிதானம் தெரியாதவர்கள்.

925. உங்கள் வேகத்திலேயே ஓட்டுபவர்கள் பிடிவாதக்காரர்கள்.

926. ஒரு வெற்றியின் நிகழ்தகவு 1 ஆக இல்லாத பட்சத்தில் அது 0 க்கு அருகிலேயே இருக்கும்.

927. உங்களுக்குப் பிடித்த திரைப்பாடல் கார் வானொலியில் பாட ஆரம்பிக்கும் போது நீங்கள் போய்ச் சேர வேண்டிய இடம் வந்து விடும்.

928. அறையின் தட்பவெப்ப நிலை எதுவாக இருந்தாலும் அது தான் அறைத் தட்ப வெப்ப நிலை! (Room Temperature)

929. நன்றாக ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொண்டு விட்டால் அதை அடுத்தவருக்கு உங்களால் புரியவைக்க முடியாது.

930. ருசியான டீயைக் குடித்தவுடன் செய்யும் எந்த வேலையும் தவறாகத் தான் இருக்கும்.

931. வாழ்க்கை என்பது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத பல நிகழ்வுகளின் தொகுப்பாகும்.

932. எந்த இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள தூரமும் இன்னும் கண்டறியப்பட்டதில்லை.

933. வெளியூரில் முடிய வேண்டிய வேலை ஒரே நாளில் முடியாது.

934. அன்று தான் நீங்கள் உள்ளூரிலும் இருந்தாக வேண்டும்.

935. உங்களுக்கு எதிரிகளை உருவாக்க ஆசையிருந்தால் எதையாவது மாற்றம் செய்து பாருங்கள்.

936. ஒரே பொருளுக்கு பல உபயோகங்கள் இருக்குமானால் அது எதற்குமே உபயோகப்படாது.

937. அனுபவம் என்பது நீங்கள் எதையாவது எதிர்பார்த்து அது நடக்காத போது உங்களுக்கு ஏற்படுவது ஆகும்.

938. எந்த ஒரு பிரச்னையும் நீங்கள் பயந்து ஓடும் அளவுக்குப் பெரியது கிடையாது.

939. நீங்கள் சவரம் செய்யும் போது உங்கள் முகத்தில் ஏற்படும் காயம், நீங்கள் எந்த நிகழ்ச்சிக்குப் போவதற்காகச் சவரம் செய்கிறீர்கள் என்பதைப் பொருத்து பெரியதாகவோ,தெரியக்கூடிய இடத்திலோ ஏற்படும்.

940. நீங்கள் நிற்கும் வரிசையில் உள்ள கணிணி தான் இருப்பதிலேயே பழையதாக இருக்கும்.

941. அது புதிய கணிணியாகவே இருந்தால் அதை உபயோகிப்பவர் இப்போது தான் வேலைக்குச் சேர்ந்து பயிற்சி பெறுபவராக இருப்பார்.

942. இந்த வரிசை சரியில்லை என்று நீங்கள் எந்த வரிசைக்குச் செல்கிறீர்களோ அது தான் மிகவும் மெதுவாக நகர ஆரம்பிக்கும்.

943. வாகன நெரிசலின் போது புது காரின் மீது தான் இடித்துக் கொண்டு செல்வார்கள்.

944. நீங்கள் சுற்றுலா செய்யாத தினத்தில் என்றுமே மழை பெய்யாது.

945. டீயின் சூடு ஆறும் வேகமும், உங்கள் அவசரமும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

946. அவர்கள் (அதாவது உங்களைத் தவிர மற்றவர்கள்) நினைப்பதைச் சாதித்துக் கொள்ளலாம்.

947. உங்கள் மீது உண்மையான பாசம் வைத்திருப்பவர்கள், எந்தப் பதவியிலும் இல்லாதவர்களாக இருப்பார்கள்.

948. உங்கள் மேலதிகாரி எப்போதும் தவறே செய்வதில்லை.

949. அவ்வாறு அவர் தவறேதும் செய்தால் அதற்குப் பின்னால் நேரடியாகவோ மறைமுகமாகவோ உங்களின் வேலையின் பங்கு இருக்கும்.

950. நீங்கள் உரிக்கும் ஆரஞ்சுப் பழத்தின் சுவையும், அதை நீங்கள் உரிக்க எடுத்துக் கொள்ளும் நேரமும் எதிர்விகிதத்திலேயே இருக்கும்.

951. நீங்கள் விரும்பாத எந்தத் துறையிலும் மேதையாகாதீர்கள். பின் அதே வேலையை வாழ்நாள் முழுதும் செய்ய வைத்து விடுவார்கள்.

952. சரியான விஷயத்தைச் சொல்லுங்கள், யார் காதிலும் விழாது. தவறான விஷயத்தைச் சொல்லுங்கள், அனைவர் காதிலும் விழும்.

953. எது தேவையோ அது அப்போது மறந்து போகும்.

954. நண்பர்களுடனான தொடர்பு நாளடைவில் அற்றுப் போகும். எதிரிகளிடமோ அவ்வாறு ஆவதில்லை.

955. அவசரமாகச் செல்லும் போது தான் அனைத்து சாலை சந்திப்புகளிலும் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும்.

956. வீட்டுப்பாடத்தின் ஞாபகம் விடுமுறையின் கடைசி நாளில் தான் ஏற்படும்.

957. எதாவது தவறு ஏற்படும் போது 1. நீங்கள் என்ன செய்தீர்கள்? 2. அடுத்தவர்கள் என்ன செய்தார்கள்? 3. வேறு எது தவறாக போக வாய்ப்பிருக்கிறது? 4. இதை யார் மேல் பழி போடலாம்? என்று சிந்தியுங்கள்.

958. ஒரு தவறு ஏற்படுவதற்கான வாய்ப்பு, நீங்கள் அதை எவ்வளவு தூரம் எதிர்பார்க்கவில்லை என்பதையும், அதற்குப் பரிகாரம் செய்வதற்கு நீங்கள் எவ்வளவு தூரம் தயாராக இல்லை என்பதையும் பொருத்து அதிகமாகும்.

959. பொது சாக்கடைக் குழாய் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும்.

960. பக்கத்தில் உள்ளவர் கையில் உள்ள செய்தித் தாளில் முக்கியமானதை அவருக்குத் தெரியாமல் வாசிக்கும் போது தான் அவர் அதைக் கிழித்துக் கீழே போடுவார்.

961. ஒரு மனிதனைத் தூக்கு மேடை வரை கூட உங்களால் கொண்டு போக முடியும். ஆனால் அவரைச் சிந்திக்க மட்டும் வைக்க முடியாது.

962. மனசாட்சி உங்களின் ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போடுவதில் உள்ள பிரச்னை என்னவென்றால், மீண்டும் உங்களுக்கு அந்தச் சூழ்நிலை வாய்க்காது.

963. உலக மக்களை இரு பிரிவாகப் பிரிக்கலாம். 1. இது போன்ற இரு பிரிவு இருப்பதை நம்புபவர்கள். 2. நம்பாதவர்கள்.

964. தேவைகள் என்பது மற்றவர்கள் கொண்டுள்ள ஒரு பண்பாகும். ஆனால் உங்களுக்கும் அந்தப் பண்பு இருக்கும் என்பதை யாருமே உணர மாட்டார்கள்.

965. மின் தூக்கியில்; முகத்தை நேராக வைக்கவும்.

966. மின் தூக்கியில்; கையை முன்புறம் கட்டிக் கொள்ளவும்.

967. மின் தூக்கியில்; அடுத்தவர் கண்களைப் பார்க்கக் கூடாது.

968. மின் தூக்கியில்; எண்களை மட்டுமே பார்க்க வேண்டும்.

969. மின் தூக்கியில்; உங்களுக்குத் தெரியாதவருடன் எதுவும் பேசக் கூடாது.

970. மின் தூக்கியில்; உங்களுக்குத் தெரிந்தவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது தெரியாதவர் யாராவது வந்து விட்டால் பேச்சை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

971. மின் தூக்கியில்; அடுத்தவர் உடலுடன் உரசாமல் நிற்கவேண்டும்.

972. ஆண்களுக்குப் பெண்களை எதற்காகப் பிடிக்கிறதோ அது சில வருடங்களுக்குப் பின் அவர்களிடம் இருக்காது.

973. பெண்களுக்கு ஆண்களை எதற்காகப் பிடிக்கிறதோ அது அவர்களிடம் எப்போதும் இல்லாததாக இருக்கும்.

974. மாட்டிக் கொள்ளாத வரை எதுவுமே தவறில்லை.

975. ஒரு வேலையைக் கஷ்டமான வழியில் செய்வது எப்போதுமே எளிது தான்.

976. யாராலும் தேவையான தகவல்கள் கிடைத்தால் முடிவு எடுக்க முடியும்.

977. ஒரு நல்ல மேலாளரோ தேவையான தகவல்கள் கிடைக்காமலும் முடிவு எடுக்க வல்லவர் ஆவார்.

978. ஒரு சிறந்த மேலாளரோ எந்தத் தகவலும் இல்லாமல் முடிவெடுப்பவர் ஆவார்.

979. நீங்கள் என்ன செய்தீர்களோ, அதைத் தானே செய்வதற்குத் திட்டமிட்டிருந்தீர்கள்?

980. ஒருவரின் மேதாவித்தனம் அவரது வாக்கியங்களைப் பொது மக்களால் எவ்வளவு தூரம் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது என்பதைப் பொருத்ததாகும்.

981. காரைத் திறக்கும் வேகமும் மழையின் வேகமும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

982. அலுவலகத்திலிருந்து உங்கள் வீட்டின் தூரமும், நீங்கள் முக்கியமான ஒரு அலுவலகக் கோப்பை வீட்டிலேயே வைத்து விட்டு வருவதற்கான வாய்ப்பும் நேர் விகிதத்திலேயே இருக்கும்.

983. நீங்கள் உணவகத்திற்கு எவ்வளவு சீக்கிரம் வந்தீர்கள் என்பதெல்லாம் முக்கியமில்லை.பணியாளர் மிக மெதுவாகவே உங்களுக்குப் பரிமாறுவார்.

984. பக்கத்து மேசைக்காரர் சாப்பிடும் உணவை உங்கள் குழந்தை கேட்கும் போது தான் அது தீர்ந்திருக்கும்.

985. உணவின் சுவையும் அதில் உள்ள கொழுப்புச் சத்தும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

986. நீங்கள் விரும்பும் எதுவும் தடை செய்யப்பட்டதாக இருக்கும்.

987. பூசணிக்காயைச் சாப்பிடுவதானாலும் ஒவ்வொரு வாயாகத் தான் சாப்பிட முடியும்.

988. எந்த ஒரு மனிதனின் நேர்மைக் குறைவையும் திருட்டுத் தனம் ஆட்கொண்டு விடும்.

989. நீங்கள் ஏற வேண்டிய பேருந்து மட்டும் எப்போதும் நிறைந்தே வரும்.

990. நீங்கள் உட்காரும் இருக்கை தான் அந்தப் பேருந்திலேயே வசதிக் குறைவான இருக்கையாக இருக்கும்.

991. நாம் அனைவரும் ஒரே சாலையில் தான் செல்கிறோம். ஆனால் வேறு வேறு திசையில்.

992. எந்த இடத்தில் பஞ்ச்சர் ஆனாலும் கார் சக்கரத்தின் கீழ் பக்கம் தான் சப்பையாக இருக்கும். (பெரிய கண்டுபிடிப்பு!)

993. பிரச்னையைத் தீர்க்கும் வேலை அந்தப் பிரச்னைக்கு யார் காரணம் என்பதைக் கண்டறிவதுடன் முடிந்து விடும்.

994. எல்லா தகவல்களும் நிர்வாகத்தில் உள்ள அனைவருக்கும் ஒழுங்காகவே செல்லும். கெட்ட தகவல்கள் மட்டும் கீழிருந்து மேலே செல்வதில் வல்லவை ஆகும்.

995. எதிரி கீழே விழும் போதே மீண்டும் ஒரு முறை உதைத்துக் கொள்ளுங்கள.

996. யார் பக்கத்தில் இருக்கிறார்களோ, அவர்களே தாமதமாகவும் வருவார்கள்.

997. தவறைச் சரியென நிரூபிக்க, அதே தவறைப் பல செய்திருக்க வேண்டும்.

998. கடவுள் ந்ம்மை இரண்டாவது வகுப்பில் (விமானத்தில்) செல்ல வெண்டும் என்று தீர்மானத்தில் வைத்திருந்தால், நம்மை ஒல்லியாகப் படைத்திருப்பார் அல்லவா?

999. வெற்றி பெற்றவர் என்று யாரும் இல்லை. தப்பிப் பிழைப்பவர்கள் தான் உண்டு.

1000. நடைமுறைப்படுத்த முடியாத எந்த ஒரு விதிக்கும் அதன் தேவை நிதர்சனமாக இருக்கும்.