Blogger news

Welcome to myZone and thanks for ur visit ((((ஸ்ரீநிவாஸ்))))

Blogger templates

நிழல் தேடாதே
உன் நிழலில் ஒரு
ஊரையே நிற்கவை !

முட்களில் மோதிக்
கிழியாதவனுக்குப்
பூக்களைத் தடவும்
தகுதி கிடையாது !

மகிழ்ச்சியாய்ச் சிரி
கவலைகளைப் பிய்த்துக்
காற்று மண்டலத்திற்கு
அப்பால் வீசு !

எதைக் கண்டும்
பிரமிக்காதே
பிரமிப்பைப்போல் ஒரு
பின்னடைவே கிடையாது !

தோல்வி என்பது
சிந்திக்கத் தெரியாதவனின்
சித்தாந்தம் !

நிலாவைத் தொட்டது
மூன்று தோல்விகளுக்குப்
பிறகுதான் !

நீ எழுந்தால் ஒரு
எட்டு வந்து பார்க்காதவன்
நீ விழுந்தால் விழுந்து
விழுந்து விசாரிப்பான் கவனி !

இளைஞனே
இரைப்பையையும்
நம்பிக்கையையும்
காலியாக விடாதே !

நடக்குமா என்ற
கேள்வி-
உன் நம்பிக்கைக் கோபுரத்தின்
அத்திவாரத்தில்
விழுந்த கடப்பாறை !

உலகை உலுக்கி உலுக்கி
எடுத்தவனெல்லாம்
துவக்கத்தில் ஒரு
தூசுப்படலமாக இருந்தவன்தான் !!!

நீ யார்???

நீ யார்??? என்று கேட்ட போதுதான்
புரிந்தது எனக்கு நீ... யார் என்று!

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?


தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
                                                          மஹாகவி பாரதி 

வாழ்க்கை ஒரு போராட்டம்

புறப்படு தோழனே!
ஒவ்வொரு நாளும்
போராட்டம் தான்!
களம் மாறும் வாள் வீசும்
கை மாறும்! எதிரிகளின்
புலம் மாறும் என்றாலும்
போராட்டம் மாறாது!
ஒப்பந்தம் தற்காலிகமானது!
உயிரையே பணயம் வைத்து
நடத்தும்
நிஜமான போராட்டமே
நிரந்தரமானது!
கை குலுக்குகிறவர்களைப் பற்றி
கவனமாய் இரு!
அவர்களது கைகளுக்குள்
பொய் குலுங்கிக் கொண்டிருப்பதைப்
புரிந்து கொள்!
வார்த்தைக் கடிதங்களுக்குள்
இல்லாமல் இருப்பது
இதயத்தின் விலாசம்!
உட்கார்ந்திருப்பதோ
உதட்டுகளின் முத்திரை!
சூரியனும் சந்திரனும்
சுற்றிச் சுற்றி வருவது
நீ பட்ட
காயங்களையெல்லாம்
கணக்கெடுக்கத்தான்!
திடீர் திடீர் என்று
உன்னை நோக்கி
வீசப்படுவதெல்லாம்
வெடி குண்டுகள் அல்ல…..
விழிப்பு மாத்திரைகள்!
அழகான புன்னகைகளை நம்பி
ஆயுதங்களைக் கீழே போடாதே!
உலகம் உன்னைத்
தாக்குவதற்காகத்தான்
தருணம் பார்த்திருக்கிறது.
உறைக்குள் வாளை
ஒரு நாளும் போடாதே!
சமாதானப் புறா
பறக்க முடியாது…
துப்பாக்கி முனைகளின்
துணையில்லாமல்!
                                            கவிஞர் மு.மேத்தா

செம்மொழி

செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்!
                                          இலட்சியகவி. அறிவுமதி

வைரமுத்துவின் கண்ணீர் வரிகள்...

முதன் முதலாய் அம்மாவுக்கு... ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரு(மை)ம
ஒத்தவரி சொல்லலையே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?

பொன்னையாத் தேவன் பெத்த
பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புல்வலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாணப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

திக்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம(ப்)
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே

அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே!

எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?
- கவிப்பேரரசு வைரமுத்து.

தொகுப்பு : கொஞ்சம் தேநீர் நிறைய வானம்

விலைமதிப்பில்லா வரிகள் :

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே,
நேரில் நின்று பேசும் தெய்வம் -பெற்ற
தாயன்றி வேறொன்று ஏது?

அபிராமி , சிவகாமி, கருமாரி , மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானாம்மா.
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா,
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே
உன் அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே.
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நானுந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே.
அதை நீயே தருவாயே

பசுந்தங்கம் ,புதுவெள்ளி, மாணிக்கம் மணிவைரம்
அவையாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா?
விலைமீது விலைவைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா,
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு -அறிவேனம்மா.
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான்பட்ட கடன் தீருமா? உன்னாலே பிறந்தேனே....

கவிஞர் வாலி
கருத்து சொன்னா கேட்பீங்களானு தெரியல... இருந்தாலும் சொல்றேன்....
யார் பேச்சை யாருங்க கேட்குறா நீங்க கேட்குறதுக்கு....

ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்னு வசனம் பேச வேண்டாம்... கொஞ்சம் படிச்சுதான் பாருங்க...

சிரிக்காதீங்க...கருத்து சொல்ல உனக்கு என்னடா தகுதி இருக்குனு கேட்காதீங்க... கருத்து சொல்ல தகுதி இருக்கிரவங்க படிச்சிட்டு யாருக்கு வேணும்னாலும் இந்த கருத்தை சொல்லிட்டு போகட்டுமே.... அதான் சொல்றேன்... வேற ஒண்ணும் இல்ல... இப்ப straightஆ மேட்டருக்கு வாரேன்...

உங்கள் நண்பருக்கு..நீங்கள் நல்ல நண்பரா?!!!

    


உங்கள் நண்பருக்கு முதலில் அன்பை கொடுக்க முடியுமா  என்று பாருங்கள்பெறலாம் என்பதை விடுங்கள்.

உங்கள் சுயமகிழ்ச்சிக்காக நண்பர்களை தேடுகிறீர்கள்
என்றால் நிச்சயம் நீங்கள் நல்ல நண்பராக இருக்க
முடியாது. அது முழு சுயநலமே தவிர வேறில்லை.
அன்பை கொடுத்து பழகுங்கள்.பெறுவதற்கான தகுதி
கொடுக்கும் போதுதான் வருகிறது

ஊக்கப்படுத்துங்கள் உங்கள் நண்பரை..!!

நீங்கள் நிஜ நண்பராய் இருக்க வேண்டுமானால் எப்போதும்
உங்கள் நண்பர் உங்களிடம் இருந்து பாஸிட்டிவ் எண்ணங்களையே
பெற வேண்டும்.எப்போதும் உற்சாகமாகதுடிப்புடன் நல்லமுறையில்
அவர்களை கையாளுங்கள்.அவர்களின் லட்சியங்களை நோக்கி
அவர்களை தூண்டுவதே நட்பின் உண்மையான அழகு”.

மன்னிக்க பழகுங்கள்..!!

சின்ன வார்த்தைதான்..அது பல அர்த்தம் கற்பிக்கப்பட்டது.
இன்று அவரும் நானும் எங்கோ பிரிந்துவிட்டோம்..இந்த
பிரிவுக்கு காரணம் என்னமன்னிக்காத குணம் தான்.
எனக்கு ஒரு பழக்கம் உண்டு. என்னை புண்படுத்தும்படி பேசியபோதும்
நண்பரை குஷிப்படுத்தும்படி எதாவது பேசிவிடுவேன்.
அவரும் சிரித்தபடி மன்னிப்பை கேட்டுவிட்டு மீண்டும் சகஜமாகி
விடுவார். இதை பின்பற்றுவது உங்கள் விருப்பம்.
ஆனால் முக்கியமான விஷயம்:
மன்னிக்கும் குணம். அது மனதிற்கு நல்லது.
அது உங்கள் நண்பருக்கும் நல்லதுஉங்களுக்கும் நல்லது.

தவறுகளை குத்திகாட்டாதீர்கள்,சுட்டிகாட்டுங்கள்..!!

சிலர் இருக்கிறார்கள்இவன் நம் நண்பர்தானே என்ன சொல்லிவிட போகிறார்
என்று நம்மை பலவகையில் குத்திகாட்டுவார்கள். அந்த வலி என்னவென்று நமக்கே தெரியும். ஒரு குருவை போல நீ இந்த இடத்தில்இந்த வகையில் சரியாக இல்லை. இது உன்னை பாதிக்க கூடும் என்று அன்பாய் எடுத்து சொல்லுங்கள்...அப்படி எடுத்து சொல்லியும் கேட்க வில்லையா...விட்டு விடுங்கள்...அவர்களாகவே அடி பட்டு திருந்தட்டும்...அப்பொழுதுதான் உங்கள் சொல்லின் மதிப்பு தெரியும்...

சொன்னதை செய்யுங்கள்..!!

நீங்கள் அவரை சந்திப்பதாக சொன்னால் சரியான நேரத்தில் சென்றுவிடுங்கள்.
காதலுக்கு வேண்டுமானால் காத்திருப்பு அழகானதாய் இருக்கும். ஆனால்
நட்புக்கு டைமிங் முக்கியம் அமைச்சரே..!!”.
எனவே நண்பர்களை காக்க வைக்க வேண்டாம்.

நட்புக்கேது கட்டுபாடு..!!

உண்மையான நண்பர்களாய் நீங்கள் இருக்க விரும்பினால் ஒரு
விஷயத்தை மனதில் வைத்துகொள்ளுங்கள். அது நீங்கள் அவருக்கு
நண்பரே தவிர முதலாளி அல்ல. அவரை கட்டுபாட்டுக்குள் வைக்க
முயற்சிக்கும் போது நட்பு அடிப்பட்டு விடுகிறது. எனவே அவரை அவராய்
இருக்கவிட்டு ரசிப்பதே அழகு.

நல்லதுக்கும்கெட்டதுக்கும் உடனிருப்பதே நட்பு..!!

நல்ல விஷயத்திற்கு போறமோ இல்லையோ..கெட்டதுக்கு போய்டணும்என்கிற பழமொழி இங்கே செல்லாது. அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுக்கும்போதுதான் நட்பிற்கான மரியாதை அதிகரிக்கிறது.அதே போல் கெட்டது நடந்தால் முதலில் நீங்கள் தான் போய் நிற்கவேண்டும். இது கட்டாயம் அல்ல...கடமையும் அல்ல..அதுதான் அன்பு. அதுதான் நட்பின் கற்பு.

அவர் அவராகவே இருக்கட்டும்..!!

நீங்கள் யார் அவரை மாற்ற..?? அவரை முன்னேற்ற வேண்டுமானால் நீங்கள் ஆனதை செய்யலாம். ஆனால் அவரின் தனித்துவத்தில் நீங்கள் குறிக்கிடுவது அனுமதிக்க முடியாதது. அதாவது அவர் பர்மிஷனோட கதவை தட்டிட்டு தான் அவர் அறைக்கு போகனும்..அது டீஸன்ஸி. என் நண்பர்தானே என்ன சொல்ல போறார்னு நீங்க பாட்டுக்கு போன..நட்பின் இலக்கணம் கெட்டுவிடும்..

ஓட்டவாயா இருக்காதீங்கப்பு..!!

நெருங்கிய நண்பர்களின் ரகசியங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கிறதாமுடிந்தால் அதை ஒரு பேப்பரில் எழுது பசிபிக் கடலின் ஆழத்தில் போட்டுவிடுங்கள். அல்லது மனதிலேயே புதைத்துவிடுங்கள். தங்கள் நண்பரின் முழு நம்பிக்கையை பெற்றதால்தான் அவர் உங்களிடம் சொல்கிறார். அதை வெளியே சொல்வது மட்டுமில்லை..அதை அவரிடம் மீண்டும் அவர் விருப்பமில்லாமல் விவாதிப்பது கூட நட்புக்கு ஏற்படுத்தும் களங்கம் தான். அது ஒரு மனிதத் தன்மையற்ற செயலும்கூட.

பேச்சு பேச்சாதான் இருக்கணும்..!!

எப்போது விவாதம் என்று வந்துவிட்டதோ அப்போதுதான் நட்புக்கு சோதனை வருகிறது. யார் புத்திசாலி என்பதை காட்ட விவாதம் செய்தால்..நட்பு முறிய அதிக வாய்ப்புள்ளது. அதுவே இருவரும் ஒருவரை ஒருவர் சிந்திக்க தூண்டுவதற்கான அன்பான விவாதமாய் இருந்தால் அதுபோல சிறந்த பொழுது வேறில்லை. எனவே எப்போதும் ஈகோ அரக்கன் உங்கள் மனதை ஆக்கிரமிக்காமல் பார்த்துகொள்ளுங்கள்..முக்கியமாக விவாதங்களில்போது..!

என்ன நண்பர்களே.. படிச்சாச்சாஇனிமேலாவது பாத்து பக்குவமா நடந்துக்குவோம்!! 
அப்பத்தான் விழும் அடியிலிருந்து கொஞ்சமாச்சும் தப்பிக்கலாம்..!!



பொறுமையாக வாசித்ததற்கு நன்றிகள் பல....
இன்னும் மற்ற updateகளை கூடிய விரைவில் எதிர்பாருங்கள்......


உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் அன்பு நண்பன் 
ஸ்ரீநிவாசன்.... 
Visit Us @ 
www.MumbaiHangOut.Org

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?
ஒரு பெண்ணின் முதல் காலை ஓவியம் என்பதை
கோலத்தை மிதிக்கும் போது ..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?
நாம் அமரும் சீட்டை தந்தால் என்னவென்று..
ஒரு அரை மூதாட்டி அருகே நின்றபோது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?
அவருக்கு வாகனத்தில் இடம் கொடுத்தால் என்னவென்று..
ஒரு முடவர் வேர்த்துகொட்டி உங்களை கடந்தபோது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?
ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி அவர்களிடம் பேசினால் என்னவென்று
உங்கள் மூத்தோர்கள் வீட்டில் முடங்கி இருக்கும்போது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?
சர்க்கரை அளவை தெரிந்துகொண்டால் என்னவென்று
நீங்கள் குலாப் ஜாமூனும்,ஜிலேபியையும் சாப்பிடும்போது..

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?
நாம் வாழக் கற்றுகொண்டோமா என்று..
உங்கள் குழந்தைக்கு வாழ கற்றுகொடுக்கும்போது..?

நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?
நாம் மனிதராய் பிறந்ததன் பயன் என்னவென்று..
நீங்கள் நல்ல மனிதர் என புகழப்படும்போது...!!