Blogger news

Welcome to myZone and thanks for ur visit ((((ஸ்ரீநிவாஸ்))))

Blogger templates

மர்பி விதிகள் - 1 - 500

1947 முதல் 1949 வரை MX981 என்னும் புராஜக்ட் எட்வர்ட்ஸ் விமானப் படைத் தளத்தில் (முராக் எனும் இடத்தில்) ஒரு அறிவியல் சோதனை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது.

அதில் எட்வர்ட் மர்பி அவர்கள் மின்சார மீட்டர்களைப் பார்க்கும் வேலை செய்து வந்தார். அதில் ஏற்பட்ட ஒரு தவறுக்கு அவரது உதவியாளரைக் காரணம் காட்டி சொன்னதே முதல் மர்பி விதியாகும். அந்த விதி, "If that guy has any way of making a mistake, he will." அதன் பின்னரே, மிகவும் பிரசித்தி பெற்ற "ஒரு விஷயம் தவறாக நடக்க வாய்ப்பிருக்குமேயானால், அது தவறாகவே நடக்கும்" - "If it can go wrong, it will" போன்ற விதிகள் அவரால் சொல்லப்பட்டன.


ஆனால் இது வெளியே வந்ததற்கு முக்கியக் காரணம், அவரது மேலதிகாரி, ஸ்டேப் (Stapp) என்பவர் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தனது உதவியாளர் மர்பியை மறக்காமல் குறிப்பிட்டு, அவரது இந்த விதிகளைத் தாங்கள் உதாசீனப்படுத்தாமல் கவனத்துடன் செயல்பட்டதால் தங்களால் சாதிக்க முடிந்தது என்று கூறியது தான்.


மர்பி விதிகள்:
1. ஒரு விஷயம் தவறாக நடக்க வாய்ப்பு இருக்குமேயானால் அது தவறாகவே நடக்கும்.

2. நிறைய விஷயங்கள் தவறாக நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் நம்மை எது அதிகமாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறதோ அதுவே தவறாக நடக்கும்!

3. ஒரு விஷயம் தவறாக நடக்கவே வாய்ப்பில்லையென்றால் அது நிச்சயம் தவறாகவே நடக்கும்!

4. நாம் ஒரு விஷயத்தில் நான்கு விதமான தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கணித்தோமேயானால் அது எல்லாவற்றையும் மீறி நாம் எதிர் பாராத வகையில் எதிர்பாராத நேரத்தில் ஐந்தாவது தவறு வரும்.

5. எந்த விஷயமும் மாறாத பட்சத்தில் நிகழ்வுகள் எப்போதுமே மோசமான கட்டத்திலிருந்து மிக மோசமான கட்டங்களுக்கே செல்லும்.

6. எல்லாமே சரியாக நடப்பது போல் தோன்றினால் நீங்கள் எதையோ கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

7. இயற்கை எப்போதுமே தனக்குள் தவறை ஒளித்து வைத்துள்ளது. ஆனால் அது எப்போதுமே அதை அதிக நேரத்திற்கு மறைத்து வைப்பதில்லை.

8. புன்னகை புரியுங்கள். நாளை இதை விட மோசமாகத் தான் இருக்கும்.

9. எல்லா விஷயங்களும் ஒரே நேரத்தில் தான் தவறாக நடக்க ஆரம்பிக்கும்.

10. உடைபடும் பொருளும் அதன் மதிப்பும் எப்போதுமே எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

11. எந்த ஒரு விஷயத்தையும் முட்டாள்தனமே இல்லாமல் படைக்க இயலாது. ஏனென்றால் முட்டாள்கள் அவ்வளவு அறிவு ஜீவிகள்.

12. எந்த ஒரு விஷயமும் நீங்கள் உணர்வது போல் அவ்வளவு எளிதில்லை.

13. ஒவ்வொரு தீர்வுமே ஒரு பிரச்சினைக்கு வழிகாட்டி.

14. ஒரு தாளில் உள்ள தகவல் எவ்வளவு தூரம் உங்களால் படிக்க இயலாமல் இருக்கிறதோ அவ்வளவு தூரம் அது முக்கியத்துவம் வாய்ந்தது!

15. வெண்ணெய் தடவிய பிறகு கீழே விழும் ரொட்டி எந்தப் பக்கம் தரையில் விழும் என்பது உங்கள் கார்பெட்டின் விலையைப் பொருத்தது!

16. கிழே விழும் ஒரு பொருள் எந்த இடத்தில் விழுந்தால் அதிக நட்டத்தைக் கொடுக்குமோ அந்த இடத்தில் தான் விழும்.

17. எந்த ஒரு தொலைந்த பொருளும் அதற்கான மாற்றை வாங்கியவுடனேயே கிடைத்து விடும்.

18. நீங்கள் தொலைத்த இடத்தில் தான் தேடவேண்டும்.

19. நீங்கள் எவ்வளவு அலைந்து கஷ்டப்பட்டு ஒரு பொருளை வாங்கினாலும் நீங்கள் வாங்கியவுடன் மலிவாக இன்னொரு இடத்தில் கிடைத்தே தீரும். (அது உங்கள் மனைவியின் கண்களில் தான் முதலில் படும்!)

20. நீங்கள் ஒரு வரிசையில் நின்று கொண்டிருந்தால் அடுத்த வரிசை தான் வேகமாக நகர ஆரம்பிக்கும்.
21. உங்களுக்கு ஒரு கடன் கிடைக்க வேண்டுமானால் அது உங்களுக்கு தேவையில்லை என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும்.

22. அது சிக்கிக் கொண்டால் அழுத்தம் கொடுங்கள். உடைந்து விட்டால்?! எப்படியும் மாற்றத் தானே போகிறீர்கள்! ஹி ஹி.

23. ஒரு பழுதான பொருளை பழுது பார்ப்பவரிடம் காட்டும் போது (மட்டும்) அழகாக வேலை செய்யும்!

24. எந்த ஒரு முட்டாளும் கூட பயனடையுமாறு ஒரு விஷயத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் முட்டாள்கள் மட்டுமே அதில் பயன் பெற முடியும்.

25. எல்லொரிடமும் பணக்காரனாவதற்கான வழிமுறை இருக்கிறது. ஆனால் அது பயன் மட்டும் தராது!

26. முட்டாள்களுடன் விவாதம் வைத்துக் கொள்ளாதீர்கள். பார்ப்பவர்களுக்கு (யார் முட்டாள் என்று) வித்தியாசம் தெரியாமல் போய் விடும்.

27. நீங்கள் எந்த விளையாட்டில் நன்றாக விளையாடினாலும் அது தனியாக விளையாடும் போது மட்டுமே நிகழும்.

28. நீங்கள் யாரைக் கவுக்க வேண்டும் (?!) என்று நினைத்து விளையாடிக் காட்டுகிறீர்களோ அப்போது தான் தப்பாக விளையாடுவீர்கள்.

29. நீங்கள் செய்யும் அரிய பெரிய கண்டுபிடிப்புகள் உடனே மறந்து போகும். உப்புக்குச் சப்பான விசயங்கள் மறப்பதே இல்லை.

30. நீங்கள் எவ்வளவு தாமதமாகச் செல்கிறீர்களோ அவ்வளவே தான் நெரிசலும் இருக்கும்.

31. நீங்கள் எவ்வளவு முட்டாள்தனமாக நடந்துகொள்வீர்களோ அவ்வளவு தூரம் அனைவரும் கவனிக்கும் படி நடந்து கொள்வீர்கள்.

32. தபால் பெட்டி எப்போதுமே சாலையின் மறுபுறத்தில் தான் இருக்கும்.

33. நீங்கள் பட்டங்களை வேண்டுமானால் வாங்கலாம். மூளையை வாங்க முடியாது.

34. குழப்பங்கள் நேர்த்தியாக இருப்பதனால் எப்போதுமே வெற்றியடைகின்றன.

35. நீங்கள் புது செருப்பு அணியும் போது தான் அனைவரும் அதை மிதித்து அழுக்காக்குவார்கள்.

36. எது செய்தாலும் நடக்கவில்லையா? சுத்தியலுக்கு வேலை வந்து விட்டது என்று அர்த்தம்.

37. நீங்கள் எந்த விதிகளை முழுமையும் படித்து முடிக்கிறீர்களோ உடனே அது மாற்றப்பட்டிருக்கும்.

38. எந்த ஒரு வேலையையும் செய்து முடித்தவுடன் அதை எளிதாக முடிப்பதற்கான வழி தென்படும்.

39. காற்று எப்போதுமே உங்கள் விக்குக்கு எதிர்புறமாகவே வீசும்.

40. ஒரு கண்ணாடி ஜன்னலில் அழுக்கு இருப்பதாகத் துடைத்தால் அது ஜன்னலின் மறுபுறத்தில் தான் இருக்கும்.
41. ஒரு விலை மதிக்க முடியாத பொருள் எடுக்க முடியாத இடத்தில் விழுந்து விட்டதென்றால்,அந்தப் பொருளுக்கும் உங்களுக்கும் உள்ள தூரம் ஒரு விரற்கிடைக்கும் குறைவாகவே இருக்கும். அவ்வாறு இல்லாமல் குறைவாக இருந்ததென்றால் நீங்கள் தொட்டவுடன் அந்த தூரத்திற்கு அது சென்று விடும்.

42. உங்கள் குடையின் அளவுக்கும் மழையின் அளவுக்கும் எப்பொதுமே எதிர்விகிதம் தான்.

42. எந்த ஒரு சிறிய பிரச்னைக்கும் பின்னாலும் ஒரு பெரிய பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.

43. உங்கள் நகத்தை வெட்டிய ஒரு மணி நேரத்தில் அதை வைத்து செய்ய வேண்டிய வேலை உங்களுக்கு வந்து சேரும்!

44. உங்களுக்கு தேவையான கோப்பு எப்போதுமே அவிழ்க்க முடியாத கட்டுக்கு அடியில் தான் இருக்கும்.

45. பொது அறிவு அத்தனை பொதுவானது அல்ல!

46. அதிகாரம் என்பது எடுத்துக் கொள்ளப்படுவது. கொடுக்கப்படுவதே இல்லை.

47. இரண்டு சரியானவைகள் சேர்ந்து ஒரு தவறாவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் இரு தவறுகள் சேர்ந்தால் மூன்றோ, நான்கோ ஆவதற்குத் தான் வாய்ப்பு இருக்கிறது.

48. உண்மை உங்கள் பக்கம் இருந்தால் யாருமே அதை நம்புவதில்லை.

49. உலகில் இரண்டு விஷயங்கள் அதிகம் பரவி இருக்கிறது. ஒன்று - ஹைட்ரஜன், இரண்டு -முட்டாள்தனம்.

50. உங்கள் செயலில் 50% சரியாக நடக்க வாய்ப்பிருக்கின்றது என்றால் 75% தவறாகவே செய்வீர்கள்.
51. நீங்கள் ஒரு விஷயம் தவறாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்த்தும் அது சரியாகவே நடந்ததென்றால், அது தவறாகவே நடந்திருக்குமேயானால் உங்களுக்கு லாபத்தை ஈட்டித் தந்திருக்கும்.
52. முட்டாள்தனத்திற்கும் அறிவுஜீவித்தனத்திற்கும் உள்ள ஒரே வேற்றுமை அறிவுஜீவித்தனத்திற்கு எல்லை உண்டு.

53. யார் ஒருவரால் முடிவு எடுக்க இயலாதோ அவரால் தவறுகளை செய்யவே முடியாது.

54. ஓராயிரம் வருடத்துக்கு மேலும் ஒரு விஷயம் தவறாக நடக்காமல் சரியாக நடந்து வந்து கொண்டிருக்கிறதென்றால் அது இப்போது தவறாக நடந்து விடும்.

55. நீங்கள் தவறு நடந்து கொண்டிருக்கும்போது தான் அந்த விஷயம் சரியாக நடந்து கொண்டிருப்பதாக உணர்வீர்கள்.

56. இந்த விதிகளைத் தெரிந்து வைத்திருப்பதால் உங்களுக்கு ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை.

57. உங்களுக்கு முன்னால் வரிசையில் நிற்பவர் மட்டுமே இருப்பவர்களிலேயே அதிக நேரம் எடுத்துக் கொள்வார்.

58. கவலையே படாதீர்கள். எந்த ஒரு பிரச்னைக்கும் அதைவிட ஒரு பெரிய பிரச்னை தான் தீர்வாக அமையும்.

59. மர்பி விதிகள் பற்றி பார்க்க நினைக்கும் போது மட்டும் இந்த பக்கம் திறக்காமல் இருக்கும்!

60. வெற்றியின் பாதை எப்போதுமே சீரமைப்பில் இருக்கிறது.

61. நீங்கள் ஒரு வேலையைச் சரியாகச் செய்தால் அதைத் தான் தான் செய்தேன் என்று மார்தட்டிக் கொள்ள ஒருவர் இருப்பார். அதில் பிரச்னை வரும் வரை. அதற்கு பின் நீங்கள் தான் பொறுப்பு.

62. மர்பி விதிகள் பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள். எப்படியும் அதன் படி நடக்கத் தான் போகிறது.

63. ஒரு மேதாவி என்பவர் யாரென்றால் யார் ஒருவர் நுணுக்கமான விஷயங்களைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறாரோ அவர் தான். எவ்வளவு நுணுக்கம் என்றால் "ஒன்றுமில்லை" என்பது வரை. அதாவது ஒன்றுமில்லாத விஷயத்தை அதிகம் அறிந்து வைத்திருப்பவர் தான் மேதாவியாம்!

64. ஒருவரிடம் 300 கோடி நட்சத்திரங்கள் இருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள் நம்பி விடுவார்.ஆனால் பக்கத்து மேசையில் தற்போது தான் வண்ணம் பூசப்பட்டிருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள், அதைத் தொட்டுப்பார்க்காமல் விட மாட்டார்!

65. எந்த ஒரு வேலையும் மதிப்பீடுக்குள்ளும், நேரத்திற்குள்ளும் முடிக்கப்பட்டதே இல்லை.

66. ஒரு நிர்வாகத்தின் மூட நம்பிக்கையே அப்படி ஒரு நிர்வாகம் இருப்பதாக அனைவரும் கருதுவது தான்.

67. புது இயந்திரங்கள் புது வித பிரச்னைகளையே உருவாக்கும்.

68. தவறு செய்தல் மனித இயற்கை. ஆனால் அது பூதாகரமாக உருவெடுக்க ஒரு கணினி தேவை.

69. ஒரு கணினி 20 ஆட்கள் 20 ஆண்டுகளாக செய்ய முடியாத தவறுகளைக்கூட 2 விநாடிகளில் செய்து முடித்து விடும்.

70. ஒரு விஷயத்தில் மேதாவியைத் தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தால் யார் அந்த வேலைக்கு அதிக பணச் செலவும், நேரமும் ஆகக்கூடும் என்று கணிக்கிறாரோ அவரையே தேர்ந்தெடுங்கள்.

71. உங்களுக்கு எந்த வாடிக்கையாளர் லாபம் அதிகம் அளிப்பாரோ அவரைத் தான் நமது எதிராளி முதலில் தொடர்பு கொள்வார்.

72. எந்த ஒரு எளிய விதியும் கஷ்டமான வார்த்தைகளாலேயே விளக்கப்பட்டிருக்கும்.

73. பழுதாகாத எந்த ஒரு பொருளையும் பழுது பார்க்காதீர்கள். ஏனென்றால் அது பழுதாகும் சமயத்தில் உங்களால் பழுது பார்க்க இயலாது.

74. தண்டவாளத்தை மட்டும் பார்த்து ரயில் எந்தப்புறம் சென்றது என்று சொல்ல இயலாது.

75. நீங்கள் சரியாகக் குழம்பவில்லை என்றால் உங்களுக்கு அனைத்துத் தகவல்களும் சரியாக வந்து சேரவில்லை என்று அர்த்தம்.

76. எந்த ஒரு செயலியின் புதுப் பதிப்பும் நீங்கள் எப்போதும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் கட்டளையை மாற்றியமைப்பதாகவே இருக்கும்.

77. இந்த அவசர உலகத்தில் நமக்கு என்ன தேவை என்பதை மட்டும் நம்மால் படிக்க முடிவதில்லை.

78. எந்த ஒரு எளிதான விஷயத்தையும் கஷ்டமான விஷயமாக்குவது எளிது. ஆனால் கஷ்டமான காரியங்களை எளிதாக்குவது அவ்வளவு எளிதல்ல.

79. ஒரு இயந்திரத்தின் அடிக்கடி மாற்ற வேண்டிய பொருள் கைக்கு எளிதில் எட்டாத இடத்திலேயெ இருக்கும்.

80. ஒரு ரூ.10,000/- மதிப்புள்ள பொருளைக் காக்க ரூ.10/- மதிப்புள்ள ஃப்யூஸ் போட்டால் அது ரூ.10/- ஃயூஸைக் காக்க 10,000/- மதிப்புள்ள பொருள் வெடித்துவிடும்.

81. பிரதி எடுக்கும் இயந்திரம் முக்கியமான பக்கம் வரும் போது மட்டுமே சிக்கிக் கொள்ளும்.

82. உங்களை விட்டால் இந்த இடத்துக்குத் தகுதியான ஆள் வேறில்லை என்று நிர்வாகம் நினைக்கும் அளவுக்கு நடந்து கொள்ளாதீர்கள். நடந்து கொண்டால் பின்னர் எப்படி உங்களுக்கு உத்தியோக உயர்வு அளிக்க இயலும்?

83. உங்களுக்கு சம்பள உயர்வு கொடுக்கப்பட்ட மாதத்திலிருந்து இறுதியில் பையில் இருக்கும் பணம் குறைவாகவே இருக்கும்.

84. எந்த கடிதத்திலும் இரண்டு கேள்விகளை மறந்தும் கேட்டு விடாதீர்கள். எந்தக் கேள்விக்கு மிகவும் பதிலை எதிர்பார்த்திருக்கிறீர்களோ அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் இருக்காது.

85. முதலாளி உற்பத்தி தரத்தைப் பற்றி சொல்லும்போது அவரைப் பற்றி சொல்கிறார் என்று நினைத்து விடாதீர்கள்.

86. முதலாளி சொன்னால் ஆண்டவன் சொன்ன மாதிரி.

87. தவறுதல் மனித இயல்பு. ஆனால் மன்னித்தல் நிறுவனத்தின் வழக்கம் இல்லை.

88. கடைசியாக நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர் தான் எந்தத் தவறுக்கும் பொறுப்பாளி. மீண்டும் வேறொருவர் வெளியேறும் வரை.

89. நீங்கள் நல்லவராக இருந்தால் அவ்வளவு வேலையும் உங்களிடம் தான் ஒப்படைக்கப்படும்.ரொம்ப நல்லவராய் இருந்தால் வேலையை விட்டு வெளியேறிவிட வேண்டியது தான்.

90. மக்கள் ஒரு முறை செய்த தவறு மற்றும் ஒரு முறை செய்வதில்லை. இரண்டு, மூன்று,நான்கு, ஐந்து முறைகள் என்று தான் செய்வார்கள்.

91. புதன்கிழமை ஏன் யாருக்குமே உடல்நலக்குறைவே ஏற்படுவதில்லை?

92. விதிகளை அனுசரிப்பதால் மட்டுமே வேலை முடிந்து விடாது.

93. உங்கள் பதவியின் பெயர் எவ்வளவு நீளமாக இருக்கிறதோ அவ்வளவு தூரம் உங்கள் வேலை முக்கியமில்லாததாக இருக்கும்.

94. விளம்பரத்தில் ஒரு சலுகையைப் பார்த்து விட்டு அவசரமாக போனால் தான் தெரியும் அந்த சலுகை நேற்றுடன் முடிந்தது என்றும் அந்தப் பொருளின் விலை அதிகரித்து விட்டது என்றும்.

95. தபாலில் காசோலைகளை விட பட்டி(பில்?)களே அதிக வேகத்தில் வந்து சேரும்.

96. அனைத்து முக்கியமான வேலைகளும் வெள்ளிக்கிழமை மாலை உங்களுக்கு வந்து சேரும்.அவை யாவும் மறு திங்கட்கிழமை காலைக்குள் முடிக்கப்பட வேண்டியிருக்கும்.

97. வேலையைக் கச்சிதமாக முடித்தவுடன் சம்பள உயர்வைப் பற்றி பேசவே பேசாதீர்கள்.

98. முதலாளி எப்போது சிடுசிடு என்று இருக்கிறாரோ அது தான் சம்பள உயர்வு பற்றிப் பேச சரியான நேரமாகும்.

99. பிரச்னை இருந்தால் தானே உங்களைத் தேட வேண்டும்? எனவே பிரச்னை வரும் நேரமே சம்பள உயர்வைப் பற்றி விவாதிக்க சரியான நேரமாகும்.

100. வெள்ளத் தனையது மலர் நீட்டம். உங்கள் வருமானத் தனையது உங்கள் செலவு.


மர்பி விதிகள் - 101 - 200
101. ஆசிரியருக்கு மிகவும் ஆர்வமாக இருக்கும் பாடம் மாணவர்களுக்கு மிகவும் அறுவையாகவே இருக்கும்.

102. பாடம் நடத்துவதற்கு ஆசிரியர் எடுத்துக்கொள்ளும் நேரமும் அதை மாணவர்கள் பதிய வைத்துக் கொள்ளும் அளவும் எப்போதும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

103. மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்கினால் அதன் பெருமை மாணவர்களையே சாரும்.குறைந்த மதிப்பெண் வாங்கினால் வாத்தியார் தான் சரியாக நடத்தவில்லை.

104. எந்த மாணவனை அடிக்க ஆசிரியர் கையை ஓங்குகிறாரோ அவன் தான் பள்ளியின் தாளாளரின் பையனாக இருப்பான்.

105. புதிதாக நமது பள்ளிக்கு வந்து சேரும் மாணவர்கள் இதற்கு முன் எதுவுமே நடத்தாத பள்ளியிலிருந்து தான் வருவார்கள்.

106. நல்ல மாணவர்கள் வெளியேறிக் கொண்டே இருப்பார்கள்.

107. வகுப்பு நேரத்தை விட ஓய்வு நேரம் மிக அதிகமாக ஓடும்.

108. ஒரு வகுப்பில் 20 பேர் தான் இருக்க முடியும் என்றிருந்தால் உங்கள் விண்ணப்ப எண் 21ஆக இருக்கும்.

109. இறுதித் தேர்வில் 80% கேட்கப்படும் கேள்வி நீங்கள் வராத அந்த ஒரு நாளில் நடத்தப்பட்ட பாடத்திலிருந்தும், நீங்கள் படித்திராத அந்த ஒரே ஒரு புத்தகத்திலிருந்தும் தான் கேட்கப்படும்.

110. (அ) நீங்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம் என்றிருந்தால் நீங்கள் புத்தகத்தை மறந்து வைத்து விடுவீர்கள்.

(ஆ) நீங்கள் வீட்டில் வைத்தே தேர்வு எழுதலாம் என்றிருந்தால் வீட்டையே மறந்து விடுவீர்கள்.

(இ) இணையத்தில் வைத்து எழுதப்படும் தேர்வில் உங்கள் கடவுச் சொல் மறந்து போகும்(!)


111. அம்மாவிடம் இருந்து நீங்கள் இரண்டே சமயங்களில் தான் அறிவுரை பெற முடியும். நீங்கள் விரும்பும்போதும் விரும்பாத போதும்.

112. உங்கள் அம்மா ஒருவர் தான் உங்களை விட உங்களைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருப்பவர் ஆவார்.

113. நீங்கள் கேட்டுக் கடைபிடிக்காத அறிவுரை மட்டுமே உங்கள் அம்மாவிடம் இருந்து வந்த மிகச் சிறந்த அறிவுரையாக இருக்கும்.

114. நீங்கள் அம்மாவிடம் ரகசியத்தை மறைத்து விட்டதாக நினைக்கிறீர்களா? உங்கள் உள்ளாடையை யார் மாட்டி விட்டது - மறந்து விட்டீர்களா?

115. உங்கள் காதலி ஒரு தொலைபேசி எண்ணைக் கூறும் போது தான் அதை சேமிக்க ஒரு தாளும் உங்களிடம் இருக்காது.

116. உங்கள் கணிணியின் வன்பொருள் ஏதாவது பழுது பட்டால் அதைப் பார்க்கும் பழுது பார்ப்பவர் மென்பொருளைக் குறை கூறுவார்.

117. முந்தைய விதியை மாற்றிப்போட்டுக்கொள்ளுங்கள்!

118. ஒரு கணிணி மென்பொருளில் கண்டுபிடிக்கப்படாத தவறுகளின் எண்ணிக்கைக்கு அளவே கிடையாது.

119. ஏற்கனவே தாமதமாக இருக்கும் ஒரு மென்பொருள் வேலை புதிதாக ஆட்களைச் சேர்த்தால் இன்னும் தாமதமாகும்.

120. ஒரு கணிணியைப் பழுது பார்க்கும் ஒரு நபருக்கும் கணிணிக்கும் இடைப்பட்ட தூரமும் அக்கணிணியில் ஏற்படும் பழுது நீங்குவதும் எப்பொதும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

121. நீங்கள் அதிகம் விரும்பும் செயலியை இயக்குவதற்கு தேவையான நினைவிடம் உங்களிடம் எப்போதும் இருக்காது.

122. நீங்கள் நினைவிடம் வாங்கி விட்டால் வன் தட்டில் இடமிருக்காது.

123. உங்கள் தரவுகள் நினைவிடத்துக்கு தகுந்தாற்போல் விரிவடைந்து கொள்ளும்.

124. உங்களிடம் நினைவிடமும் இருந்து, வன் தட்டில் இடமும் இருந்தால் அந்த மென்பொருள் இயங்காமல் உங்கள் கணிணியையும் செயலிழக்கச் செய்துவிடும்.

125. அவ்வாறு செயலிழக்கச் செய்யாது இருந்தால் அது அதற்கான தக்க தருணத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

126. நீங்கள் எவ்வளவு தான் பேரம் பேசி வாங்கினாலும் நீங்கள் வாங்கியவுடன் கணிணியின் விலை குறைந்து விடும்.

127. கணிணியில் உள்ள ஒரு பாகத்தின் உபயோகமிழக்கும் வேகமும் அதன் விலையும் எப்போதும் நேர் விகிதத்திலேயே இருக்கும்.

127. ஒரு மென்பொருளினை சந்தைப்படுத்துவதற்கு முன் 1000 நபர்கள் அதை சோதித்திருந்தாலும் அதை விலை கொடுத்து வாங்கி உபயோகிப்பவரே அனைத்து பிழைகளையும் கண்டுபிடிப்பார்.

128. உங்கள் கணிணியில் பழுதாகும் பொருள் மட்டுமே உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதும் அதன் இருப்பு இல்லாதிருப்பதும் விந்தையே இல்லை.

129. மாறிலிகள் மாறிவிடும்.

130. மாறிகள் மாறுவதில்லை.

131. உங்கள் கையிலிருந்து விழும் ஒரு பொருள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அவ்வளவு தூரம் அது கைக்கெட்டாத இடத்தில் போய் விழும்.

132. உங்கள் முதலாளியைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டால் இணையத்தில் மேயுங்கள்.

133. நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உங்கள் முதலாளி நீங்கள் இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது தான் உங்கள் பின்னால் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார்.

134. நீங்கள் சேமித்து வைக்காத முக்கியமான விஷயம் எந்த வன் தட்டில் இருக்கிறதோ அது தான் முதலில் பழுதாகும்.

135. மர்பி விதிகள் சரியாக இருந்தால் என்னால்................................................. [connection reset - error message 928 ]

136. எந்த ஒரு பிரச்னையும் அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் எளிய முறையில் மட்டுமே அதைத் தீர்க்க முடியும்.

137. எந்த ஒரு மென்பொருளும் 5 பிழைகளைக் கொண்டது. ஆனால் இது வரை கண்டுபிடித்த பிழைகள் கணக்கில் சேர்க்கப் பட மாட்டாது.

138. எந்தக் கணிணி உபயோகிப்பாளருக்கும் தேன் வந்து பாயும் மழலை வார்த்தைகள் "அப்பா!இந்த C: பார்மட் செய்யப்படுகிறது என்று கணிணி சொல்கிறதே அதன் அர்த்தம் என்ன ?" என்று குழந்தை கேட்பது தான்.

139. நீங்கள் ஒரே வரியில் ஒரு மென்பொருள் எழுதினாலும் அதிலும் பிழை இருந்தே தீரும்.

140. எந்த ஒரு மென்பொருளாக இருந்தாலும் நீங்கள் அதை முழுமையும் படித்தறிந்த உடனேயே அதன் புதிய பதிப்பு வெளியிடப்படும்.

141. ஒரு வைரசினால் ஏற்படும் பாதகங்களும் அது உங்கள் கணிணியைத் தாக்கும் வாய்ப்பும் நேர் விகிதத்தில் இருக்கும்.

142. நீங்கள் கடவுச் சொல் மாற்றும் வேகமும் அதை மறக்கும் வேகமும் நேர் விகிதத்தில் இருக்கும்.

143. கடவுச் சொல்லை மாற்றவே இல்லை என்றால் அதைத் தான் அடுத்தவர் எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்களே!

144. எவ்வளவு அதிக நேரம் ஒரு மென்பொருள் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய எடுத்துக் கொள்கிறதோ அவ்வளவு தூரம் அது செயல்படுவதற்கு வாய்ப்பில்லை.

145. ஒரு மென்பொருள் நல்ல மென்பொருள் தான் பிழை இல்லாதிருக்கும் வரை - ஆனால் அது சாத்தியமே இல்லை.

146. ஒரு மென்பொருளில் பிழை வரும் வாய்ப்பு கணிணியை எத்தனை பேர்கள் பார்க்கிறார்கள் அவர்களின் முக்கியத்துவம் என்ன என்பதைப் பொருத்தது.

147. எந்த ஒரு மென்பொருள் கன கச்சிதமாக எந்த ஒரு பிழையுமின்றி எதிர்பார்த்தபடி செயல்படுகிறதோ அது வைரசைத் தவிர வேறெந்த மென்பொருளாக இருக்க முடியும்?

148. ஹும். இந்த மனிதர்கள் கணிணியை உபயோகிப்பது எவ்வளவு எளிதென்கிறார்கள்? நாம் கேட்பதோ நேரம் என்ன என்று. அவர்கள் சொல்வது எவ்வாறு ஒரு கடிகாரத்தை செய்வது என்று.

149. எல்லா பிழைகளையும் சரி செய்யும் ஒரே கட்டளை பார்மட் C: என்பது தான்.

150. உங்கள் வேலையில் உள்ள தவறுகளை நீங்கள் உங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு தான் காண்பீர்கள்.

151. நீங்கள் எந்த ஒரு கடிதத்தை அச்சடிக்க கட்டளை கொடுத்தாலும் முதல் பக்கத்தில் கடிதம் அச்சடிக்கப்பட்டு 2வது பக்கத்தில் கடைசி வரி மட்டும் அச்சடிக்கப்படும்.

152. 99% ஒரு கோப்பை இறக்கம் செய்த உடனேயே மின் இணைப்பு போய் விடும்.

153. உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கையேட்டில் உங்கள் பிரச்னையைத் தவிர அனைத்தும் விளக்கப்பட்டிருக்கும்.

154. மேற்கண்ட மென்பொருள் சம்பந்தப்பட்ட அனைத்து விதிமுறைகளும் மைக்ரோசாப்ட்க்கு(எந்த பதிப்பாக இருந்தாலும்) கச்சிதமாக பொருந்தும்.

155. தானியங்கி தவறு நீக்கி (Auto correct) தவறை நீக்குவதில்லை. தவறை உருவாக்கும்!

156. மாதாந்திர சேவை புரியும் பணியாளர் (AMC worker) வரும் வரை கணிணி ஒழுங்காக தான் வேலைபார்த்துக் கொண்டிருந்திருக்கும்.

157. வன் தட்டு பழுதினால் வைரசும் அழிந்து போகும். இதனால் நீங்கள் விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கும் வைரசு நீக்கிக்கு வேலை இருக்காது.

158. தண்ணீரின் மேல் நடப்பதும் ஒரு மென்பொருளை அதன் தேவைக்கேற்ப (Features)உருவாக்குவதும் எளிது தான். அது உறைந்திருக்கும் வரை. (Frozen)

159. உங்கள் இ-தபால் பெட்டியின் அளவும் உங்களுக்கு வரும் அனாமதேய தபால்களின் அளவும் எதிரெதிர் விகிதத்தில் இருக்கும்.

160. ஒரு கணிணி அதை உபயோகிப்பாளரின் அறிவினை நிகர்த்தது.

161. ஒரு வைரசு உங்கள் கணிணியைத் தாக்கிய பின்னரே அதை வைரசு நீக்கி கண்டறியும்.

162. மூளை x அழகு x வாய்ப்பு = மாறிலி (இதில் மாறிலியின் மதிப்பு எப்போதுமே 0 ஆகும்)

163. உங்கள் காதலி உங்கள் மேல் வைத்திருக்கும் காதலின் அளவு நீங்கள் அவள் மேல் வைத்திருக்கும் காதலின் அளவுக்கு எதிர் விகிதத்தில் இருக்கும்.

164. பணத்தால் காதலை வாங்க முடியாது தான். ஆனால் அது உங்களை ஒரு பேரம் பேசும் நிலையில் (bargaining position) வைத்திருக்கும்.

165. உங்கள் மனைவி உங்களை முழுவதும் புரிந்து கொண்ட நாள் முதல் உங்கள் சொல்லை காதில் வாங்குவதே இல்லை.

166. காதலை விட மோசமான விஷயங்கள் இருக்கின்றன. காதலை விட நல்ல விஷயங்களும் இருக்கின்றன. ஆனால் காதலுக்கு சமமாய் எதுவுமே இல்லை.

167. காதல் புத்திசாலித்தனத்தை கற்பனை எப்போது மிஞ்சுகின்றதோ அப்போது தான் ஏற்படும்.

168. பின் வரும் விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவும். 1. மது 2. மாது 3. இசை.முக்கியமாக இசையிடம்

169. அழகு தோல் வரை (skin deep). அழகின்மை எலும்பு வரை.

170. அறிவாளிக்கும் முட்டாளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை காதல் வந்து விட்டால்.

171. ஒரு பெண்ணின் உள்ளத்தை திறக்கும் திறவுகோல் எதிர்பாராத பரிசை எதிர்பாராத நேரத்தில் கொடுப்பதாகும்.

172. எப்பொதும் நடந்து கொண்டே இருக்கும் காதல் போரில் பெண்கள் ஏற்கனவே வென்று விட்டனர்.

173. எந்த ஒரு ஆணும் தான் தொடங்கி வைத்த விவாதத்தில் வெற்றி பெறுவதில்லை.

174. காதலுக்கு கண் இல்லை. திருமணம் தான் அந்த கண்ணைத் திறந்து வைக்கும்.

175. உங்கள் காதலி "விலையுயர்ந்த பொருள் எதையும் வாங்காதீர்கள்" என்று கூறி அதை நீங்கள் கடைப்பிடித்தால் தாடியுடன் அலைய வேண்டியது தான்.

176. நீங்கள் சரியான நேரத்துக்கு போய் சேர்ந்தீர்களேயானால் உங்கள் காதலி 20 நிமிடம் முன்னதாக வந்திருப்பாள். 20 நிமிடம் முன்னதாக நீங்கள் போய் சேர்ந்தால் 1 மணி நேரம் தாமதமாக வருவாள்.

177. ஒருவன் திடீரென முட்டாள்தனமாக நடந்து கொண்டால் காதலில் விழுந்து விட்டான் என்று பொருள்.

178. இப்போது (உங்கள் காதலியிடம்) எது ஆர்வமூட்டுகிறதோ அதுவே பின்னாளில் எரிச்சலூட்டும்.

179. நீங்கள் ஒரு பெண்ணை அழகாக இருக்கிறாளே என்று பார்த்தால் அதை நிரூபிப்பதற்கு ஒரு நண்பன் அவளுடன் கண்டிப்பாக இருப்பான்.

180. இரண்டு பேர் காதலில் விழுவதற்கு (falling in love) புவிஈர்ப்பு விசையை குற்றம் சொல்ல முடியாது.

181. காதலுக்கும் காய்ச்சலுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் காய்ச்சலுக்கு மருந்துண்டு.

182. உலகின் மிக அழகான பெண்மணி அழகில்லாத ஒரு ஆணைத் தான் மணப்பாள்.

183. காதல் ஒரு சிறந்த எதிரி அல்லது மோசமான நண்பன்.

184. எல்லோரும் காதலை நம்புகிறார்கள். அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?

185. தவறான ஒரு முடிவை நம்பிக்கையுடன் அறிவுபூர்வமாக எடுப்பதற்கு பெயர் தான் லாஜிக்(தமிழ் தெரியவில்லை. உதவுங்களேன்!)
(பாவம் தையல்காரர்கள். நம்மிடம் மாட்டிக் கொண்டார்கள்!)

186. நீங்கள் 6 பித்தான்களை தைக்க வேண்டியிருந்தால் உங்கள் பெட்டியில் 5 பித்தான்கள் தான் இருக்கும்.

187. நீங்கள் அவசரப்படும்போது தான் ஊசியில் துவாரம் சிறியதாக மாறிவிடும்.

188. நீங்கள் எவ்வளவு தவறாக தைக்கிறீர்கள் என்பது துணியின் விலையைப் பொருத்தது.

189. நீங்கள் தொலைத்த ஊசி உங்கள் மாமியார் வெறுங்காலுடன் நடக்கும் போது கண்டுபிடிக்கப்படும்!

190. நீங்கள் தைக்கும் உடை இரண்டு விதமாக இருக்கலாம். பெரியதாக அல்லது சிறியதாக.

(இப்போது புகைப்படக்காரர்கள்)

191. தானியங்கி கேமராக்கள் தானாக இயங்குவதில்லை.

192. உங்களால் உறுதியாக சொல்லமுடியவில்லை என்றால், பிலிமை வீட்டில் தான் வைத்து வந்திருப்பீர்கள்.

193. உங்களுக்கு தட்பவெப்ப நிலை எப்போதுமே எதிரி தான்.

194. வீட்டில் வேலை செய்யும் அனைத்து கேமராக்களும் வெளியிடங்களுக்கு செல்லும் போது தான் பழுதாக இருக்கும்.

195. அனுபவமில்லாத புதிய புகைப்படக்காரர் தான் புளிச்சர் (சரி தானா?) விருதை தட்டி செல்வார்.

196. புகைப்படக்காரர்கள் அவர்களை புகைப்படம் எடுக்க முடியாதபடி தான் இருப்பார்கள்.

197. காட்டுக்குள் புகைப்படம் எடுக்கப் போகும் போது இரண்டில் யாராவது ஒருவர் தான் எப்போதும் தயாராக இருப்பார். 1. நீங்கள் 2. விலங்கு.

198. மேற்கண்ட விதி குழந்தைகளுக்கும் பொருந்தும்.

199. கனகச்சிதமான புகைப்படம் என்று இதுவரை எந்த புகைப்படமும் இல்லை. (அப்படியா?)

200. கீழே விழும் குவியாடி தான் இருப்பதிலேயே விலையுயர்ந்தாகும்.

மர்பி விதிகள் - 201 - 300
201. ஒரு நீளமான சாலையில் ஒரு குறுகிய பாலமும் இரண்டு கார்களும் செல்வதாகவைத்துக்கொண்டால் (1) எப்போதும் அந்த இரண்டு கார்களும் எதிரெதிராகத் தான் வரும். (2)அவை சரியாக பாலத்தில் தான் சந்திக்கும்.

202. இருப்பதிலேயே அதிவேகமான கணிணி என்பது அது முடங்கிப்போகும் வேகத்தைக் குறிக்கும்.

203. ஒரு இயந்திரத்தை வடிவமைப்பவரின் முக்கிய பணி அவ்வியந்திரத்தை உருவாக்குபவரும் அதை பின்னாளில் பழுது பார்ப்பவரும் கஷ்டப்படும்படி வடிவமைப்பதாகும்.

204. நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் கேட்கமுடியாது. (கேட்க விரும்பும் நபர் உங்களுக்கு மேல் பதவியில் உள்ளவராக இருப்பார்)

205. உங்களால் ஒரு பதிலை ஜீரணிக்கமுடியவில்லை என்றால் நீங்கள் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாது.

206. ஒரு பிரச்னையைத் தீர்க்க முயற்சிக்கும் முன் உங்களுக்கு அதற்கான விடை தெரிந்திருந்தால் நல்லது. எல்லாவற்றிற்கும் முன்னால் விடைக்குண்டான பிரச்னை அது தான் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

207. உங்கள் விமானம் தாமதமாக இருக்கலாம். ஆனால் அந்த விமானத்தில் சென்று நீங்கள் பிடிக்க விரும்பும் அடுத்த விமானம் சரியான நேரத்தில் தான் சென்றிருக்கும்.

208. எந்த விஷயத்துக்குள்ளும் செல்வது எளிது தான்.

209. நீங்கள் எந்தத் திசை நோக்கி சென்றிருந்தாலும் உங்கள் இல்லத்துக்கு திரும்பி வரும் போது எதிர்காற்று தான் அடிக்கும்.

210. ஒரு வாகனத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சரக்கு மட்டும் எப்போதும் ஐந்து நாட்கள் கழித்து தான் வந்து சேரும்.

211. எந்தப் புத்தகமும் கடன் கொடுப்பதால் தொலைந்து விடாது. ஆனால் அதை நீங்கள் பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய நல்ல புத்தகம் என்று மட்டும் நினைத்திருக்கக் கூடாது.

212. நீங்கள் கடன் வாங்கி உபயோகப்படுத்த வேண்டிய ஒரு பொருள் உடையக் கூடியதாக இருந்தால், நீங்கள் நிச்சயம் கடன் வாங்குவீர்கள். அதை நிச்சயம் உடைப்பீர்கள்.

213. எது நல்ல அரசியலோ அது மோசமான பொருளாதாரமாகும். எது மோசமான அரசியலோ அது சிறந்த பொருளாதாரமாகும்.

214. எப்போதுமே உச்சியில் இருந்து கீழே இறங்குவது அதிக வேகத்தில் தான் நடைபெறும்.

215. உங்கள் காலணிக்குள் இருக்கும் சிறு கல் சரியாக எந்த இடத்தில் அழுத்தம் அதிகமாக இருக்கிறதோ அவ்விடத்தை நோக்கி தான் நகரும்.

216. நீங்கள் கஷ்டப்பட்டு சேரும் அந்த ஊரில் இருக்கும் ஒரே விடுதி நீங்கள் செல்லும் போது மட்டும் நிறைந்து தான் இருக்கும்.

217. பொது இடங்களில் (குறிப்பாக கல்யாண மண்டபம்) நீங்கள் விட்டுவிடக் கூடாத ஒரே பொருள் செருப்பு மட்டுமே. (அட மர்பிக்கு கூட இது தெரிந்தெருக்கே!?)

218. உங்கள் வீட்டில் உள்ள கொசு வர்த்திச் சுருளின் அளவும் கொசுக்களின் எண்ணிக்கையும் எதிர்மறையாக இருக்கும்.

219. வேகத்தடை இப்போது நீங்கள் சென்று கொண்டிருக்கும் வேகத்தை விட மூன்று மடங்கு குறைவான வேகத்தில் சென்றாலும் அல்லது மூன்று மடங்கு அதிக வேகத்தில் சென்றிருந்தாலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி இருக்காது.

220. உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனம் உங்களை விட குறைந்த வேகத்திலேயே செல்லும்.

221. ஒரு நம்பிக்கை எந்த அளவு மூடத்தனமாக இருக்கிறதோ அந்த அளவு அது அதிக மக்களைச் சென்றடையும்.

222. முதியவர்கள் என்பவர்கள் என்னை விட 15 வயது அதிகமானவர்கள் என்று தான் அனைவரும் நினைப்பார்கள்.

223. ஒரு கட்டுப்பாடற்ற சந்தைக்குள் ஒரு அரசாங்கம் கொடுக்கும் தலையீடு அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிப்பதாகவே அமையும்.

224. ஆற்று நீர் மூக்கு வரை வந்து விட்டதா? மறந்தும் வாயைத் திறந்து விடாதீர்கள்.

225. இருக்கும் வேலையைத் தக்க வைத்துக் கொள்வதை விட வேறு ஒரு வேலை தேடுவது எப்போதுமே கடினமானதாகும்.

226. எதையும் ஒரு விற்பனையாளர் விளக்கும் போது வாங்க வேண்டும் என்று முடிவு செய்யாதீர்கள்.

227. நிறைய பிரச்னைகளுக்கு பல தீர்வுகளோ அல்லது ஒரு தீர்வும் இல்லாத நிலையோ இருக்கும். ஒரு சில பிரச்னைகளுக்கு தான் ஒரே தீர்வு இருக்கும்.

228. ஒரு தீர்வு என்பது தவறாகவோ, சரியாகவோ, இரண்டுமாகவோ, இரண்டுமில்லாமலோ இருக்கலாம். நிறைய தீர்வுகள் கடைசி வகையைச் சார்ந்தவை.

229. பொதுவாக அனைத்து வாக்கியங்களுமே பொய்யானது தான், இந்த வாக்கியத்தைப் போல!

230. சாப்பாட்டைத் தான் சூடாக பரிமாற வேண்டும். அவசரமாக கண்டெடுத்த விடைகள் சூடானவை. அவற்றை ஆறவிட்டு பாருங்கள். அதிலுள்ள தவறுகள் தெரியவரும்.

231. நீங்கள் நுழைவு வாயிலில் இருந்து எவ்வளவு அதிக தூரத்தில் காரை நிறுத்தி விட்டு நுழைவு வாயிலை நோக்கி வருகிறீர்களோ அந்த அளவே குறைந்த தூரத்தில் இருந்து அப்போது தான் ஒரு காரை ஒருவர் வெளியேற்றிக் கொண்டு இருப்பார்.!

232. எல்லா மிதிவண்டிகளுமே 50 கிலோ எடையுள்ளவை. 30 கிலோ மிதிவண்டிக்கு 20 கிலோ சங்கிலியும் பூட்டும் தேவை. 40 கிலோ மிதிவண்டிக்கு 10 கிலோ சங்கிலியும் பூட்டும் தேவை. 50கிலோ மிதிவண்டிக்கு பூட்டோ சங்கிலியோ தேவையில்லை.

233. நீங்கள் மேடான பாதையில் மிதிவண்டியில் செல்லும்போது மட்டும் எதிர்காற்று வீசும்.

234. கடன் வாங்கி செலவழிப்பதாயிருந்தாலும் கூட வருமானத்திற்கு மேல் செலவு செய்யாதீர்கள்.

235. எந்த ஒரு புது தொழில் நுட்பம் வந்தாலும் பழைய தொழில்நுட்பம் சுத்தமாக அழிந்து விடுவதில்லை.

236. நீங்கள் நல்லபடியாக இருப்பதாக உணர்கிறீர்களா. கவலையே வேண்டாம். அந்த நிலை மாறிவிடும்.

237. இப்பொதைய நிலவரத்தில் வருமானமும் செலவும் ஒன்றை விட ஒன்று போட்டி போட்டுக் கொண்டு ஏறிக்கொண்டே இருக்கின்றன.

238. எல்லாமே உங்களை நோக்கி வருவதாக நினைக்கிறீர்களா? நீங்கள் சாலையின் வலது(இந்தியா) பக்கமாக போய்க் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!

239. ஒரு விதியின் எதிர் விதி மோசமானதாகத் தெரிந்தால் முதல் விதி புத்திசாலித்தனத்துக்கு இழிவானதாகவும், ஏற்கனவே சொல்லப்படாமல் இருந்திருக்க வேண்டியதாகவும் இருக்கும்.

240. தகவல் யாருக்குத் தேவையில்லையோ அவருக்கு விரைவாகச் சென்று சேரும்.

241. ஒரு பெரிய வேலையின் முடிவுறாத பகுதி அலுவலகத்தின் எந்தத் துறைக்கு அதிக சம்பளம் கொடுக்கிறோமோ அங்கே தான் நடைபெறாமல் இருக்கும்.

242. மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கும் ஒரு வாக்கியத்துக்கு, அடிக்கடி மாற்று விளக்கங்கள் வந்து கொண்டே இருக்கும்.

243. பொருளாதாரம் வளர்ச்சியடைகையில் மற்ற அனைத்தும் வீழ்ச்சியடைகின்றன.

244. ஒரு செயலியின் தரம் அந்த செயலியை உருவாக்கிய நிறுவனத்தைப் பிரதிபலிக்கும்.

245. எல்லாமே சாத்தியம் தான். ஆனால் சுலபமில்லை.

246. முதலாளித்துவம் இரண்டு இடங்களில் தான் சரிப்பட்டு வரும். வளர்ந்துவிட்ட நாடு அல்லது போர்க்களங்களில்.

247. வரலாறு எதையும் நிரூபிப்பதில்லை.

248. வளர்ச்சி என்பது யாதெனின், ஒவ்வொருவரின் அடிமனதிலும் உள்ள வருமானத்துக்கு மேல் செலவு செய்யத் துடிக்கும் துடிப்பு தான்.

249. ஒரு பதார்த்தம் எவ்வளவு அடைமொழிகளுடன் விளக்கப்பட்டிருக்குமோ அவ்வளவுக்கு அது சுவையின்றி இருக்கும்.

250. கார் சக்கரத்தில் காற்று இல்லாததால் தாமதமாக வந்ததாக மேலாளரிடம் சொன்னீர்களேயானால் மறு நாள் கார் சக்கரத்தில் காற்று இருக்காது.

251. குழப்பம் என்று வரும் போது வங்கியில் உள்ள கணக்கின் இருப்பு உங்கள் கணக்கை விட குறைவாகவே இருக்கும்.

252. நீங்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு விளக்கினாலும் கேட்கத் தான் ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

253. 1000 ரூபாய் கொடுத்து வாங்கினாலும் அதனுடன் 10 ரூபாய் பேட்டரி இணைப்பதில்லை.

254. எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பானாலும் அது அறிவியலாகட்டும், அரசியலாகட்டும்,பொருளாதாரமாகட்டும், கலையாகட்டும் அல்லது எதுவாகட்டும். கீழ்க்கண்ட 3 விமரிசனங்களைத் தாண்டி தான் வந்திருக்கும். (1) "இது நடப்பதற்கான சாத்தியக் கூறே இல்லை." (2) "இது நடக்க வாய்ப்பிருக்கலாம். ஆனால் இதனால் ஒரு உபயோகமும் இல்லை." (3) "இதைத் தான் நான் அப்போதே சொன்னேன். இது மாதிரி ஒன்று உண்டா என்று!"

255. சாலையில் ஆள் நடமாட்டத்தின் அளவும் உங்கள் கார் பழுதாகும் வாய்ப்பும் எப்போதும் எதிர்விகிதத்திலேயே இருக்கும்.

256. ஒரு விஷயத்தை அரசியலில் பரப்ப வேண்டுமானால் அதை ரகசியம் என்று சொன்னால் போதும்.

257. இந்த உலக மக்களின் புத்திசாலித்தனத்தின் கூட்டுத் தொகை ஒரு மாறிலியாகும். ஆனால் மக்கள் தொகை வளர்ந்து கொண்டே இருக்கிறது!

258. எந்தக் கூட்டத்துக்கும் சரியான நேரத்துக்குப் போய்விடாதீர்கள். நீங்கள் தான் முதல் ஆளாக இருப்பீர்கள்!

259. கூட்டம் நடைபெறும் போது பாதி நேரத்துக்கு எதுவும் பேசாதீர்கள். அது உங்களை அதி புத்திசாலி என நிரூபிக்கும்.

260. நீங்கள் பேசும் பேசசு திட்டவட்டமாக இல்லாமல் வளவள என்று இருத்தல் அவசியம்.அப்போது தான் அது யாரையும் பாதிக்காது.

261. எப்போதுமே கூட்டத்தை ஒத்திப் போடும் தீர்மானத்தை நீங்களே எழுப்புங்கள். அது உங்களை பிரபலமாக்கும். ஏனென்றால் அது தான் அனைவரும் விரும்புவது.

262. இங்கு எதுவும் இலவசம் இல்லை. (மிகவும் பிரசித்தி பெற்ற வாக்கியம் - There is no free lunch.)

263. ஒரு வாக்கியத்தின் ஒரு எழுத்து அதன் அர்த்தத்தையே மாற்றி விடுமென்றால் எந்த எழுத்தால் அதிக பாதிப்பு ஏற்படுமோ அந்த எழுத்து தான் மாறி இருக்கும்.

264. ஒரு அலுவலகத்தில் ஒருவர் மட்டும் எல்லா விசயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்.அவர் தான் முதலில் காலி செய்யப்பட வேண்டியவர்.

265. புது சட்டம் புது ஓட்டையைத் தான் உருவாக்கும்.

266. ஒரு வாக்கியத்தில் முக்கியம் என நீங்கள் நினைக்கும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லையா? கவலை வேண்டாம். அந்த வார்த்தை இல்லாமலே அந்த வாக்கியம் சரியான அர்த்தம் கொடுக்கும்.

267. பேருந்து நிறுத்தத்திலிருந்து சற்று முன் புறப்பட்டு சென்ற பேருந்து தான் உங்கள் பேருந்து.

268. பேருந்துக்காக நீங்கள் காத்திருக்கும் நேரமும், தட்பவெப்ப நிலையின் பாதிப்பும் நேர் விகிதத்தில் இருக்கும்.

269. உங்கள் வீட்டுக்கு அருகிலேயே நிறுத்தம் உள்ள பேருந்து உங்கள் அலுவலக நேர முடிவுக்கு5 நிமிடம் முன்னதாகத் தான் புறப்படும்.

270. அதிகாரம் என்பது யாரால் ஒரு வேலையைச் செய்ய முடியாதோ அவருக்கே அதை அளிப்பதாகும்.

271. காகிதம் கிழிக்க வேண்டிய இடத்தில் தான் பலமாக இருக்கும்.

272. ஒரு வேலையைச் செய்வதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன. (1) நீங்களே செய்யலாம். (2)யாரையாவது வேலைக்கமர்த்தலாம். (3) உங்கள் குழந்தைகளை அதைச் செய்யாதே என்று சொல்லலாம்.

273. எந்த ஒரு விவாதத்திற்கும் இரண்டு பக்கமுண்டு நீங்கள் ஏதாவது ஒரு பக்கத்துக்கு சாயாமல் இருக்கும் வரை!

274. வரலாறு மீண்டும் திரும்பும். அது தான் வரலாறின் ஒரே மோசமான குணம்.

275. யாரிடம் சிறந்த அறிவுரைகள் இருக்கின்றனவோ, அவர் அறிவுரையே வழங்குவதில்லை.

276. தெருக்களில் நீங்கள் சத்தமின்றி பேச வேண்டுமானால், உங்கள் அருகில் ஒரு அல்சேசன் நாய் இருக்கட்டும்.
277. நீங்கள் இரண்டு மாத்திரைகள் சாப்பிட வேண்டிய புட்டியில் இருந்து எப்போதும் 3மாத்திரைகள் தான் விழும்.

278. நீங்கள் 16 முறுக்கிகளைக் கழற்றிய பின் தான் கண்டுபிடிப்பீர்கள் தவறான பாகத்தைக் கழற்றி விட்டோம் என்று.

279. நீங்கள் 16 முறுக்கிகளை முறுக்கிய பின் தான் முக்கியமான பாகத்தை வெளியே வைத்து விட்டது தெரியவரும்.

280. சட்டம் இயற்றுபவர்களின் எந்த ஒரு செயலாக்கமும் கடைசியில் வரி செலுத்துவோரின் பையை நோக்கி தான் இருக்கும்.

281. எதுவாக இருந்தாலும் அது அதிக பணத்தையும் நேரத்தையும் எடுத்துக் கொள்ளும்.

282. சத்தம் போடும் இயந்திரத்துக்கு தான் எண்ணை கிடைக்கும்.

283. காற்று எந்த திசையில் வீசினாலும் புகை பிடிப்பவர் விடும் புகை புகைப்பழக்கம் இல்லாதவரை நோக்கியே செல்லும்!

284. புகை பிடிப்பவருக்கு புகைக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும், அந்த இடத்தில் எத்தனை புகைப்பழக்கம் இல்லாதவர்கள் இருக்கிறார்கள் என்பதும் நேர் விகிதத்தில் இருக்கும்.

285. உணவின் சுவையும் அதன் கொழுப்பளவும் நேர் விகிதத்திலேயே அமையும்.

286. எந்த ஒரு பெரிய மனிதரிடம் இருந்து வரியைப் பெறுவதற்கு புது சட்டம் போடுகிறீர்களோ அந்த சட்டத்திலிருந்து தப்பிக்கும் அளவுக்கு அவர் பலம் வாய்ந்தவராகவே இருப்பார்.

287. வரி இருப்பது வரை வரி ஏய்ப்பும் இருக்கும்.

288. அரசியலின் மூன்று முக்கிய தத்துவங்கள் (1) தேர்ந்தெடுக்கப்படுங்கள் (2) மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுமாறு நடந்து கொள்ளுங்கள் (3) பைத்தியம் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

289. அதிகார வர்க்கத்தை அடக்க வேண்டுமா? உங்கள் பிரச்னையை அவர்கள் பிரச்னையாக மாற்றி விடுங்கள்.

290. ஒரு நிர்வாக அமைப்பில் மேலே செல்ல செல்ல குழப்பமே அதிகமாகும்.

291. எந்த ஒரு வாய்ப்பும் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் தான் கதவைத் தட்டும்.

292. இரு விஷயங்கள் நடப்பதற்கான சாத்தியக்கூறு இருக்குமானால் நீங்கள் எதை விரும்பவில்லையோ அது தான் நடக்கும்.

293. இருப்பதிலேயே மிகக் குறைந்த அளவிடக்கூடிய நேரம் என்பது ஒரு விபத்தை வரப்போகிறது என்று உணரும் நேரத்துக்கும் அந்த விபத்து நடைபெறும் நேரத்துக்கும் உள்ள இடைவெளியாகும்.

294. உங்கள் பயண நேரமும் உங்கள் இருக்கையின் சொகுசும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

295. சரித்திரத்திலிருந்து மனிதன் கற்றுக் கொண்டது என்னவென்றால், சரித்திரத்திலிருந்து மனிதன் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதை.

296. மற்றவர்கள் செய்வது எதை நீங்கள் பாவம் என்கிறீர்களோ, அதை நீங்கள் செய்யும்போது மட்டும் சோதனை செய்வது பார்ப்பதாகவே தோன்றும்.

297. ஒரு ஆடையின் விலை நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குப் பொருந்தி வந்தால் அது உங்களுக்கு அணிந்து பார்க்கும் போது பொருந்தாது.

298. முடி வெட்டுபவரிடம் போய் நான் முடி வெட்டினால் அழகாக இருக்குமா என்று கேட்காதீர்கள்.

299. ஒரு முடிவெடுக்கத் தேவையில்லாத போது முடிவெடுக்காமலிருப்பது தேவையாகும்.

300. நாம் கச்சேரிகளுக்கு போக வேண்டும் என்று கடவுள் தீர்மானித்திருந்தால் நுழைவுச்சீட்டையும் நமக்குக் கொடுத்திருப்பார் அல்லவா?

மர்பி விதிகள் - 301 - 400
301. எந்த ஒரு உடையை எடுத்துக் கொண்டாலும், 10 ஆண்டுகளுக்கு முன் நாகரீகமற்றதாகவும், 1ஆண்டுக்கு முன் தைரியசாலிகள் மட்டுமே அணியக்கூடியதாகவும், நடப்பில் அழகாகவும், 3ஆண்டுகள் கழித்து சலித்துப் போவதாகவும், 20 ஆண்டுகள் கழித்து மறந்து போவதாகவும், 30ஆண்டுகள் கழித்து வியக்கத்தக்கதாகவும், 100 ஆண்டுகள் கழித்து மனோகரமாகவும் 150 ஆண்டுகள்கழித்து மீண்டும் அழகாகவும் இருக்கும்.

302. உங்கள் குழந்தை எப்போது உங்கள் மடியில் அசந்து தூங்க ஆரம்பிக்கிறதோ அப்போது தான் நீங்கள் கழிவறைக்கு செல்ல வேண்டிய அவசரம் ஏற்படும்.

303. முக்கியமாக மக்கள் எதிர்பார்க்கும் விஷயம் அவர்கள் எதிர்பார்க்கும் போது நடைபெறுவதில்லை. உம். தற்போதைய சேவாக்கின் உலக சாதனை

304. வெற்றிகரமான சோதனையை உங்களால் எப்போதும் மீண்டும் ஒரு முறை நடத்திக் காட்ட இயலாது.

305. அறிவியல் உண்மையானது. இது போன்ற வாக்கியங்களில் ஏமாந்து விடாதீர்கள்!

306. பத்திரிகை அச்சாகும் வரை அதிலுள்ள பிழைகளைக் கண்டுபிடிக்க முடியாது.

307. ஒரு முக்கியமான வேலையை நீங்கள் கெடுத்துக் கொண்ட பிறகு அதை மாற்ற நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அதை மேலும் மோசமானதாக்கும்.

308. உங்களுக்கு கிடைக்கும் தகவல் நீங்கள் விரும்பாதது.

309. நீங்கள் விரும்பும் தகவல் உங்களுக்குத் தேவையில்லாதது.

310. உங்களுக்குத் தேவையான தகவல் இருக்கும் இடம் உங்களால் அடைய முடியாதது.

311. அவ்வாறு அடைய முடியுமானால் உங்களால் அதற்கு நீங்கள் நினைப்பதைவிட அதிக பணம் செலவிட வேண்டும்.

312. ஒரு பாடத்தை நல்ல முறையில் படிக்க வேண்டுமானால் ஆரம்பிக்கும் முன்னரே அதைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். (பின்னே எதுக்கு படிக்கணுங்கிறீங்களா? ஹி ஹி)

313. எதிர்படும் அனைத்தையும் குறித்து வையுங்கள். அப்போது தான் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்பதை நிரூபிக்க முடியும்.

314. முதலில் வரைபடத்தை வரைந்து கொள்ளுங்கள். பின்பு புள்ளிகளை வைத்துக் கொள்ளலாம்.

315. குழுவாகப் பணி செய்வது தான் சிறந்தது. அப்போது தான் மற்றவர் மேல் பழி போட முடியும்.

316. வாழ்க்கையின் 3 முக்கிய பொய்கள் (1) பணத்தால் எதையும் செய்ய முடியாது. (2) கருப்பராக இருப்பது வசதியானதாகும். (3) காசோலையை அப்போதே தபாலில் அனுப்பிவிட்டேனே!

317. ஒரு விஷயத்தின் அதிகாரத்துவத்தில் எழுதப்படும் காகிதங்களின் அளவும் செயல்புரியும் வேகமும் எதிர் விகிதத்தில் அமையும்.

318. உலகில் மனித இனம் ஒன்று தான் முழுமையடையாத பிறப்பாகும்.

319. யாரொருவர் எதையும் எதிர்பார்க்காமல் இருக்கிறாரோ அவரே அதிர்ஷ்டசாலியாவார்.ஏனென்றால் அவருக்குத் தான் ஏமாறுவதற்கு ஒன்றுமில்லையே.

320. புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும் அளவுக்கு உலகில் எந்த ஒரு விஷயமும் கிடையாது.

321. சூழ்நிலையால் எதற்கும் தகுதியில்லாதவனையும் எத்தகையை தகுதியுடையவனாகவும் ஆக்க முடியும்.

322. ஒருவனுக்கு உதிக்கும் யோசனைகளும் அதனை சாத்தியமாக்கும் திறனும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

323. 9 பெண்களைக் கர்ப்பமாக்குவதால் ஒரு குழந்தையை ஒரே மாதத்தில் பெற முடியாது!

324. காலம் = பணம்.

325. எந்த ஒரு நல்ல சட்டமும் ஊடகங்களால் வெளிக் கொணரப் படமாட்டாது.

326. ஒரு குழுவில் சரியான நபர்கள் இணைந்துவிட்டனர் என்பதாலேயே அது சரியான பாதையை நோக்கி செல்லும் என்று சொல்ல முடியாது.

327. யார் ஒருவர் 4 முறைக்கு மேல் ராஜினாமா செய்வதாக அடித்து சொல்கிறாரோ அவர் ராஜினாமாவே செய்யமாட்டார்.

328. ஒரு மேதாவி என்பவர் பெரிய தவறுகளைக் கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று சிறிய தவறுகளாக செய்வார்.

329. அடுத்த வீட்டுக்காரரின் திருப்புளி அடுத்த வீட்டுக்காரர் இடத்தில் மட்டுமே வேலை செய்யும்.

330. உங்கள் வீட்டுத் திருப்புளி எல்லோர் வீட்டிலும் வேலை செய்யும்!

331. எது தேவையில்லை என்று நினைக்கிறீர்களோ அதிலிருந்தே நிறைய
விஷயங்கள் உங்களுக்குக் கிடைக்கும்! (நம்ம மர்பி விதிகள் போல)

332. ஒரு பொருள் நமக்குத் தேவையில்லை என்பதற்கு உங்களால் எந்தக் காரணமும் கற்பிக்க இயலவில்லை என்றால் அந்தப் பொருள் உங்களுக்கு மிகவும் அத்தியாவசியமான பொருள் என்று அர்த்தம்.

333. கொஞ்சம் முட்டாள்தனம் போதும் ஒரு விஷயத்துக்கு. அதை அதல பாதாளத்துக்கு கொண்டு செல்ல.

334. அரசியல்வாதிக்கும் நத்தைக்கும் உள்ள ஒரு வேற்றுமை நத்தை அது கடந்து வந்த பாதையை யார் வேண்டுமானாலும் காணலாம்.

335. எந்த ஒரு பொருள் நகரத் தொடங்கி உள்ளதோ அது தவறான திசையை நோக்கியே இருக்கும்.

336. எந்த ஒரு பொருள் நகராமல் இருக்கிறதோ அது தவறான இடத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.

337. கணிணிகள் நம்ப முடியாதவை தான். ஆனால் மனிதனை விட அல்ல.

338. அரசியல் தலைவருக்கான முக்கிய விதி: தோள்களின் மேல் யாரும் ஏறி இருக்கிறார்களா என்று பார்த்துக் கொள்ளுங்கள். முதுகுக்குப் பின் தொடர்கிறார்களா என்றும் பார்த்துக் கொள்ளுங்கள்.

339. முதலாளித்துவத்தின் அடிப்படை நீங்கள் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

340. ஜனநாயகத்தின் அடிப்படை உங்களால் ஜெயிக்கவும் முடியாது தோற்கவும் முடியாது எனற நம்பிக்கையில் உள்ளது.

341. சர்வாதிகாரத்தின் அடிப்படை உங்களால் வெளியேற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

342. ஒரு பொருளை வாங்கும் முன் நீங்கள் அனுமானித்த பலன்களை அந்தப் பொருளை வாங்கியவுடன் உங்களால் பெற முடியாது.

343. ஒருவரின் தகுதியும் அவர் இருக்கும் இடமும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

344. யாரிடம் தங்கம் இருக்கிறதோ அவரே சட்டம் இயற்ற தகுதியானவர்.

345. உங்களுக்கு அணிய சுகமாக இருக்கும் செருப்பு பார்க்க அசிங்கமாகவே இருக்கும்.

346. ஒரு ஒப்பந்தத்தின் மதிப்பு அதில் உள்ள வார்த்தைகளை விட அது எழுதப்பட்ட தாளில் தான் அதிகம் இருக்கும்.

347. மிகச் சரியாகத் திட்டமிடாத ஒரு திட்டம் மூன்று மடங்கு நாட்கள் அதிகம் எடுக்கும். மிகச் சரியாகத் திட்டமிட்ட திட்டமோ இரண்டு மடங்கு மட்டுமே எடுக்கும்.

348. ஒரு புதிய இயந்திரம், பழைய இயந்திரம் கழற்றி விற்கப்பட்ட மறு நிமிடத்திலிருந்து தான் தகராறு செய்ய ஆரம்பிக்கும்.

349. ஒரு பொருள் உடையும் என்றிருந்தால் அதன் உத்திரவாதம் முடிந்த மறு நாள் தான் உடையும்.

350. நீங்கள் அதிகம் மதிக்கும் ஒரு நபர் அதிகம் யோசிப்பதாக நீங்கள் நினைக்கும் நேரத்தில் அவர் மதிய உணவைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்திருப்பார்!

351. ஒரு பொருளின் உபயோகத் தன்மையும் அதன் மதிப்பும் எதிர் விகிதத்தில் தான் இருக்கும்.

352. அதிவிரைவான கணிணியின் விலை சாதாரண கணிணியின் விலையின் 4 மடங்காகஇருக்கும். பாதி விலைக்குக் கிடைக்கும் கணிணியின் வேகம் நான்கில் ஒரு பங்கு தான் இருக்கும்.

353. எப்போது இரண்டு மனிதர்கள் சேர்ந்து மூன்றாம் மனிதனின் பணத்தைச் செலவழிக்கத் திட்டமிடுகின்றனரோ அப்போது தான் கள்ளத் தனம் ஆரம்பிக்கிறது.

354. அனைவருக்குமே சொர்க்கத்துக்கு செல்ல ஆசை தான். ஆனால் சாக யாருக்குமே விருப்பமில்லை.

355. தேவாலயத்துக்கு செல்ல முடியாது, பாதை மோசமாக இருக்கிறது. அதைத் தாண்டி இருக்கும் சாராயக் கடைக்குப் போய் வரலாம், கவனமாகச் செல்வோம்.

356. நீங்கள் ஒரு தீக்குச்சியை காரின் வெளியே எறிந்தால் காட்டுத் தீயே மூளும். ஆனால் பத்து தீக்குச்சியை உபயோகித்தாலும் அடுப்பை எரிய வைக்க முடியாது.

357. குழந்தைகள் முழு இரவும் தூங்கி எழுந்தாலும் கூட நாள் முழுதும் கடினமாக விளையாடிய பின் இருக்கும் பலம் இருக்காது.

358. யார் அதிக அதிர்ஷ்ட சீட்டு வாங்குகிறார்களோ அவருக்கு பரிசே கிடைக்காது.

359. நீங்கள் எதை விரும்பவில்லையோ அது கண்டிப்பாக வரும். (உம். மரணம், வரி)

360. ஒரு பத்திரிக்கைகாரர் உங்களுக்கு எதிராக எழுதிவிட்டார் என்று கோபம் வருமாயேனால்,அவர் மேலும் புகழ் பெறவோ, பணக்காரராகவோ அல்லது இரண்டும் சேர்ந்தோ ஆவார்.

361. நீங்கள் கற்பனை செய்வதை விட உலகம் பெரிது கிடையாது. உங்களால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பெரியது.

362. ஒரு நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில் உள்ள லாபமும் உண்மையான லாபமும் எதிர் விகித்திலேயே இருக்கும்.

363. மிகஅதிமேதாவித்தனமாக உங்களுக்கு எழும் எந்த ஒரு விஷயமும் ஏற்கனவே யாராவது கண்டுபிடித்ததாகத் தான் இருக்கும்.

364. ஒரு கைக்குள் அடக்க முடிகிற எதுவும் கைக்குள்ளேயே தான் இருக்கும்!

365. ஒரு உணவகத்தின் வெற்றி என்பது கூட்டமாக இருக்கையில் வேகமாகவும் கூட்டமே இல்லாத சமயத்தில் மிக மெதுவாகவும் பரிமாறுவதில் தான் இருக்கிறது.

366. மோட்டார் வாகன விதிகள் (1) வார இறுதியில் தான் வாகனத்துக்கு பழுது ஏற்படும். (2)வாகனத்தை அவசரமாக எடுக்கையில் தான் பழுதேற்படும். (3) வாகனத்துக்கு ஏற்படும் எந்தப் பழுதும் சிறிய பழுதாக இருக்காது.

367. ஒரு பெரிய நாட்டில் எந்த ஒரு விஷயத்துக்கும் 50 நபர்களை எடுத்துக்காட்டாக வைக்க முடியும்.

368. ஒரு குடிகாரனின் வாயிலிருந்து வரும் சாதாரணமான வார்த்தைகள் ஒரு தத்துவ மேதை வெகுவாக சிந்தித்து வெளியிடும் வார்த்தைகளை விட தத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

369. ஒரு நிர்வாகத்தின் வெற்றியும் அந்த நிர்வாகத்துக்கு இருக்கும் மொத்தத் திறமையும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

370. நீங்கள் ஒரு விஷயத்துக்காக காத்திருந்தால் அது போயேவிடும்;

371. சாதாரணமாகப் போகாமல், உங்களுக்குத் தேவையில்லாத கெடுதல்களைச் செய்து விட்டுத் தான் போகும;

372. அதுவே மோசமானதாக இருந்தால் திரும்பவும் வரும்.

373. ஒரு பிரச்னையைத் தீர்ப்பதற்காக நிறைய கூட்டங்கள் கூட்ட வேண்டியிருந்தால் பின்னால் பிரச்னையை விட கூட்டங்களே அதிக பிரச்னையை உருவாக்கியிருக்கும்.

374. ஒரு பொருள் சிறந்ததாக இருந்தால் அதை தயாரிப்பதையே நிறுத்தியிருப்பார்கள்.

375. ஒரு வகுப்பில் எத்தனை மாணவர்கள் இருந்தாலும் அவர்களின் கவனத்தின் மொத்த அளவு எப்போதுமே ஒரு மாறிலியாகும்.

376. ஒரு இயந்திரத்தின் பாகத்தில் ஏற்படும் கோளாறும், உங்களுக்கு ஏற்படும் அனுபவமும் நேர் விகிதத்திலேயே இருக்கும்.

377. ஒரு படகோட்டியை நதியைக் கடக்கும் வரை வையக் கூடாது.

378. இயந்திரங்கள் என்றால் வேலை செய்ய வேண்டும். மனிதர்கள் என்றால் சிந்தனை செய்ய வேண்டும். இரண்டுமே நடப்பதில்லை.

379. மூளைகளின் கணிதம்: 1+1 = 1.5, 2+2 = 0.5, 4+4 = 0.25 கூட்டம் கூடக் கூட மூளையின் சிந்தனை அளவு குறைந்து கொண்டே செல்லும்.

380. ஒரு வேலையைச் செய்து முடிக்க இதை விட சுலபமான வழி இருந்தே தீரும்.

381. ஒரு நாட்டின் அதிகாரத்துவமும், சாக்கடையும் ஒன்று தான். கழிசடைகள் மட்டுமே மேலே வர முடியும்.

382. ஒரு நிறுவனத்தின் முன்னறையின் ஜொலிப்பும், அதன் வெற்றியும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

383. ஒரு நாட்டில் இருக்கும் கொடுமைகளின் மொத்த அளவு ஒரு மாறிலியாகும். எனவே ஒருபுறம் ஏழ்மையும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழிந்தால் இன்னொருபுறம் கொள்ளையும் சுகாதாரக் கேடும், சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்படும்.

384. அடுத்தவரின் செலவு எப்போதும் ஊதாரித்தனமாகவும் தேவையில்லாததாகவும் இருக்கும்.

385. குறுக்கு வழி என்பது இரண்டு இடங்களுக்கிடையேயுள்ள அதிகபட்ச தூரத்தினைக் குறிக்கும்.

386. எப்படிப்பார்த்தாலும் காகிதத்தின் உபயோகம் குறையப் போவதில்லை. ஜனநாயகமாக இருந்தால் எந்த ஒரு படிவத்தையும் நான்கு படிகள் எடுத்தே கொடுக்கவேண்டும்.முதலாளித்துவமாக இருந்தால் எந்த ஒரு பொருளையும் நான்கு தாள்கள் கொண்டு சுற்றிக் கொடுக்க வேண்டும்.

387. எந்த ஒரு மனிதனின் உரிமையும், உடமையும் பாதுகாப்பானதல்ல, பாராளுமன்றம் நடப்பில் இருக்கும் வரை. எப்போது வேண்டுமானாலும் சட்டம் இயற்றி அதைப் பறித்துக் கொள்ளலாம்.

388. கடையிலிருந்து வாகனம் இருக்கும் தூரமும் உங்களிடம் இருக்கும் பொருட்களின் எடையளவும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

389. மாற்றம் என்பது ஒரு தலைமைக்குப் பொதுவானது. அதுவே மற்றவர்கள் செய்வதற்குள் செய்து விட்டால் வெற்றியாகிறது.

390. ஐந்து மாதங்களில் மூன்று நல்ல கூட்டங்கள் நடைபெற்றால் அவை அனைத்தும் ஒரே நாளில் அமையப் பெறும்.

391. வாகனத்திலிருந்து விழும் எந்த ஒரு பொருளும் அதன் புவிநடுப் புள்ளியில் தான் விழும்.

392. யார் ஒருவன் தவறு வரும் போது சிரிக்கிறானோ அவன் அந்தத் தவறை யார் மீது சுமத்தலாம் என்று தெரிந்து கொண்டான் என்று அர்த்தம்.

393. ஒரு வேலை நடக்க வேண்டுமாயின் அதைச் செய்பவரைத் தேடுங்கள். அதைப்பற்றி எழுதுபவரோ, மேற்பார்வை பார்ப்பவரோ, முறைப்படுத்துபவரையோ பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

394. எந்த ஒரு அறிக்கையும் நான்கு காலங்களைக் கொண்டதாக இருக்கும். 1. இறந்த காலம் 2.நிகழ் காலம் 3. எதிர்காலம் 4. இவையனைத்துக்கும் மேலான ஊகம்.

395. எப்போதும் மேலாளர் தான் முதலில் வர வேண்டும்.

396. தமது பிரச்னைகளைத் தீர்க்க சிக்கனம்மாக இருப்பார்கள். மற்றவர்கள் பிரச்னைக்கோ தாராளமான ஆலோசனை சொல்வார்கள்

397. ஒரு விஷயத்தைக் காலி செய்ய வேண்டுமானால் அதை நிர்வகிக்க ஒரு கமிட்டியை உருவாக்கினால் போதும்.

398. நீங்கள் முன்பே ஒரு வழியில் ஒரு விஷயத்தைச் செய்திருந்தால் அது தவறானதாகவே இருந்திருக்கும்.

399. ப = க / சா. ஒரு நிர்வாகத்தில் ஒருவருக்கு இருக்கும் பதவியின் அளவு அவர் திறக்க வேண்டிய கதவுகளையும் அதற்கு அவர் வைத்திருக்கும் சாவிகளையும் பொருத்ததாகும்.அதாவது காவலாளியிடம் 20 சாவிகள் இருக்கும், 20 கதவுகளுக்கு (ப = 1) . மேலாளருக்கு 2கதவுகள், 1 சாவி (ப = 2), முதலாளிக்கோ சாவி தேவையில்லை (ப = ∞).

400. ஒரு கூட்டத்தின் பயனும் அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணீக்கையும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

மர்பி விதிகள் - 401 - 500
401. ஒரு பொருளுக்குத் தரப்பட்ட உத்திரவாதம் அந்தப் பொருளுக்கான பணத்தைச் செலுத்தியவுடன் முடிவுறுகிறது.

402. எந்த ஒரு துணியையும் சரியான அளவுக்கு வெட்டியவுடன் அது அளவில் சுருங்கிவிடும்.

403. நீங்கள் ஒரு பொருளின் காப்புரிமைக்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே உங்களின் முகம் தெரியாத இன்னொரு நண்பரால் அதே பொருளுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டிருக்கும்.

404. ஒரு இயந்திரத்தை உருவாக்க n பொருட்கள் தேவைப்படுமாயின் நம்மிடம் n-1 பொருட்கள் தான் இருக்கும்.

405. வாழ்க்கை என்பது நீங்கள் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் போது உங்களைக் கடந்து செல்வதாகும்.

406. பத்திரிகையில் காணப்படும் அனைத்தும் உண்மையானவை தான். நீங்களே நேரடியாக பார்த்த விஷயங்கள் தவிர. (எவ்வளவு உண்மை!)

407. ஒரு விஷயத்தின் கடினத் தன்மையும் அதைப் பற்றிய விவாதத்தின் நேரமும் எதிர்விகிதத்திலேயே இருக்கும்.

408. எந்த ஒரு விஷயம் நிறைய பேருக்கு அசௌகரியத்தைத் தருகிறதோ அது நடந்தே தீரும்.

409. யாருமே செய்யாத ஒரு காரியத்தை நீங்களாக எடுத்து செய்தால் அதை வாழ்க்கை முழுவதும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும்.

410. ஏமாற்றம் என்பது மறக்க முடியாத ஒன்று தான். ஆனால் நீங்கள் அடைய விரும்பியதை அடைவதால் ஏற்படும் கஷ்டங்களை விட அது பெரிதல்ல.

411. வரி செலுத்துபவர் யாரெனின், அரசாங்கத்துக்கு சேவை செய்வதற்காக IAS படிக்காதவர்!

412. சூடான பாத்திரமும் தண்மையான பாத்திரமும் பார்க்க ஒன்று போல தான் இருக்கும்.

413. எதுவுமே இன்னொன்றைச் சார்ந்தே இருக்கிறது.

414. வரி என்பது வரி செலுத்துபவரின் பயனுக்காக வசூலிக்கப்படுவதல்ல.

415. ரூ.100/-ஐ 7% வட்டிக்கு 200 ஆண்டுகளுக்கு ஒரு வங்கியில் போட்டு வைத்தோமேயானால் அதன் அளவு அப்போது ரூ. 1 கோடியையும் தாண்டி நிற்கும். ஆனால் அதன் மதிப்போ ரூ.100/-க்கும் குறைவாகவே இருக்கும்.

416. உள்ளூர்காரன் தான் தாமதமாக வருவான்.

417. ஒரே தவறைத் திரும்ப திரும்ப செய்தால் அது சரியாகி விடும்.

418. சத்தமாகப் பேசுவது தவறு செய்பவரின் கேடயம் ஆகும்.

419. எந்த ஒரு கண்டுபிடிப்பையும் நல்லவனை விட கெட்டவனே அதிகம் உபயோகிப்பான்.

420. எந்தத் தீர்மானம் ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறதோ அது ஒரு மனதால் தீர்மானிக்கப்படுகிறது.

421. நகைச்சுவை வரவழைக்க பார்க்க சகிக்காதவராக இருக்க வேண்டும்.

422. ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு. அந்த சமயத்தில் பெரிய்ய்ய்ய மீன் வந்து கொக்கையே இழுத்துக் கொண்டு சென்றுவிடுமாம்!

423. வீதியில் கிடக்கும் குப்பையின் அளவும், வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையும் நேர்விகிதத்திலேயே இருக்கும்.

424. மேதைகள் சொல்வதை எந்நேரமும் கேட்டுக்கொள்ளுங்கள். அவர்களை எதை எப்போது செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ, அதை அப்போது செய்யுங்கள். முன்னேறிவிடலாம்.

425. எந்த ஒரு தலைமுறை சரித்திரத்தை மறக்கிறதோ அவர்களுக்கு இறந்த காலம் இருக்காது.எதிர்காலமும்.

426. மனிதனின் முட்டாள்தனத்தைப் பற்றி மட்டும் குறைத்து எடை போடக்கூடாது.

427. ஒரு குடும்ப விவாதத்தில் நீங்கள் சொல்வது எப்போது சரி என்று தோன்றுகிறதோ அப்போதே மன்னிப்பு கேட்டுக் கொள்ளவேண்டும்.

428. வரலாறு எப்போதாவது பதிவு செய்திருக்கிறதா என்ன? பெரும்பான்மையினர் எடுக்கும் முடிவு சரியாய் இருக்கும் என்று.

429. ரகசியம் என்பது வதந்தியின் ஆரம்பம்.

430. சூழ்நிலை அமையும் போது தவறு செய்து விட வேண்டும். மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் வாய்க்குமா என்ன?

431. இயற்கையின் நியதிகளில் இரக்கத்துக்கு இடமே கிடையாது.

432. ஒரு கமிட்டி என்பது ஆறுக்கும் மேற்பட்ட கால்களுடைய மூளையே இல்லாத ஒரு உயிரமைப்பு ஆகும்.

433. எந்த ஒரு நல்ல விஷயமும் தண்டனைக்குத் தப்புவதில்லை.

434. ஒரு முக்காலியின் முக்கியமான கால் உடைந்து போன அந்த மூன்றாவது கால் தான்!

435. யார் தயங்குகிறார்களோ அவர்களே கடைசி.

436. நீங்கள் டைட்டானிக்கில் செல்வது என்றாகிவிட்டது. முதல் வகுப்பில் சென்றால் தான் என்ன?

437. நிர்வாகத்திறன் என்பது அந்த நிர்வாகத்துக்குத் தேவையான அளவை விட எப்போதுமே குறைவாகவே இருக்கும்.

438. பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழி அதை இழக்காமல் இருப்பதில் இருக்கிறது.

439. எந்த ஒரு நிர்வாகத்திலும் அதிகமாக மேலாளர்களே இருப்பார்கள்.

440. காதல் வேதியியல் சம்பந்தப்பட்டது. கலவியோ இயற்பியல். குழந்தை உயிரியல்!!!

441. எந்த ஒரு பனிப்பாறையின் எட்டில் ஏழு பங்கும் கண்ணுக்குத் தெரிவதில்லை.

442. ஒரு விஷயம் பற்றிய எந்த இரு மனிதர்களின் புரிதலும் சரி சமமாக இருப்பதில்லை.

443. ஒரு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் பணத்தின் அளவுக்கு அதன் செலவும் உயர்ந்து கொண்டே வரும்.

444. எந்த ஒரு கமிட்டியின் முடிவும் செலவை அதிகரிப்பதாகவே இருக்கும்.

445. ஒரு முட்டாள் உயர்ந்த பதவியில் இருந்தால் அதற்கு சிறந்த உதாரணம், ஒரு மலையின் மேல் ஒருவன் நிற்பதாகும். அவனுக்கும் அனைத்தும் சிறியதாகத் தெரியும். அவனைப் பார்ப்பவர்களுக்கும் அவன் சிறியதாகவே தெரிவான்!

446. எந்த ஒரு அரசியல்வாதி ஒரு பிரச்னையைத் தீர்ப்பதற்கு அதிகமாக செலவு செய்கிறாரோ அவரே தேர்ந்தெடுக்கப்படுவார். பிரச்னை வருவதை முன்கூட்டியே அறிந்து அதை வரும் முன் களைய முற்படும் அரசியல்வாதியோ சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

447. ஆலோசகர் என்பவர் உங்களிடமே தகவல்களை வாங்கி உங்களுக்கே திருப்பித் தருபவர் ஆவார்!

448. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மனிதர்கள் (ஆண்களானாலும் பெண்களானாலும்) சில அடி தூரத்துக்குள் தங்கள் மாமியார் வந்தாலே வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

449. யாரால் முடியுமோ அவர்கள் செய்கிறார்கள். யாரால் முடியவில்லையோ அவர்கள் கற்பிக்கிறார்கள். யாரால் கற்பிக்க முடிவதில்லையோ அவர்கள் நிர்வாகஸ்தர்கள் ஆகிறார்கள்.

450. ஒரு விஷயத்தைச் சரியான நேரத்துக்குள் முடிப்பதற்கு நேரமிருப்பதில்லை. ஆனால் அதை மீண்டும் செய்வதற்கு மட்டும் நேரமிருக்கும்.

451. குறைவே நிறைவு.

452. எதுவுமே நிரந்தரமுமல்ல. எதுவுமே முடிவுமல்ல.

453. ஒரு கயிறுக்கு ஒரு முனை இருந்தால் கண்டிப்பாக இன்னொரு முனையும் இருக்கும்!

454. நம்முடைய சிந்தனை அனைத்துமே "ரொம்ப காலம் கழித்து மெல்ல இறக்க வேண்டும்.அதே சமயம் இளமையாகவும் இருக்க வேண்டும்" என்பதாகும். (கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை!)

455. பணம் சாணத்தைப் போன்றது. அதை கலந்து தெளித்துவிட்டால் நல்ல மருந்தாகும். ஆனால் ஒரே இடத்தில் தேக்கி வைத்து விட்டால் இடமே நாசமாகி விடும்.

456. ஆராய்ச்சி என்பது இதுவரை யாருமே படித்திராத இரண்டு புத்தகங்களைப் படித்து யாருமே படிக்கவிராத மூன்றாம் புத்தகத்தை எழுதுவதாகும்!

457. புள்ளியியல் என்பது ஒரு துல்லியமான அறிவியலாகும். அது சொல்வது எல்லாம் பாதி உண்மைகளை மட்டுமே.

458. வளர்ந்து கொண்டிருக்கும் நாட்டில் தண்ணீர் அருந்தாதே.(நீர் கெட்டிருக்கும்.) வளர்ந்து விட்ட நாட்டில் சுவாசம் செய்யாதே. (காற்றே கெட்டிருக்கும்.)

459. ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு அருமையான தீர்வு ஒன்று உண்டு. பிரச்னையே அதைக் கண்டுபிடிப்பது தான்! (இது எப்படி?)

460. ஒன்று சிகரத்தில் இருக்கவேண்டும். அல்லது அதல பாதாளத்தில் இருக்க வேண்டும்.பாதியில் இருந்தால் கஷ்டம் தான் எப்போதும்.

461. தலைக்கு மேல் இருக்கும் பறவையை விட கையில் இருக்கும் பறவையே பாதுகாப்பானது!

462. ஒரு தவறின் தன்மையும் அதை மறைக்க அதிகாரிகள் எடுத்துக் கொள்ளும் முயற்சியும் நேர் விகிதத்திலேயே அமையும்.

463. 90 சதவீத வேலை 90 சதவீத நேரத்தை எடுத்துக் கொள்ளும். மீதி இருக்கும் 10 சதவீத வேலை இன்னும் 90 சதவீத நேரத்தை எடுத்துக் கொள்ளும்.

464. இரண்டு தவறுகள் சேர்ந்து செய்தும் ஒரு சரியானது நடக்கவில்லையென்றால் மூன்றாவதையும் முயற்சி செய்து பாருங்கள்!

465. வழுக்கை விழுந்து விட்டால் உங்களால் அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியாது!

466. (ரூ.357.73 விதி) தணிக்கையாளர்கள் ஐந்தால் வகுபடும் செலவுகளை நம்புவதில்லை.

467. சரியான காரணங்களுக்காக இதுவரை ஒரு காரியமும் செய்யப்பட்டதே இல்லை.

468. உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் கமிட்டி கூட்டங்களில் கலந்து கொள்வதையும் கையெழுத்து இடுவதையுமே பெரிய வேலையாக நினைப்பார்.

469. நேற்றைய தேவையை நாளை மதியத்துக்குள்ளாவது வாங்கிவிட வேண்டும்!

470. அனைத்துமே உடையக் கூடியது தான்.

471. ஒருவர் தான் இதுவரை பேசியதை சுருக்கமாக உரைக்கப்போவதாக சொன்னால், அவர் இதுவரை எடுத்துக் கொண்டதை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்போகிறார் என்று அர்த்தமாகும்.

472. அனைத்துமே மாறாத பட்சத்தில், அனைத்துமே மாறுமே!

473. எது நல்லதோ அது சட்டத்துக்குப் புறம்பானதாகவும் வருத்தமளிப்பதாகவுமே இருக்கும்.

474. நீங்கள் விரும்பியதை அடைந்தும், வசதியாக வாழ்ந்தும் கொண்டிருந்தால் எதற்கு பணக்காரனாக வேண்டும்?

475. (20/80 விதி) உங்களின் 20 சதவீத வாடிக்கையாளரே 80 சதவீத விற்பனைக்கு வழி வகுப்பார். 20சதவீத பொருட்களே 80 சதவீத விலை இருக்கும்.

476. ஒத்தி வைப்பு தீர்மானம் மட்டும் உடனே நிறைவேறிவிடும்.

477. ஒரு விஷயம் அதிக முறை நடந்து உங்களை எரிச்சலடையச் செய்யுமானால் அது மீண்டும் நடைபெறும்.

478. ஒரு மேலாளர் தமக்குக் கீழ் ஆட்களைக் கூட்டுவதற்கு விரும்புவாரேயொழிய தனக்கு சமமாகவோ மேலாகவோ யாருமே வருவதை விரும்பமாட்டார்.

479. ஒரு மேலாளர் இன்னொரு மேலாளருக்கு வேலையை உருவாக்குவதிலேயே பொழுதைப் போக்குவார்.

480. ஒரு முக்கியமான முடிவு எடுப்பதை நிறுத்த வழி ஒன்று இருக்குமானால் அதை அதிகாரிகள் எப்படியாவது கண்டறிந்து விடுவார்கள்.

481. கொடுக்கமாட்டேன் என்று சொல்வதை விட தாமதப்படுத்துதல் பெரிய விஷமாகும்.

482. ஒரு தொலைபேசியில் நீங்கள் பேச எடுத்துக் கொள்ளும் நேரமும் அந்தப் பேச்சில் இருக்கும் உருப்படியான விஷயங்களும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

483. எந்த ஒரு நிறுவனம் 1000 பேருக்கு மேல் வேலையளிக்கிறதோ அது புற உலகத்துடன் தொடர்பே இல்லாத வகையில் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியிருக்கவேண்டும்.

484. நீங்கள் ஒரு கண்ணாடி கோப்பையைத் தவற விட்டு உடைத்திருந்தீர்களானால் அது உங்களிடம் இருப்பதிலேயே கீறலே இல்லாததாக இருந்திருக்கும்.

485. வேலை என்பது பகல் நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட சுவாரசியம் மிக்கதாகவே இருக்கும்.

486. சாராயம் குடிப்பவர்களுக்கு எப்போதுமே இன்னும் கொஞ்சம் குடித்தாலும் நிதானமாக இருக்க முடிவதாகவே தோன்றும்.

487. உங்கள் சோதனை வெற்றி பெறுகிறதா? நன்றாகப் பாருங்கள் - தவறான அளவுகோலை உபயோகித்து இருப்பீர்கள்.

488. இன்றைக்கு உள்ள ஒரு நல்ல திட்டம் நாளைக்கு கிடைக்கப்போகும் கச்சிதமான திட்டத்தை விட மேலானதாகும்.

489. ஒரு வெற்றி கிடைப்பதும் அதற்கு என்று எடுக்கப்படும் முயற்சியின் அளவும் எப்போதும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

490. ஒருவர் ஒரு வேலையைச் செய்ய செய்ய அதைச் செய்யும் தகுதியை இழக்கிறார்.

491. நீங்கள் தரையிலிருக்கும் போது அதை விடக் கீழே விழ இயலாது.

492. இருவர் சேர்ந்து ஒரு வேலையைச் செய்திருந்தால் அதில் இருக்கும் தவறுகளுக்கு யாருமே பொறுப்பாக மாட்டார்கள்.

493. நீங்கள் எந்த விதமான தவறான தகவலும் கணிணியில் பதிவு செய்துவிடாத படி உள்ளீடுகளில் கட்டுப்பாடைக் கொண்டுவந்தாலும் அதை எல்லாவற்றையும் மீறி ஒரு புத்திசாலி அதிலும் தவறான தகவலை உள்ளீடு செய்து விடுவான்.

494. உங்களால் பலரைச் சில காலமும் சிலரைப் பல காலமும் ஏமாற்ற முடியும். ஆனால் உங்கள் தாயை மட்டும் ஏமாற்றவே முடியாது.

495. வசதியே இல்லாதவர்கள் வாங்கிய கடனைக் கஷ்டப்பட்டு அடைப்பார்கள்.வசதியுள்ளவர்களோ .... ஏப்பமிடுவார்கள்.

496. தகுதியில் தான் தகுதியின்மையின் விதை இருக்கிறது.

497. அதிகப்படியான தகுதி தகுதியின்மையை விட மோசமானது.

498. தேவையைத் தேவை என ஒத்துக் கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தேவையே மறைந்துவிடும்.

499. பணத்தின் அளவு பெருகப் பெருக அதன் மதிப்பு குறையும்.

500. ஒரு திட்டத்தின் படிகள் - (1) மகிழ்ச்சி (2) கற்பனை (3) குழப்பம் (4) தவறு செய்தவரைத் தேடுதல் (5) தவறே செய்யாதவரைத் தண்டித்தல் (6) சம்பந்தமே இல்லாதவருக்குப் பரிசு வழங்குதல்.