Blogger news

Welcome to myZone and thanks for ur visit ((((ஸ்ரீநிவாஸ்))))

Blogger templates

மர்பி விதிகள் - 1001 - 1500

1001. தூரத்திலிருந்து பார்க்கும் போது அழகாக இருக்கும் எதுவும் பக்கத்தில் பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருப்பதில்லை.

1002. நேற்றைய சாப்பாட்டுக்குத் தேவையானதை நாளை மதியத்துக்குள்ளாவது வாங்கிவிட வேண்டும்!

1003. ஒரு குழந்தை என்பது மிகக் குறைவு, இரண்டு என்பது மிக அதிகம்!

1004. ஒருவர் தான் இதுவரை பேசியதைச் சுருக்கமாகச் சொல்லப் போகிறேன் என்று சொன்னாரேயானால், அவர் ஏற்கனவே எடுத்துக் கொண்ட நேரத்தை விட மூன்று மடங்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளப் போகிறார் என்று பொருள்.

1005. எழுத்துக் கோர்ப்பவர்கள் தெரிந்தே விடும் தவறுகளைத் திருத்தி விடுவார்கள். தெரியாமல் செய்த தவறு படிப்பவர்களால் மட்டுமே தெரிந்து கொள்ளப் படும்.

1006. அந்தத் தவறு தான் அந்த வாக்கியத்தின் அர்த்தத்தையே மாற்றியமைப்பதாக இருக்கும்.

1007. நான் உங்களுக்கு மூளையைத் தர முடியாமல் போகலாம். ஆனால் பட்டங்கள் தர இயலும்.

1008. தள்ளுபடியாகிவிடும் என்று நினைக்கும் வழக்குகளுக்கு ஏற்கனவே தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கும்.

1009. உங்களுக்கு எரிச்சலூட்டும் நிகழ்ச்சிகள் மீண்டும் ஒருமுறை நடக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கும்.

1010. கார் நிறுத்தும் இடம்: ஆறு கார்கள் கூட நிறுத்த இயலும் அருமையான இடம். எப்போதும் சாலைக்கு எதிர்புறத்திலேயே இருக்கும்.

1011. ஒரு 'U' திருப்பம் எடுத்து நீங்கள் அங்கே போய் காரை நிறுத்துவதற்குள் ஆறு கார்கள் ஏற்கனவே வந்து நின்றிருக்கும்.

1012. அப்படியே உங்கள் காரை நிறுத்தி விட்டாலும் திரும்பி நீங்கள் வர வேண்டிய கட்டிடத்துக்கு வந்தால் காரை நிறுத்த அருமையான இடம் காத்துக் கொண்டிருக்கும்.

1013. எவ்வளவு பெரிய கார் நிறுத்தும் இடமாக இருந்தாலும் ஒரு கார் இன்னொரு காரை எடுக்க விடாமல் வழியை மறித்தே நிறுத்தப் பட்டிருக்கும்.

1014. ஒரு அலுவலகத்தின் ஒரு மேலாளர் இன்னொரு மேலாளருக்கு வேலை உருவாக்கும் சிந்தனையிலேயே எப்போதும் இருப்பார்!

1015. ஒரு வேலையைத் தாமதமாகச் செய்வதும் செய்யாமல் இருப்பதும் ஒன்று தான்.

1016. ஏற்கனவே உடைந்து ஒட்ட வைத்த எதுவும் திரும்பவும் விழுந்து உடைவதே இல்லை.

1017. நீங்கள் தேடும் இடம் மட்டும் வரைபடத்தில் இருக்காது.

1018. எத்தனை அதிக உணவு வகைகள் செய்கிறீர்களோ அத்தனை குறைவாகவே விருந்தினர்கள் வருவார்கள்.

1019. எதுவுமே முடிவல்ல.

1020. இது தான் ஆரம்பம்.

1021. பகல் நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட வேலை சுவாரசியமானதாகவே இருக்கும்.

1022. இன்றைய மோசமான திட்டம் நாளைய சிறந்த திட்டத்தை விட நன்றாகவே செயல்படுத்தப் படும்.

1023. வெற்றியும் அதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

1024. உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டிருக்காததாக இருக்கும்.

1025. உங்கள் காரில் இருக்கும் ஏ.சி. கடும் கோடையின் போது தான் ஹீட்டர் முழுமையாக இருக்கும் வண்ணம் மாட்டிக் கொள்ளும். உங்கள் கார் ஜன்னலும் அப்போது திறக்க வராது!

1026. ஒரு நிகழ்ச்சியைப் பற்றி எவ்வளவு அதிகம் திட்டமிட்டும், கவனமெடுத்தும் செய்கிறீர்களோ,அந்த அளவுக்கு அது தவறாக நடைபெறும்.

1027. மாலை 4.40க்கு மேல் பார்க்கும் அனைத்து வேலையும் மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டியதாகவே இருக்கும்.

1028. உங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை. எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டியதும் இல்லை.

1029. திருத்தப்படக்கூடிய தவறுகளை யார் செய்தார்கள் என்று பார்க்க வேண்டியதில்லை.

1030. முடிந்த வேலை முடிந்தது தான். எனவே அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை.

1031. உலகின் முதல் பொய்: இதுவரை இதை நான் செய்ததே கிடையாது.

1032. நீங்கள் எந்த விசயத்தைப் பற்றி முழுதும் தெரிந்து வைத்திருக்கிறீர்களோ அதைப் பயன்படுத்தும் வாய்ப்பு வரவே வராது.

1033. நல்ல எண்ணங்கள் தண்டனைக்குத் தப்புவதில்லை.

1034. முக்காலியின் முக்கியமான கால் உடைந்து போன அந்த ஒரு கால் தான்.

1035. எதை நிலையில்லை என்று நினைக்கிறீர்களோ அதுவே நிலையானது.

1036. எதை நிலையானது என்று நினைக்கிறீர்களோ அதுவே நிலையில்லாதது.

1037. ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து எடுப்பதற்கு தேவைப்படும் சக்தி அதை மீண்டும் அதே இடத்தில் கனகச்சிதமாக வைப்பதற்கு ஆகும் சக்தியை விடக் குறைவாகவே இருக்கும்.

1038. நீங்கள் செய்யும் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை அரசாங்கத்திடம் இருந்து புறப்படும்.

1039. உங்களுக்கு எளிதில் புரிந்த விஷயத்தைத் தான் மற்றவர்களுக்கு எளிதில் புரிய வைக்க முடியாது.

1040. மற்றவர்களுக்கு எளிதில் புரிய வைத்து விட்டீர்களேயானால், உங்களுக்குப் புரியவில்லை என்று அர்த்தம்.

1041. நீங்கள் தவறாகச் செய்யும் காரியத்தை மட்டும் சரியாகச் செய்வீர்கள்.

1042. பணத்தைச் சம்பாதிக்கும் எளிய வழி அதைத் தொலைப்பதை நிறுத்துவதாகும்.

1043. எந்த நிர்வாகத்திலும் தேவையை விட அதிக மேலாளர்கள் இருப்பார்கள்.

1044. குறைந்தது 50 சதவீத உலக ஜனத்தொகை தனக்கு முன் தனது மாமியார் வருவதை விரும்புவதில்லை.

1045. மேலாளர்களுக்கிடையே உறவை வளர்க்கும் நோக்கில் கொண்டு வரும் எந்த நடவடிக்கையும் அவர்களிடையே பகையையே வளர்க்கும்.

1046. எந்த மாற்றமும் முதலில் பார்க்கும் போது பெரியதாகத் தான் தெரியும். (புதுச் செருப்பு காலைக் கடிக்கும். பின் அதுவே பழகி விடும்)

1047. ஒரு முட்டாள் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பது மலை மேல் இருக்கும் மனிதனைப் போல்.அவனுக்கும் அனைத்தும் சிறியதாகத் தெரியும். அவனை யார் பார்த்தாலும் சிறியதாகத் தான் தெரிவான்.

1048. நேர்மையைத் தத்துவங்கள் மிஞ்சும் இடமே பல்கலைக்கழகம் எனப்படும்.

1049. அரசுக்கு அதிக செலவினத்தை உருவாக்கும் அரசியல்வாதியே ஜெயிப்பார்.தொலைநோக்குக் காரர்கள் எல்லாம் சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

1050. சாத்தியமே இல்லாத ஒரு நிகழ்ச்சி, அது எதிர்பாராத குழப்பத்தை விளைவிக்குமானால் கண்டிப்பாக நடந்தே தீரும்.

1051. ஒரு முக்கியமான கூட்டத்தில் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அதை அனைவரும் கவனித்துக் கொண்டிருக்கும் போது தான் உங்கள் முதுகில் அரிப்பு ஏற்படும்!

1052. வெள்ளை நிறச் சட்டை போட்டிருந்தால் கருப்பு நிற தூசி வந்து ஒட்டும்.

1053. கருப்பு நிறச் சட்டை போட்டிருந்தால் வெள்ளை நிற தூசி வந்து ஒட்டும்.

1054. யார் நீங்கள் மறந்து போனால் மிகவும் கோபம் கொள்வார்களோ, அவர்களைத் தான் நீங்கள் மறந்து போவீர்கள்.

1055. இரண்டு தவறுகள் சேர்ந்து ஒரு 'சரி'யை உருவாக்க முடியாது.

1056. இரண்டு தவறுகள் சேர்ந்து ஒரு 'சரி'யை உருவாக்க முடியுமானால், மூன்றாவது தவறு ஒன்றும் இணைந்து கொள்ளும்.

1057. ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்தவர்களால், மற்றவர்களுக்கு அதைத் தெளிவாகப் புரிய வைக்கவே முடியாது.

1058. அரசியலில், நன்றாக பிரசாரம் செய்பவர்கள் ஜெயிப்பார்கள்.

1059. சரியான காரணத்திற்காக எந்த ஒரு விஷயமும் செய்யப்பட்டது இல்லை.

1060. சமையலறையில் சுத்தம் என்பது அந்த அறையை வேறு அறையாக மாற்றினால் தான் இருக்க முடியும்.

1061. மோசமான சட்டம் திருத்தத்தின் பிறகு மேலும் மோசமாகி விடும்.

1062. இயற்கையின் சட்டத்திற்கு முன் அரசின் சட்டம் செல்லுபடியாகாது. தவறாகச் செய்வது தான் இயற்கையின் சட்டம்.

1063. உயரத்தில் இருக்கும் பல்பு தான் முதலில் ப்யூஸ் போகும்.

1064. பறந்து வரும் தூசி கண்ணை நோக்கி தான் வரும்.

1065. பொறுமையின் எல்லையை மீறுவதாகவே அனைத்து தவறுகளும் நடக்கும்.

1066. திறமைக்கு உள்ளே தான் தவறின் விதைகள் இருக்கின்றன.

1067. தேவையை தேவை தானா என்று யோசிக்க ஆரம்பித்தால் தேவையே மறைந்து போகும்.

1068. பணத்தின் பிரபலமான விதி. காலப் போக்கில் பணத்தின் அளவு பெருகும். மதிப்பு வகுபடும்.

1069. எளிதில் முடிக்கக் கூடிய எதுவும், அது என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத தவறில் தான் சென்று முடியும்.

1070. நீங்கள் வெளிப்படுத்தும் திறமையும், அதை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

1071. நீங்கள் சரிபார்க்காத அந்த ஒரு விஷயம் தான் தவறு நடந்திருக்கவே வழி வகுத்திருக்கும்.

1072. கயிற்றைப் பிடித்துத் தள்ள முடியாது!

1073. உடைந்த பாகத்தில் இருக்கும் ஒரு நல்ல பாகத்தை அதிலிருந்து பிரிக்க முடியாமல் தான் இருக்கும்.

1074. முதலாளி நீங்கள் சரியாக வரும் நாட்களில் எல்லாம் வரவே மாட்டார்.

1075. ஒரு அரசியல்வாதி பொருளாதாரத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று சொல்வதைக் கேட்காதீர்கள். அவர் என்ன செய்கிறார்? என்று பாருங்கள்.

1076. எதிர்த்து யாரும் போட்டியிடாத வரை யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்.

1077. வாய்ப்பு என்பது நீங்கள் எதிர்பார்க்காத தருணத்தில் மட்டுமே கதவைத் தட்டும்.

1078. ஆணியைச் சரியாக அடித்து விடுவீர்கள். ஆனால் சுத்தியலைக் காலில் சரியாகப் போட்டுக் கொள்ளவும் தவறமாட்டீர்கள்.

1079. சிங்கமும் ஆடும் பக்கத்தில் படுத்துத் தூங்கலாம். ஆடு ரொம்ப நேரத்துக்கு தூங்க முடியாது.

1080. நீதி எந்த நேரமும் ஜெயிக்கும். 7 க்கு 3 என்ற எண்ணிக்கையில்.

1081. நீங்கள் எந்தத் திசையை நோக்கிக் கிளம்பினாலும் காற்று உங்கள் எதிர்த்திசையிலிருந்தே வீசும்.

1082. ராணுவ விதி: ஒரு பொருள் அசைந்தால் அதைப் பார்த்து சல்யூட் அடிக்க வேண்டும்.அசையாவிட்டால் அதைத் தூக்கி வேறு இடத்தில் வைக்க வேண்டும். அசைக்க முடியாவிட்டால் அதன் மேல் பெயிண்ட் அடித்து விட வேண்டும்.

1083. எந்த ஒரு ஆவணம் கண்டிப்பாக இருந்தாக வேண்டுமோ அது மட்டுமே கோப்பில் இருக்காது.

1084. அப்படியே இருந்தால் அது காலாவதி ஆனதாக இருக்கும்.

1085. தேவையில்லாத ஆவணங்களுக்கு மேற்கண்ட இரண்டு விதிகளும் பொருந்தாது.

1086. பதவி மனிதர்களை ஈர்க்கும். ஆனால் நிரந்தரமாக வைத்திருக்காது.

1087. நீங்கள் கீழே விழுவதில் தப்பே இல்லை. உங்களால் கீழிருந்து எழும் போது ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு எழ முடியும் பட்சத்தில்.

1088. ஒரு இடத்தில் உங்களைக் காப்பாற்றிய ஒரு விஷயம் மற்றொரு இடத்தில் உங்களைக் குப்புறத் தள்ளவே செய்யும்.

1089. ஒரு பத்திரிகையாளரின் பேச்சில் இருக்கும் சுவாரசியத்துக்கும், அவரது எழுத்தில் இருக்கும் சுவாரசியத்துக்கும் உள்ள தூரம், அவர் பேசிக்கொண்டிருக்கும் ஊருக்கும், அவரது பத்திரிகை வெளியாகும் ஊருக்கும் இடையேயான தூரத்துக்குச் சமமாக இருக்கும்.

1090. பழங்களைக் காயாக வாங்கினால் பழுக்கும் முன்னரே காலியாகி விடும்.

1091. பழமாக வாங்கினால் அழுகும் வரை காலியாகாது.

1092. ஒளியின் வேகத்தை மிஞ்சமுடியாது என்று யார் சொன்னது? பணமில்லாத கணக்கிலிருந்து கொடுக்கப்பட்ட காசோலையின் வேகம் பிறகு என்னவாம்?

1093. வேலை இல்லாமல் சுற்றுவதாயிருந்தால் எந்த இடத்துக்கும் பத்தே நிமிடங்களில் சென்று விட முடியும்.

1094. நம்பிக்கை எவ்வளவுக்கெவ்வளவு மூடத்தனமாகத் தெரிகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அந்த நம்பிக்கையால் வெற்றி கிடைக்கும்.

1095. உங்களிடம் ஒரு சுத்தியல் இருந்தால் எந்தப் பொருளைப் பார்த்தாலும் ஆணி போலவே தான் தெரியும்.

1096. லாட்டரியில் எதிர்பாராமல் பணம் விழுந்தால் எதிர்பாராத செலவு முன்னமே வந்திருக்கும்.

1097. இருக்கும் வேலையைத் தக்க வைத்துக் கொள்வதை விட புதிய வேலையைக் கண்டறிவது கஷ்டமான காரியமாகும்.

1098. நீங்கள் தேடிய அனைத்துப் பொருட்களும் அதைக் கடைசியாகத் தேடிய இடத்தில் கிடைத்திருக்குமே!

1099. எந்த ஒரு கமிட்டிக் கூட்டத்திலிருந்தும் புதியதான ஒரு யோசனை தோன்றியதாகச் சரித்திரமே இல்லை.

1100. நீங்கள் எதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம் என்று நினைக்கிறீர்களோ அதைக் குறைந்த பட்சம் ஐந்து விதமாகப் புரிந்து வைத்திருப்பார்கள் கேட்டவர்கள்!
1101. ஒரு நாட்டின் பொருளாதாரம் மேம்பட ஆரம்பித்து விட்டதென்றால் மற்ற அனைத்தும் சீரழிய ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.

1102. உங்கள் விலையை எவ்வளவு இறக்குகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் தொழிலை விட்டு வெளியேறி விடலாம்.

1103. விளம்பரத்தின் அளவினைப் பெரிதாக்கினால் லாபத்தின் அளவு சிறிதாகி விடும்.

1104. நல்ல வேலைக்காரன் உங்களுக்கு எதிரே தான் கடை போடுவான்.

1105. மோசமான வேலைக்காரனோ உங்களை விட்டுப் போவதே இல்லை.

1106. எதுவுமே சாத்தியம் தான். ஆனால் எதுவுமே எளிது இல்லை.

1107. கூரையில் ஒட்டை இருக்கும் இடத்திற்கும் நீர் ஒழுகும் இடத்திற்கும் சம்பந்தமே இருக்காது.

1108. உங்களிடம் ஒரே ஒரு ஆணி மட்டுமே இருந்தால் அது அடிக்கும் போது வளைந்து தான் போகும்.

1109. நீங்கள் தாமதமாகச் செல்லும் எந்த ஒரு நிகழ்ச்சியும் சரியான நேரத்திற்கு ஆரம்பித்திருக்கும்.

1110. நான் உண்மையைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அது அத்தனை சுவாரசியமானதாக இல்லை.

1111. இதற்கும் மேல் ஒரு விஷயம் தவறாகப் போவதற்கு வாய்ப்பே இல்லையென்றால், அதற்கு மேலும் அது தவறாகப் போகும்.

1112. கும்மிருட்டாக ஆகக் கூடிய வாய்ப்பு இருக்கும் இடத்தில் தான் விளக்கு அணைந்து போகும்.

1113. மேம்பட்ட தொழில் நுட்பம் பார்ப்பதற்கு மாய மந்திரம் போலவே இருக்கும்.

1114. ஒரு கமிட்டி என்பது 12 வயிறுகளைக் கொண்ட மூளையில்லாத ஒரு உயிர் மட்டுமே உடைய ஒரு அமைப்பாகும்.

1115. ஒரு கமிட்டியால் குதிரையைக் கூட ஒட்டகம் என்று முடிவு செய்ய இயலும்.

1116. ஒரு கமிட்டி செய்யும் தவறுக்கு யாருமே பொறுப்பாக மாட்டார்கள்.

1117. ஒரு கமிட்டி என்பது ஒருவர் செய்யும் வேலையைக் கூட 12 பேர் சேர்ந்து செய்ய முடியாத ஒரு அமைப்பாகும்.

1118. எந்தக் கூட்டமும் முடியும் நேரம் வரை எதுவும் பேசாமல் இருங்கள். அது உங்களை அறிவாளி என்று எண்ணத் தூண்டும்.

1119. யார் எரிச்சலடையச் செய்யும் வண்ணம் பேசுகிறாரோ அவரே முக்கிய விருந்தினர் என்றழைக்கப்படுவார்.

1120. வெளியூருக்குக் கிளம்பும் போது பாதித் துணிகளையும் இரண்டு மடங்கு பணத்தையும் எடுத்துச் செல்லுங்கள்.

1121. அரசாங்க வேலைகளில் காகிதங்களின் அளவும், வேலை நடந்த அளவும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

1122. இந்த உலகில் நெறியில்லாத ஒரே இனம் மனித இனம்.

1123. இந்த உலகில் பண்படாத, பண்படுத்த வேண்டிய ஒரே இடம் உங்கள் தொப்பிக்குக் கீழே இருக்கிறது!

1124. நம்பிக்கையுடன் வாழ்பவன் ஏமாற்றத்துடனே சாகிறான். :(

1125. உங்களுக்கு சொறிந்தே ஆக வேண்டும் என்னும் அவசியம், 1. நீங்கள் எத்தனை பேர் கொண்ட கூட்டத்தின் நடுவில் இருக்கிறீர்கள்? 2. உங்கள் கையால் எட்ட முடியாத இடம் எது? 3.நீங்கள் தொட வெட்கப்படும் இடம் எது? என்பதைப் பொருத்தது!

1126. இந்த உலகில் தவறாகப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எளிதான பொருள் இன்னும் கண்டறியப்படவில்லை.

1127. சூழ்நிலைகளே பல முட்டாள்களையும் மேதைகளாக உருமாற்றுகிறது.

1128. யார் புகழப்படுகிறாரோ, அவரே வெறுக்கவும் படுவார்.

1129. உங்களுக்கு மரம் தேவைப்படும்போது தான் அலுமினியமும், இழைக் கண்ணாடியும்,வினைல் பொருட்களும் கைகளுக்குக் கிடைக்கும்.

1130. சீர்திருத்தம் கீழிருந்து தான் மேலே வருமேயன்றி, மேலிருந்து கீழ் அல்ல.

1131. பயனுள்ள வகையில் இயற்றப் படும் எந்த ஒரு சட்டமும், பத்திரிகைகளின் கண்களுக்குத் தெரிவதே இல்லை.

1132. இதுவரை திட்டப்படி எதுவுமே நடந்ததில்லை.

1133. பிரச்னையை யார் உருவாக்கினார் என்பதைக் கண்டறிந்ததும் பிரச்னையைத் தீர்க்கும் வேலை முடிவடைந்து விடும்!

1134. ஒரு பொருள் இல்லாமல் இருப்பதற்கான காரணம் ஏதும் இல்லையென்றால், அந்தப் பொருள் இருந்தே தீரும்.

1135. அரசியல்வாதிக்கும் நத்தைக்கும் உள்ள ஒரே வித்தியாசம், நத்தை தான் சென்ற பாதையில் தடம் ஏற்படுத்தியிருக்கும்.

1136. கணிணி தவறு செய்கிறது என்று சொல்வதன் பின்னால் இரண்டு மனித தவறுகள் இருக்கும். ஒன்று அந்தத் தவறைச் செய்தவர். இன்னொன்று, அந்தப் பழியைக் கணிணி மேல் போடுவது!

1137. எந்தப் பணி மனிதனை நம்பி இருக்கிறதோ அப்போதே அது நம்பமுடியாததாகிறது.

1138. அனுபவமும் தகுதியுமுள்ள தலைவர்கள் என்ன செய்தாலும் மக்கள் இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் என்பார்கள். அனுபவமும் தகுதியுமில்லாத தலைவர் என்ன செய்தாலும் அதை மக்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.

1139. தவறுகளைப் பற்றிச் சொல்லும் எந்தப் பத்திரிகைச் செய்தியும் தவறோடு தான் இருக்கும்.

1140. புழுக்கள் குறைவாக இருப்பதால் கோழி குப்பையைக் கிளறாமல் இருப்பதில்லை!

1141. நிர்வாகத்தில் கெட்ட செய்தி மட்டும் எதிர் நீச்சல் போட்டு பரவும்!

1142. நீங்கள் பிரச்னைக்குத் தீர்வு காணும் போது பிரச்னை தானே தீர்ந்திருக்கும்!

1143. எழுதும் மையை அதிக அளவில் வாங்குபவருடன் (பத்திரிகையாளர்கள்?) எச்சரிகையாக இருங்கள்!

1144. மிக மிக முக்கியமான கூட்டம் என்று நீங்கள் கருதும் கூட்டத்தில் தான் சாதாரண விஷயங்களுக்காக விவாதம் நடந்து கொண்டிருக்கும்.

1145. சந்தையிலிருந்து திரும்பும் போது உங்கள் வீட்டுச் சாவி எப்போதும் சரக்கு இருக்கும் பைக்கு அடியிலேயே இருக்கும்.

1146. இரண்டு மனிதர்கள் சேர்ந்து மூன்றாவது மனிதனின் பணத்தை எவ்வாறு செலவளிப்பது என்று திட்டமிடும் போது தான் திருட்டுத் தனம் ஆரம்பமாகிறது.

1147. ஒரு விஷயம் நடக்க இருக்கும் நிகழ்தகவும் அதை எதிர்பாராமல் இருக்கும் நிகழ்தகவும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

1148. குதிரைப் பந்தயத்தில் அதிகப் பணம் கொடுத்து வாங்கும் சீட்டு வெற்றி பெற வாய்ப்பே இருக்காது.

1149. உங்களுக்கு உணவுப் பொட்டலத்தை விமான சிப்பந்தி வழங்கும் தருணத்தில் தான்,விமானம் காற்றுப் பொட்டலத்துக்குள் பிரவேசிக்கும். (கனவுலகத்துக்குப் போய்ட்டீங்களா?!)

1150. அந்தக் காற்றுப் பொட்டலத்தின் அளவு, நீங்கள் வாங்கிய தேநீரின் சூட்டுக்கு நேர் விகிதத்திலேயே இருக்கும். (அப்பாடி!! நனவுலகத்துக்கு வந்துட்டீங்களா?!)

1151. நன்றாகத் துடைக்கப்பட்ட கார்க் கண்ணாடியில் முதலில் மோதும் பூச்சி, உங்கள் கண்களுக்கு முன்னர் தான் சரியாக மோதும்.

1152. அதிகம் நடமாட்டம் இருக்கும் குறுகலான தெருவில் தான் அடிக்கடி கட்டிட வேலையும் நடைபெறும்.

1153. நீங்கள் நினைப்பது எப்போது மட்டும் சரியாக நடக்கும் தெரியுமா? நீங்கள் தவறாக நடக்கும் என்று கணிக்கும் போது மட்டும்.

1154. யார் குறைவான வேலை செய்கிறார்களோ, அவருக்குத் தான் அத்தனை புகழும் சென்றடையும்.

1155. அனுபவம் என்பது நீங்கள் எத்தனை இயந்திரங்களைப் பழுதாக்கி உள்ளீர்கள் என்பதைப் பொருத்தது.

1156. சாலையில் வளரும் எந்தச் செடியும் எந்தக் கவனிப்பும் இல்லாவிடினும் வாடிப்போவதே இல்லை. வீட்டிலோ?

1157. ஆற்றைக் கடக்கும் வரை படகோட்டியைக் குற்றம் சொல்லக் கூடாது.

1158. இயந்திரம் வேலை செய்ய வேண்டும். மனிதன் சிந்திக்க வேண்டும்.

1159. எந்த வேலையையும் நீங்கள் செய்ததை விட எளிதாகச் செய்ய வழியிருக்கும்.

1160. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, ஒரு காரின் விலையை, ஒரு முறை முடிவெட்டும் செலவால் வகுத்துக் கிடைக்கும் விடையாகும். குறைவான விகிதம் இருந்தால் அது வளர்ச்சி அதிகம் என்றும் விகிதம் அதிகமாய் இருந்தால் வளர்ச்சி குறைவு என்றும் அர்த்தம்.

1161. இருவர் ஒரே அறையில் தங்கி இருக்கும் விடுதியில் ஒருவர் தூங்கும் போது தான் மற்றவர் வருவார்.

1162. மேற்கண்ட அறையில் ஒருவர் எழுவதற்காக வைக்கும் அலார ஓசை அந்த விடுதியையே எழுப்பி விடும் படி இருக்கும்.

1163. நீங்கள் எதையாவது கண்டறிய வேண்டுமெனின் தேட ஆரம்பிக்க வேண்டும்.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தொலைபேசி அழைப்பு

1164. நீங்கள் வீட்டைப் பூட்டி வெளியேறிய உடன் அழைக்க ஆரம்பிக்கும்.

1165. குளிப்பதற்காகத் தலையில் தண்ணீர் ஊற்றியவுடன் அழைக்க ஆரம்பிக்கும்.

1166. அப்படியும் நீங்கள் ஓடிவந்து எடுத்தால் அது தவறான அழைப்பாகவே இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ?

1167. நீங்கள் தொலைபேசியில் அழைத்த நபர் அந்த நிமிடம் தான் வெளியே போயிருப்பார்.

1168. தொலைக்காட்சியில் முக்கியமான காட்சியை மட்டும் யாருமே பார்த்திருக்க மாட்டார்கள்.

1169. பக்கத்து வீட்டுக் காரர் பார்த்திருப்பார் என்று அவரிடம் கேட்டால், "அது என்ன நிகழ்ச்சி?"என்று ஆரம்பிப்பார்.

1170. ஒரு விஷயம் தவறாக நடக்கும் முன்பே, ஒருவர் இது தவறாகவே நடக்கும் என்று எச்சரித்திருப்பார்.

1171. தூரத்தில் அழகாய்த் தெரிந்த எந்தப் பொருளும் அருகில் வந்தால் அழகாக இருப்பதில்லை.

1172. தூரத்தில் அழகில்லாமல் தெரியும் பொருளும் அருகில் வந்தால் அழகாக இருப்பதில்லை.

1173. ஒரு பறக்கும் தூசு பக்கத்தில் இருக்கும் கண் யாருடையதோ அவரை நோக்கியே வரும்.

1174. கண்டுபிடிப்பதை நிறுத்தி விட்டு, அதை முறைப்படி செயல்படுத்தும் காலம் எப்போதாவது வருமா?

1175. பொறுமை இல்லாத மேலாளருக்குத் தான் குறும்புக்கார வேலையாள் மாட்டுவார்.

1176. கஷ்டமான வழியில் ஒரு பணியைச் செய்வது மிகவும் எளிது.

1177. என்ன சொல்லப் படுகிறது என்பது முக்கியமில்லை. யார் சொல்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

1178. ஒரு பொருளின் விலை 50 ரூபாய்க்குள் தான் என்றால், அதன் விலை 19.95 ரூபாயாக இருக்கப் போவதில்லை.

1179. உங்களால் அடைய முடிவதின் மேல் உங்களுக்கு ஆசையே வருவதில்லை.

1180. சட்டசபை வெளிநடப்பு எப்போதும் சட்டப்படியே நடக்கும்.

1181. ஒரு சம்பவம் போதுமான அளவுக்கு உங்களுக்கு எரிச்சலூட்டி விட்டதென்றால் மீண்டும் ஒரு முறை நிகழ்ந்தே தீரும்.

1182. ஒரு மேலாளர் தனக்குக் கீழே வேலை பார்ப்பவரின் எண்ணிக்கையைக் கூட்ட முயல்வாரேயன்றி, இன்னொரு மேலாளர் வருவதை விரும்பமாட்டார்.

1183. தாமதம் என்பது மறுப்பதற்கு நாகரீகமான பெயர்.

1184. ஒரு அறிவியலின் வளர்ச்சி அவ்வறிவியல் சம்பந்தப்பட்ட பத்திரிகைகளின் எண்ணிக்கைக்கு எதிர்விகிதத்திலேயே இருக்கும்.

1185. நீங்கள் தேடும் இடம், உங்கள் கையில் இருக்கும் வரைபடத்தில் இருக்காது.

1186. நீங்கள் எவ்வளவு அதிகம் சமைக்கிறீர்களோ அவ்வளவு குறைவாகவே உங்கள் விருந்தினர் சாப்பிடுவார்.

1187. எதுவுமே முடிவல்ல.

1188. இதோடு முடிந்து விட்டது.

1189. உங்கள் சோதனை வெற்றி பெற்றுவிட்டது என்றால், நீங்கள் பயன்படுத்திய உபகரணம் தவறானது என்று அர்த்தம்.

1190. வெற்றி என்பது, ஏற்கனவே வெற்றி பெற்றவரையும், அவர் வெற்றி பெற்ற விதத்தையும் சுத்தமாக மாற்றியமைப்பதாகவே இருக்கும்.

1191. வெற்றிக்கும் அதற்காக எடுத்துக் கொண்ட சிரத்தைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

1192. தொழிலாளர்களை முறைப்படி செய்யப் பயிற்சி கொடுத்துவிட்டால் அவர்களின் திறன் குறைந்து விடும்.

1193. உங்களுக்கு வரும் வியாதி மட்டுமே காப்பீட்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்காது.

1194. ஒரு விஷயம் எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, அவ்வளவு வேகத்துடன் உங்களைத் தாக்கும்.

1195. வாடகையே கொடுக்க முடியாதவர்கள் வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். வாடகை கொடுக்க முடிந்தவர்களோ சொந்த வீடு கட்ட ஆசைப்படுகிறார்கள்.

1196. தகுதிக்குள் தான் தகுதியின்மை ஒளிந்துள்ளது.

1197. நீங்கள் குன்றுகளைப் பார்த்துக் கொள்ளுங்கள். மலைகள் தாமாகவே பார்த்துக் கொள்ளும்.

1198. ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவர், தனக்குச் சமமான அந்தஸ்து உள்ளவரின் தகுதியின்மையைப் பற்றி புகார் சொல்வதே இல்லை.

1199. 1 கிலோவுக்கு படம் காண்பிப்பதை விட, 1 கிராமுக்கு வேலை செய்வது உகந்தது.

1200. பணத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதும், அதன் மதிப்பு குறைவதும் வாடிக்கையாகும்.
மர்பி விதிகள் - 1201 - 1300
1201. நீங்கள் மிகவும் உழைத்து நிறைய தகவல்களைப் பேசுவதற்காகச் சென்றால் அங்கு வெகு சிலரே இருப்பார்கள்.

1202. நீங்கள் அற்புதங்களை நிகழ்த்துகையில் அதைக் காண யாரும் இருக்க மாட்டார்கள்.

1203. உங்கள் மென்பொருளில் தவறேதும் இல்லையென்றால் அது எதிர்பார்த்த அறிக்கையைத் தராது.

1204. ஒரு எந்திரத்தின் பழுதான பகுதியில் இருக்கும் நல்ல பகுதியைக் கழட்டவே முடியாது.

1205. அரசியல்வாதிகள் சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் கதையளக்க ஆரம்பித்து விடுவார்கள்.அவர்களுக்குக் கிடைக்கும் நேரம் அனைத்துமே அவர்களுக்கான சந்தர்ப்பங்களே.

1206. காலையில் விஷயங்கள் நன்றாகத் தான் ஆரம்பிக்கும். மாலையில் மாறி விடும்.

1207. காலையில் மோசமாக ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் மாலையில் மேலும் மோசமாகும்.

1208. எதனோடும் சமானமில்லாத இரு பொருட்கள் அவைகளுக்குள் சமமானதாக இருக்கும்.

1209. நீங்கள் என்ன செய்யப் போவதில்லை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.

1210. ஒரு விஞ்ஞானியிடம் கேட்டால் ஒரு கண்டுபிடிப்புக்கு அவசியம் மூளை, ஒரு பேப்பர், ஒரு பென்சில் என்பார். ஆனால் ஆய்வுக்குண்டான பட்ஜெட் போடும் போது இதெல்லாம் அவர்களுக்கு ஞாபகம் வராது.

1211. நீங்கள் ஒரு விஷயம் சரியாக நடந்து கொண்டிருப்பதாக உணர்ந்தால் நீங்கள் எதையுமே சரியாகப் பார்க்கவில்லை என்று பொருள்.

1212. இப்போது ஏதேனும் நடந்தால் ஒரு காரியம் முழுக்கக் கெட்டு விடும் என்றால் அப்போது அது நடக்கும்.

1213. பொதுமக்களிடம் இரண்டே பிரச்னைகள் தான். ஒன்று சிந்திக்க மாட்டார்கள். இரண்டு செயல்படுவார்கள்.

1214. செய்யத் தெரிந்தவர் செய்வார். தெரியாதவர் சொல்லித் தருவார். சொல்லத் தெரியாதவர் நிர்வகிப்பார்.

1215. எப்போதுமே ஒரு செயலைச் செய்ய நேரமே இருப்பதில்லை. அதற்கான காலம் முடிந்த பின் அதே செயலைச் செய்ய மட்டும் நேரம் இருக்கும்.

1216. உங்கள் கோப்பையில் காபி ஊற்றியவுடன் தான் விமானம் மேகக் கூட்டத்திற்குள் செல்லும்.

1217. ரயிலில் உங்கள் பெட்டி மட்டும் கடைசியில் தான் இருக்கும்.

1218. அவர்களுக்குள்ளேயே பேசும் மனிதர்கள் வெளியே அதிகம் பேசமாட்டார்கள்.

1219. வாழ்க்கையின் ரகசியமே எவ்வளவுக்கெவ்வளவு தாமதமாக ஆனால் இளமையாகச் சாவது என்பது தான்.

1220. உங்களுக்குப் பிடித்த உணவைச் சாப்பிடும் போது தான் விருந்தாளி வந்து அதைக் கேட்பார்!

1221. நீங்கள் செல்ல விரும்பும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்ததுமே உங்கள் கைக்குக் கிடைக்கும்.

1222. எவ்வளவுக்கெவ்வளவு எண்ணிக்கையில் செயல்கள் குறைவாகச் செய்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு இயந்திரங்கள் பழுதாகாமல் வேலை செய்யும்.

1223. நீங்கள் செய்யும் எதுவும் முழுத் தோல்வியை அடையாது! முழுவெற்றியும்.

1224. நீங்கள் செய்யும் செயல்கள் மோசமான செயல்களின் எடுத்துக்காட்டாய் விளங்கும் என்பதில் ஐயமேது?

1225. யாரொருவர் பிரச்னையின் முழு சொரூபத்தினையும் சரியாக உணரமுடிகிறதோ அவர் பிரச்னையின் ஒரு பங்காய் இருப்பார்.

1226. மருத்துவர்களுக்கும் வக்கீல்களுக்கும் உங்களுக்கு நேரமில்லாத போது தான் அனுமதி கொடுத்திருப்பார்கள்.

1227. ஒரு துறையில் உங்களுக்கு இருக்கும் அறிவை நிரூபிப்பது அந்தத் துறை பற்றி நீங்கள் பேசும் போது பொது மக்களுக்கு எவ்வளவு தூரம் புரியாமல் இருக்கும் என்பதைப் பொருத்தது.

1228. உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும், அவர்களைக் கவனிக்க நீங்கள் வைத்திருக்கும் சிப்பந்திகளின் எண்ணிக்கையும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

1229. உங்கள் கடைக்கு உங்கள் சிப்பந்திகள் அனைவரும் வந்த அன்று தான் ஒரு வாடிக்கையாளரும் வர மாட்டார்.

1230. நீங்கள் மட்டும் கடையில் தனித்து அமர்ந்திருக்கும் போது தான் அவசரத்துடன் நிறைய வாடிக்கையாளர்கள் உங்கள் கடைக்கு வருவார்கள்.

1231. சட்டம் மோசமாக இருந்தால் சாட்சியை வைத்து வாதிடுங்கள். சாட்சி மோசமாக இருந்தால் சட்டத்தை வைத்து வாதிடுங்கள்.

1232. மேற்சொன்ன இரண்டும் மோசமாக இருந்தால் வாய்தா வாங்குங்கள்.

1233. அதிகமாக ஒரே தவறைச் செய்தால் அதுவே சரியாக மாறி விடக் கூடும்.

1234. எந்தப் புத்தகமும் கடன் கொடுப்பதால் தொலைந்து விடாது. உங்களுக்குப் பிடித்த புத்தகம் தவிர.

1235. ஒருவரிடமிருந்து எண்ணத்தைத் திருடினால் அது திருட்டு. பலரிடம் இருந்து திருடினால் அது ஆராய்ச்சி எனப்படும்.

1236. சுவாரசியமாக எதிர்பார்த்த நிகழ்ச்சிகள் எதிர்பார்ப்பது போல் சுவாரசியமாக நடப்பதில்லை.

1237. நுகர்வோருக்கென்று எதைத் தயாரித்தாலும் அதை மக்கள் வாங்கிவிடுவார்கள்.

1238. பொய்யைப் பொய்யென்று பல முறை நிரூபித்த பின்னரும் அதை நம்புவதற்கு ஆட்கள் இருப்பார்கள்.

1239. அனைவருமே பொய் சொல்கின்றார்கள். ஆனால் பாதகமில்லை. அதைத் தான் யாரும் கேட்பதில்லையே.

1240. நீங்கள் விரும்பியதைச் செய்து முடித்ததும் நீங்கள் வேறொன்றை விரும்ப ஆரம்பித்து விடுவீர்கள்.

1241. எந்த மாற்றமும் முதலில் ஜீரணிக்க முடியாமல் தான் இருக்கும். பின்னர் அதுவே உங்களை ஜீரணித்து விடும்.

1242. உங்களுக்கு எப்போவாவது வயிற்று வலி வரும் என்றால், அது ஐந்து மாதங்களாக நீங்கள் காணத் தவித்துக் கொண்டிருக்கும் உங்கள் காதலியைப் பார்க்கும் போது தான் வரும்.

1243. முடிவில்லா மோசங்களை விட, மோசமான முடிவு நல்லது தானே!

1244. எதிர்காலத்தினைப் பற்றி உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் கவலைப்படாதீர்கள்.தற்போதுள்ள நிலையே நீடிக்கும்!

1245. ஒரு பல்கலைக் கழகத்தில் அடுத்தடுத்து நடக்கவிருக்கும் வகுப்புக்கள் அந்தக் கட்டிடத்தின் இரு எதிரெதிர் முனைகளிலேயே நடக்கும்.

1246. யார் உடனே வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு மோசமானதே கிடைக்கும்.

1247. யார் பொறுத்திருந்து பெறுகின்றார்களோ அப்போது அவர்களுக்கு அது உதவாது.

1248. விமானவியல் கண்டுபிடிப்பு: விமானத்தில் தரப்படும் தேநீரே விமானத்தின் தடுமாற்றத்திற்குக் காரணமாகும்.

1249. ஒரு குளத்தினுள் இறங்கிப் பார்க்காமல் அதன் ஆழத்தைத் தெரிந்து கொள்ள முடியாது.

1250. நமது லட்சியம் எவ்வளவுக்கெவ்வளவு தாமதமாக இளமையாகவே சாவது என்பது தான்.

1251. நல்ல விதிகளை மாற்ற மோசமான விதிகள் தான் வந்து சேரும்.

1252. முட்டை இருக்கும் பை தான் அறுந்து விழும்.


1253. அதிசயமாக பாயசம் செய்த நாள் தான் விருந்தினரும் வந்து சேர்வார்.

1254. ஒரு குழந்தைக்கு ஏற்கனவே அசுத்தமான தரையை அசுத்தமாக மாற்றத் தெரியாது!

1255. வீட்டில் முழுப்பாட்டும் படிக்கின்ற குழந்தை பள்ளிக்குச் சென்றதும் அமைதியாக இருக்கும்.

1256. வண்டி ஓட்டுபவர்கள் அனைவரும் தாம் சரியாக ஓட்டுவதாகத் தான் எண்ணிக் கொள்வார்கள்.

1257. நீங்கள் அவசரமாகப் போக நினைக்கும் போது தான் சாலையில் சிவப்பு நிற விளக்கு எரிந்து கொண்டிருக்கும். சரியென்று நீங்கள் காரை நிறுத்தியவுடன் பச்சை நிற விளக்கு எரியும்!

1258. நீங்கள் சட்டப்படி ஒழுங்காக ஓட்டும் வரை சட்டம் பற்றியும் தண்டனை பற்றியும் தெரிந்திருக்க வேண்டியதில்லை.

1259. உங்கள் வண்டி மட்டுமே மற்ற எந்த வண்டிகளைக் காட்டிலும் அதிக எரிபொருளை உபயோகிக்கும்.

1260. 4 சக்கர சக்தி (4 wheel drive) என்பது முக்கியமான கட்டத்தில், தேவையான நேரத்தில் கார் மாட்டிக் கொள்ளும் என்பதற்கான உத்தரவாதம் ஆகும்.

1261. ஒவ்வொரு பழமொழிக்கும் அதற்கு அப்படியே எதிர்மறையான அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய பழமொழி இருந்தே தீரும்! (உதாரணம் ஒன்று: ஆள் பாதி ஆடை பாதி;கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்.)

1262. எப்போதுமே நால்வரில் ஒருவர் பைத்தியமாகத் தான் இருப்பார். உங்கள் நண்பரில் மூவர் பைத்தியம் இல்லை என்றால், அநேகமாக நீங்கள் பைத்தியமாக இருக்கக் கூடும்!

1263. கூட்டங்களில் சீக்கிரம் பேச்சை முடிப்பவரே சிறந்த பேச்சாளர்.

1264. பேருந்தைப் பிடிக்க வெறுப்பாகி நீங்கள் நடக்கத் துவங்கினால், சரியாக பாதி வழியிலேயே அந்தப் பேருந்து உங்களை முந்திச் செல்லும்.

1265. நன்றாக ஆரம்பித்த விஷயம் கெடுதலாகவே முடியும்.

1266. கெடுதலாக ஆரம்பித்த விஷயம் மோசமாகவே முடியும்.

1267. ஒரு ஜனநாயக நாட்டில் வாக்களிப்புக்கு விட்டால் பொது மக்களே அந்த ஜனநாயகம் தேவையில்லை என்று வாக்களிப்பார்கள்.

1268. நீங்கள் கேட்க விரும்பும் வானொலி தான் சரியாக எடுக்காது.

1269. எந்த ஒரு உலோகத்துக்கும் நீங்கள் அவசரத்தில் இருக்கின்றீர்கள் என்று தெரிவது ஆபத்தானதே!

1270. தேவையில்லாமல் அசையாமல் இருக்கும் எதையும் தொடாமல் இருப்பது நல்லது.

271. உங்கள் கார் மேல் அவர்களாகவே வந்து மோதியவர்கள், சொட்டையைப் பார்த்து விட்டு, "அட! இவ்வளவு சிறியதாகத் தான் இருக்கின்றதே!" என்று தான் சொல்வார்கள்.

1272. பொருட்கள் எப்போதும் சரியான கோணத்தில் தான் கீழே விழும்.

1273. உங்களுக்குப் பதில் தெரியவில்லை என்பதற்காக அடுத்தவருக்கு தெரியும் என்று அர்த்தம் அல்ல.

1274. உங்களுக்குப் பதில் தெரியவில்லை என்பதற்காக அடுத்தவருக்கும் தெரியாது என்று அர்த்தம் அல்ல.

1275. உங்களுக்குப் பதில் தெரிந்து விட்டது என்பதற்காக அடுத்தவருக்கும் தெரிந்திருக்கும் என்று அர்த்தம் அல்ல.

1276. உங்களுக்குப் பதில் தெரிந்து விட்டது என்பதற்காக அடுத்தவருக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல.

1277. அடுத்து நகரம் ஏதாவது வரும் என்று நினைத்தால் கிராமங்கள் மட்டுமே வரும்.

1278. பொது மக்களின் முடிவு தவறாகவே இருக்கும்.

1279. பணம் எப்போதும் உங்களைத் தேடி வருவதில்லை. நீங்கள் தான் தேடிப் போக வேண்டும்.

1280. முன்னேற்ற அறிக்கையின் நீளமும், அந்த திட்டத்தின் முன்னேற்றமும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

1281. பெரியவர்களின் பொன்மொழிகளைத் திருத்தும் அதிகாரம் நமக்கு இருக்கின்றது.

1282. இறந்த பல பெரிய மனிதர்கள் தற்போதைய அரசியலுக்குத் தகுந்த மாதிரி பொன்மொழிகள் சொல்லி இருப்பார்கள்!

1283. பெரும்பாலும் மூலம் தெரியாத பொன்மொழிகள் சீனப் பழமொழிகளாகவே இருக்கும்.

1284. ஒரு இயந்திரம் ஓடாமல் நிற்கும் நிலையில், உங்களுக்குக் கிடைக்கும் எந்த ஒரு இலவச உதவியும், நீங்கள் ஏற்கனவே செய்து பார்த்ததாகவே இருக்கும்.

1285. அளவைகள் எப்போதுமே நம்மால் உடனடியாக உபயோகிக்க முடியாததாகவே இருக்கும்.உதாரணத்திற்கு தூரம் எவ்வளவு என்றால் 5 பர்லாங் என்று விடை கிடைக்கும்.

1286. ஒரு இயந்திரம் எப்போதும் தவறான திசையிலேயே சுற்றும்.

1287. ஒரு இயந்திரத்தினை அதன் பாகங்களிலிருந்து முழுதுமாய் உருவாக்கிய பின்னர் சில உதிரி பாகங்கள் மிச்சம் இருக்கும்.

1288. வாழ்க்கை என்பது நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு நிகழ்வது ஆகும்.

1289. நடைபெறும் விவாதத்தின் நீளமும் பிரச்னையின் ஆழமும் எதிர்விகிதத்திலேயே இருக்கும்.

1290. எது பலருக்கு தர்மசங்கடத்தைத் தருமோ அது நடந்தே தீரும்.

1291. எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் வருத்தமளிக்கக் கூடியது தான். ஆனால் நினைத்தது கிடைத்து விடுவதில் இருக்கும் அழிவு அதில் இல்லை.

1292. நண்பர்களால் ஏமாற்றப் படுவதை விட அவர்களைச் சந்தேகிப்பது மிகவும் மோசமானது.

1293. சத்தம் போடும் சக்கரம் தான் மாற்றப்படும்!

1294. நிகழ்வுகளை நீங்கள் தலையிடாமல் அது படியே நடக்க விட்டிருந்தால் இன்னும் நன்றாக நடந்திருக்கும்.

1295. நாங்கள் கடவுளை மட்டுமே நம்புகின்றோம். மற்றவர்கள் பணத்தைக் கட்டுங்கள். (ஒரு கடையில் இருந்த வாசகம்)

1296. முட்டாள்தனமான பதில்களைத் திருத்துவதை விட முட்டாள்தனமான கேள்வி கேட்பது எளிது.

1297. ஒருவர் ஒரு விஷயத்துக்குத் தயங்குகின்றார் என்றால் அது சரியாகக் கூட இருக்கலாம்.

1298. எதுவும் சரிப்படவில்லை என்றால் முதலாளி சொல்வதைக் கேளுங்கள்.

1299. விடுதியில் உங்கள் அறையில் தங்கியிருக்கும் நண்பரின் வேலை நேரம் உங்களுக்கு எதிர்ப்பதமாகவே இருக்கும்.

1300. ஒரு பொருளை யாரும் உபயோகிக்கவில்லை என்றால் அதில் காரணம் இருக்கும்.

மர்பி விதிகள் - 1301 - 1400

1301. ஒரு விஷயத்தைச் சரியாகச் செய்வதற்கு நேரம் இருக்காது. ஆனால் அதைத் திருத்துவதற்கு நேரம் இருக்கும்.

1302. பணம் என்பது சாணத்தைப் போன்றது. பரப்பி வைத்தால் எல்லோருக்கும் உதவக்கூடும்.ஒரே இடத்தில் சேர்த்து வைத்தால் நாற்றமெடுக்கும்!

1303. பொருளின் விலையும் அதன் உடையும் தன்மையும் எப்போதும் நேர்விகிதத்திலேயே இருக்கும்.

1304. நீங்கள் எத்தனை கஷ்டப்பட்டாலும் உங்களுக்குப் புரிந்த விஷயத்தை மற்றொருவருக்கு அப்படியே புரியவைக்க முடியாது.

1305. அடுத்தவர் எத்தனை கஷ்டப்பட்டாலும் அவருக்குப் புரிந்ததை உங்களுக்குப் புரியவைக்க முடியாது.

1306. அருங்காட்சியகத்தில் நீங்கள் ஆர்வமாகப் பார்ப்பதில் தான் எந்த விளக்கமும் இருக்காது.

1307. மேதாவி என்பவர் உங்கள் ஊரிலிருந்து ரொம்ப தூரத்தில் இருக்கும் சாதாரண மனிதர் ஆவார்.

1308. தவறுகளுக்கு என்றும் எல்லையே இருந்ததில்லை.

1309. ரகசியமான வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகளே நம்பத்தகுந்தவை.

1310. கையிலிருக்கும் பறவை தலைக்கு மேல் இருக்கும் பறவையை விட பாதுகாப்பானது!

1311. மாற்றுச் சக்கரத்திலும் காற்று இல்லாத போது தான் கடையில்லாத இடமாய்ப் பார்த்து சக்கரத்தில் ஆணி ஏறும்.

1312. அது பெரிய விஷயம் இல்லையென்றால் கவலை கொள்ளாது மறந்து விடுங்கள்.

1313. அது உங்களால் மாற்ற முடியாத விஷயமென்றால் கவலை கொள்ளாது மறந்து விடுங்கள்.

1314. அது அடுத்தவரின் பிரச்னை என்றால் கவலை கொள்ளாது மறந்து விடுங்கள்.

1315. எளிதாகச் சரி செய்ய முடிகின்ற எந்தத் தவறையும் யார் செய்தார்கள் என்று பார்ப்பதில்லை.

1316. நீங்கள் ஒரு விஷயத்தை நன்கு கற்றுணர்ந்த பின் அதை நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பமே வாய்க்காது.

1317. முடிவில்லா மோசங்களை விட மோசமான முடிவு சாலச் சிறந்தது.

1318. ரொம்பக் கைராசிக்கார மருத்துவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கவும்.

1319. ஒரு பொருளின் 7/8 பாகம் எப்போதும் மறைவிலேயே இருக்கும்.

1320. அரசியல்வாதிகள் தேர்தல் சமயத்தில் வரிகள் பற்றிப் பேசுவதில்லை.

1321. மேதாவியிடம் நேரம் என்று கேட்டால் உங்கள் கடிகாரத்தைப் பார்த்துத் தான் பதில் சொல்வார்.

1322. மேதாவி என்பவர் உங்கள் ஊரிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் அழகான கைப்பெட்டி வைத்திருக்கும் முட்டாள் ஆவார்.

1323. நாட்டில் இருக்கும் பத்தில் ஒருவர் முன்னேற மீதி இருக்கும் ஒன்பது பேர் உழைப்பார்கள்.இது வளரும் நாடுகளில் இன்னும் அதிகமாகும்!

1324. புதிய அறிவியல் வரவானது எப்போதும் இடத்தைச் சுருக்கவும், காலத்தைக் குறைக்கவும்,தொழிலாளர்களை மிச்சப்படுத்தவுமே இருக்கும்.

1325. வெறுங்கால் என்னும் காந்தம், கூர்மையான பொருட்களை எளிதில் ஈர்க்கும் தன்மை உடையது. அதிலும் கூர்மையான பக்கம் மேற்புறமாக இருப்பது இருளில் தான் அதிகம் இருக்கும்.

1326. பிரச்னை பெரியதாக இருந்தால் எளிதான, மலிவான தீர்வுகள் எல்லாமே ஒதுக்கப்பட்டு விடும்.

1327. முட்டாளுக்கும் திருடனுக்கும் உள்ள ஒரே வேற்றுமை என்னவென்றால், முட்டாள் திட்டத்தை முறியடிப்பதில் எதிர்பார்க்காமலும், மிகப் பெரிய விளைவை உண்டாக்கும் வண்ணமும் செயல்படுவான்!

1328. வாயில் வைத்திருக்கும் சிகரெட்டானது அறிவாளிக்கு சிந்திக்கும் திறனையும், முட்டாளுக்கு மதியீனத்தையுமே வழங்கும்.

1329. முட்டாள்கள் இருந்த இடத்துக்கு படுமுட்டாள்களே வந்து அமைவார்கள்!

1330. இந்த உலகில் நான்கு வகையான மனிதர்கள் இருக்கின்றார்கள். 1. அமைதியாக செயலேதும் புரியாமல் அமர்ந்து இருப்பவர்கள். 2. அப்படி இருப்பதாய்ச் சொல்லிக் கொள்பவர்கள். 3. செயலைப் புரிவதாகச் சொல்லிக் கொள்பவர்கள். 4. செயலைச் செய்பவர்கள்!

1331. எந்தப் பொருளையும் அதன் முழுத் தகுதிக்கும் உபயோகிக்க ஆரம்பித்தால் அது உடைந்து போகும்.

1332. நீங்கள் என்ன செய்ய மாட்டீர்கள் என்பதை யாரிடமும் சொல்லாதீர்கள்.

1333. அதிகாரத்துவத்தை அழிக்க வேண்டுமானால் உங்கள் பிரச்னையை அவர்கள் பிரச்னையாக மாற்ற வேண்டும்.

1334. எந்த முயற்சியும் நூறு சதம் தோல்வியைத் தழுவுவதில்லை. எப்படிச் செய்யக் கூடாது என்பதற்கு ஒரு உதாரணமாகவாவது அது இருக்கும்.

1335. சந்தேகப் படும் கருத்தை நம்ப வைக்க உரக்கச் சொல்லுங்கள்.

1336. எல்லோரையும் திருப்திப் படுத்த நினைத்தால் யாரையும் திருப்தி படுத்த முடியாது.

1337. பிரச்னையைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் நாமும் தான் பிரச்னைக்கு அதி முக்கிய காரணம் என்பது தெரிய வரும்.

1338. நீங்கள் ஒரு விஷயம் செய்ய முடிவெடுத்திருக்கின்றீர்கள். அது சரியே! ஆனால் அதற்கு முன் முடிக்க வேண்டிய விஷயம் முடிந்தால் தானே இதைச் செய்ய முடியும். அதைத் தான் மறந்து போவீர்கள்.

1339. நால்வரில் ஒருவர் எப்போதும் முட்டாளாம். உங்கள் நண்பர்கள் மூவரைக் கண்காணியுங்கள். அவர்கள் இல்லையென்றால் அது நீங்களாகத் தான் இருக்கும்.

1340. பொது மேடையில் நயமாகப் பேசுபவர்கள் சீக்கிரம் முடித்து விடுவார்கள்.

1341. பழச்சாறையும் பருக வேண்டும், சுகாதாரமாகவும் சாப்பிட வேண்டும் என்பவர்கள், பழச்சாறு தயாரிப்பதைப் பார்க்காமல் இருப்பதே நல்லது.

1342. குளியலறையில் கனத்த மனிதர் ஒல்லியான மனிதரை விட அதிகம் சோப்பை செலவளிப்பார்.

1343. வெளியீடை மதிப்பிட முடியவில்லை என்றால் பரவாயில்லை, உள்ளீடை மதிப்பிடுங்கள்.

1344. ஒரு அறிவியல் விதி சரிவரவில்லையென்றால் இருக்கவே இருக்கின்றது விதிவிலக்கு.

1345. தவறு என்று திருத்திய பின் தான் அது தவறில்லை என்று தெரியவரும்.

1346. அப்படிச் செய்த தவறை பின் எப்படியும் திருத்த முடியாது!

1347. தேடாத பொருள் எளிதில் கிடைக்கும்.

1348. தேடிய பொருள் கிடைத்தவுடன் அடுத்த பொருள் காணாமல் போகும்.

1349. பத்திரப் படுத்திய பொருள் தேவைப்படுவதில்லை.

1350. தேவைப்படும் பொருள் பத்திரப்படுத்தப்படுவதில்லை.

1351. வாடகை வண்டியில் ஏறும் முன் வாடகை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்..

1352. ஒரு உயரந் தாண்டும் போட்டிக்காக தேர்ந்தெடுக்க வேண்டுமாயின், 7 அடி உயரம் தாண்டும் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமேயன்றி, 7 ஒரு அடி உயரம் தாண்டுவோரைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.

1353. உள்ளே சென்ற எதுவும் வெளியே வந்து தான் ஆக வேண்டும்.

1354. மோசமானவர்களைக் கேலி செய்வது எளிது. யாரும் அன்பு காட்டாவிட்டால் நீங்களும் மோசமானவர் ஆகி விடுவீர்கள்.

1355. நான் செய்வது தவறு என்று நீங்கள் நினைப்பீர்களேயானால், நீங்கள் செய்வது தவறு தான்!

1356. நான் செய்வது தவறு என்று நீங்கள் நினைப்பீர்களேயானால், நீங்கள் நினைத்தது சரி தான்!

1357. எந்த முட்டாளும் சட்டம் போட முடியும். எல்லா முட்டாள்களும் அதை மதிப்பார்கள்.

1358. ஒரு பொருளை எல்லாரும் வெறுத்தால் ஏன் என்று பார்க்க வேண்டும். எல்லாரும் விரும்பினாலும் ஏன் என்று பார்க்க வேண்டும்.

1359. ஒரு பொருளை வாங்கும் வரை அதை வைத்து என்ன செய்யப் போகின்றோம் என்று தெரியாது. வாங்கியவுடன் நாம் நினைப்பதைச் செய்ய முடியாது என்று மட்டும் தெரிந்து விடும்.

1360. நல்ல நேரம் சீக்கிரம் முடிவடைந்து விடும். கெட்ட நேரம் அவ்வளவு சீக்கிரத்தில் முடியாது.

1361. மோசமான சட்டத்தை நீக்குவதை விட அதை எப்படியாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தான் அரசாங்கம் நினைக்கும்.

1362. தூரத்தில் சரியாகத் தெரிவது பக்கத்தில் தவறாக இருக்கும்.

1363. தூரத்தில் தவறாகத் தெரிவது பக்கத்திலும் தவறாகவே இருக்கும்.

1364. தோற்றத்தைப் பார்த்து ஏமாறக் கூடாது என்று நினைத்துக் கொண்டே ஏமாறுவோர் தான் அனைவரும்.

1365. நீங்கள் எங்கே எந்த நிலையில் இருந்தாலும், அங்கே அந்த நிலையில் தான் இருப்பீர்கள்.

1366. பறக்கும் தூசு சரியாக பக்கத்தில் இருக்கும் கண்ணைத் தேடித் தான் போகும்.

1367. ஒரு நிர்வாகம் அடிக்கடி மாறிக் கொண்டே இருந்தால், அங்கே வேலை குறைவாய் நடக்கின்றது என்று பொருள்.

1368. எந்த ஒரு பொருளின் 7/8 பாகமும் கண்ணுக்குத் தெரியாது. (அதாவது நமக்கு எட்டுத் திசையில் ஒரு திசையில் இருந்து தான் பார்க்க முடியும் என்று மர்பி தெளிவாய்ச் சொல்கின்றார் பாருங்கள்!)

1369. உங்களுக்குச் சரியென்று தோன்றும் போது, நீங்கள் செய்வது தவறு என்று சொல்பவரை நம்புங்கள்.

1370. நீங்கள் செய்வது தவறென்று தோன்றும் போதும், இன்னொருவர் நீங்கள் செய்வது சரி என்று சொன்னால், தன்னம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.

1371. வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பார்க்கும் கணக்குகள் அனைத்தும் தவறாகவே இருக்கும்.

1372. உங்களுக்கு ஒரு விஷயம் அழகாய்ச் செய்ய கைவந்து விட்டதென்றால் அதை மீண்டும் செய்யும் வாய்ப்பே வரப்போவதில்லை என்று அர்த்தம்.

1373. ஒவ்வொருவர் வாழ்விலும் மிகச் சிறந்த நாள் என்று ஒன்று இருக்கும். அந்த நாள் உங்களுக்கு ஏற்கனவே முடிந்திருக்கும்.

1374. யாராலும் எதையும் முழுமையாய்ப் புரிந்து கொள்ள முடியாது.

1375. உலகில் எந்த இரு நபர்களும் ஒரு விஷயத்தை ஒரே மாதிரி புரிந்து கொள்ள முடியாது.

1376. எந்த ஒரு மாற்றமும் துவக்கத்தில் பூதாகரமாகத் தான் இருக்கும்.

1377. முடிவில்லா மோசங்களை விட மோசமான முடிவு எவ்வளவோ மேல்.

1378. அரசியல் நடத்துவது என்பது கால்பந்து நடுவரைப் போல. உங்களுக்கு விளையாட்டு தெரிந்திருக்க வேண்டும் ஆனால் விளையாடக் கூடாது!

1379. கிடைப்பதற்கு அவசரப்படுபவர்களுக்கு மோசமான பொருளே கிடைக்கும்.

1380. எந்தக் குழந்தையும் அசுத்தமான சுவரில் கிறுக்காது.

1381. உலகில் சின்ன வேலை என்று எதுவுமே கிடையாது. (அலுவலகம் போகும் வழியில் ஒரு'சின்ன' வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு வந்துட்றேன்!)

1382. உங்கள் எதிராளி களைப்படையும் போது, இன்னும் உதையுங்கள்.

1383. ஒவ்வொரு சிறிய பிரச்னைக்குள்ளும் ஒரு பெரிய பிரச்னை வெளியே வரத் தவித்துக் கொண்டிருக்கும்.

1384. அவசரமானது முக்கியமானதில்லை. முக்கியமானது அவசரமானதில்லை!

1385. தொழிலாளிகளுக்கிடையே இருக்கும் சிறு சிறு மனக்கசப்பே நிறுவனத்தின் மொத்த ஆரோக்கியமாகும்.

1386. ஒரு எதிரியை உருவாக்க வேண்டுமா? யாருக்காவது ஏதாவது உதவி செய்யுங்கள்!

1387. பத்திரிகையாளரின் தத்துவம்: ஒரு தலைப்புச் செய்தி கேள்விக்குறியோடு முடிந்திருந்தால்,பதில் இல்லை என்பதாகும்!

1388. சமைக்கும் போது ஒரு பண்டம் தவறாகச் சமைத்து கெட்டுப் போனால், அதை ருசியாக்க உபயோகிக்கும் எதுவும் மேலும் மோசமாகவே ஆக்கும்.

1389. உங்களுக்கும் உலகுக்கும் நடக்கும் சண்டையில் உலகைப் பின் தள்ளுங்கள். வெற்றி உங்களுக்குத் தான்.

1390. பொருளாதாரம் சம்பந்தமாய் யாரேனும் அரசியல்வாதி பேசினால், அவரது பேச்சை விட,செயல்பாடுகளைக் கவனியுங்கள்!

1391. எந்த முதலாளிக்கும் உருப்படியான தொழிலாளி எந்நேரமும் கிடைத்துக் கொண்டிருக்க மாட்டார்.

1392. ஒரு சிறந்த ஆசிரியரிடம் அவருக்குத் தெரிந்த விஷயத்தை விட, தெரியாத விஷயத்தை நடத்தச் சொல்லித் தான் உத்தரவு வரும்.

1393. ஒரு பொருளில் கெட்டுப்போன பாகங்களிலிருந்து பிரிக்க முடியாததாகவே நல்ல உருப்படியான பாகங்களும் இருக்கும்.

1394. அரசியல்வாதிகள் நல்லதோ கெட்டதோ அதிகப்படுத்தியே பேசுவார்கள்.

1395. காலை நல்லபடியாகச் சென்று கொண்டிருக்கின்றதா? கவலைப்படாதீர்கள். மாலை மோசமானதாகத் தான் இருக்கும்.

1396. முந்தைய ஆண்டு இதே நாள் நன்றாகவே இருந்திருக்கும்.

1397. நீங்கள் தேடும் புத்தகம் மட்டும் நூலகத்தில் கிடைக்காது.

1398. ஒரு உணவகத்தில் உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் ஒருவரின் குரலின் அளவும் அவர் பேசும் விஷயத்தின் தரத்தின் அளவும் எதிர்மறை விகிதத்திலேயே அமையும்.

1399. ஒரு பொருள் உடைபடும் நேரமும், அதை உருவாக்கத் தேவைப்படும் நேரமும் எதிர்மறையாகவே இருக்கும். (கண்ணாடி ஜாடி உடையும் நேரமும், அதை மீண்டும் ஒட்ட எடுத்துக் கொள்ளும் நேரமும்!)

1400. சம்பளம் உயர உயர கட்டுப்பாடு தளர்ந்து போகும்.

மர்பி விதிகள் - 1401 - 1500
1401. அதிக மக்களுக்குத் தொல்லை தரக்கூடிய ஒரு விஷயம் நடந்தே தீரும்.

1402. எந்த ஒரு தொல்லையும் உங்களுக்கு நேரும் போது இனி இந்தத் தொல்லை வராது என்றே உங்களுக்குத் தோன்றும். ஆனால் அது மாயை ஆகும்.

1403. ஏமாற்றம் என்பது தாங்க முடியாது தான். ஆனால் நீங்கள் நினைத்ததைப் பெறும் போதும் அதே நிலை தான்.

1404. ஒரு நண்பனிடம் ஏமாறுவதை விட அவனை நம்பாமல் இருப்பது மோசமானதாகும்.

1405. நிகழ்வுகளை நீங்கள் தலையிடாமல் அதுவாகவே நடக்க விட்டிருந்தால் இன்னும் நன்றாகவே நிகழ்ந்திருக்கும்.

1406. அனைத்துச் சட்டங்களும் அடிப்படையில் பொய்யானவை.

1407. ஏமாறுபவர்களிடம் பணம் இருப்பது நல்லதில்லை.

1408. பெரிய மனிதர்கள் பெரிய விஷயங்களுக்காகச் சண்டை போடுவதில்லை.

1409. ஒரு சட்டத்தைப் பரிந்துரை செய்து ஒப்புதல் அளிப்பவர்கள் தான் அந்தச் சட்டத்தை முதலில் மீறுபவர்களாக இருப்பார்கள்.

1410. வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்தல் எளிது தான். ஆனால் வாழ்வதோ முன்னோக்கி அல்லவா செய்ய வேண்டும்?!

1411. வானொலியில் நீங்கள் கேட்க நினைக்கும் அலைவரிசை மட்டும் கிடைக்காது.

1412. பிரச்னை தூங்கிக் கொண்டிருக்கும் போது அதை ஏன் எழுப்பி விடுகின்றீர்கள்?

1413. கலாச்சாரம் எத்தனை பெரியதாய் பரவியிருக்கின்றதோ அத்தனை மாற்றத்துக்கு உள்ளாகும்.

1414. உங்களுக்கு ஒரு விஷயம் வேண்டுமென்றால், நீங்கள் அதன் கூடவே செல்லத் தயாராக வேண்டும்.

1415. எந்த ஒரு நிறுவனத்திலும் மேலிருப்பவர்களால் கீழிருப்பவர்களைச் சமாளிப்பதை விட,கீழிருப்பவர்களால் மேலிருப்பவர்களைச் சமாளிப்பது தான் மிகக் கடினமாக இருக்கும்.

1416. நம் கடிகாரத்தையும் கொடுத்து, பணமும் கொடுத்து, நேரம் கேட்டுக் கொண்டால் தான் நமக்கு ஆலோசனை சொல்பவர்களுக்கு மரியாதை.

1417. அடுத்து ஒரு எளிதான கேள்வி என்று யாரேனும் சொன்னால், அந்தக் கேள்வி என்னவென்றே புரியாது என்று தெரிந்து கொள்ளுங்கள்!

1418. எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் இடத்தை விரிப்பதாகவும், காலத்தைச் சேமிப்பதாகவும்,சோம்பலைப் பெருக்குவதாகவும் இருக்கும்.

1419. எந்த ஒரு விஷயத்தையும் சொல்வதற்கு முன் அதன் முக்கியத்துவம் பற்றிச் சொல்லக் கூடாது.

1420. நீங்கள் தான் எதையுமே கடினமாய்ச் சிந்திக்கின்றீர்கள்.

1421. அடுத்தவர்களின் செலவு எப்போதும் அநாவசியமானது தான்.

1422. வளர்ந்த நாடுகளில் இருப்போர் வளரும் நாடுகளின் மக்கள் முன்னேறாதவர்கள் என்று இரண்டிலிருந்து நான்கு மடங்கு வரை தப்புக்கணக்கு போடுவார்கள்.

1423. ஒரு பொருளின் உபயோகத்தன்மையும், அந்தப் பொருளின் உபயோகம் குறித்த மக்களின் கருத்தும் எதிர்மறையாகவே இருக்கும்.

1424. மையை வண்டி வண்டியாய் வாங்குவோருடன் விவாதம் செய்யக் கூடாது! (யாரென்று தெரிகின்றதா?)

1425. சாதாரணப் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். மிகப் பெரிய பிரச்னைகள் சாதாரணப் பிரச்னைகளாகும் வரை காத்திருக்க வேண்டும்.

1426. நீங்கள் இப்போது எடுத்து சுவைக்க நினைக்கும் மிட்டாய் கைப்பைக்கு அடியிலேயே கிடக்கும்.

1427. எப்போது இரண்டு மனிதர்கள் இணைந்து மூன்றாம் மனிதனின் பணத்தை எப்படிக் கையாளவது என்று திட்டமிட்டுப் பேச ஆரம்பிக்கின்றார்களோ, அப்போது தான் மோசடி உருவாகின்றது.

1428. புதிதாக வேலைக்குச் சேர்ந்தவருக்கு எது நன்றாகத் தெரியும் என்று காட்டிக் கொள்கின்றாரோ, அந்த வேலையைத் தராமல் இருப்பதே நிறுவனத்துக்கு நல்லது.

1429. எவர் அதிக லாட்டரிச் சீட்டு வாங்குகின்றாரோ, அவருக்குத் தான் பரிசே விழாது!

1430. அனைத்து நல்லவைகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன! (அப்போ மீதம் நமக்கு இருப்பது?)

1431. ஒரு பொருள் சுத்தமாக இருக்க வேண்டுமாயின் இன்னொரு பொருள் அசுத்தமாக வேண்டும்.

1432. எந்தப் பொருளும் சுத்தமாக்காமலேயே அத்தனை பொருட்களையும் அசுத்தமாக்க முடியும்!

1433. ஒரு கூட்டத்தில் எதைச் சொல்லக் கூடாதோ, அதைச் சொல்வதற்கும் ஒருவர் இருப்பார்.

1434. உங்கள் காரில் மட்டும் சின்ன பழுது வரவே வராது.

1435. ஏசியோடு தூசியில்லாமல் இருந்தாலும், கணினி இயங்காமல் போகும்!

1436. ஒரு நிர்வாகத்தின் முதல் மூடநம்பிக்கை அது இருக்கின்றது என்று நினைப்பது தான்.

1437. ஒரு நிர்வாகத்தின் இரண்டாம் மூடநம்பிக்கை அதன் வெற்றி நிர்வாகத்தில் இருப்போரின் திறமையால் ஏற்படுகின்றது என்பது தான்.

1438. எந்த நிர்வாகத்தில் என்ன நடக்கின்றது என்று யாருக்கும் தெரியவில்லையோ, அந்த நிர்வாகமே வெற்றி பெறும்!

1439. எதற்காவது காத்திருந்தால் அது கிடைக்காமல் போயே விடும்.

1440. எதற்காவது காத்திருந்தால் அது கிடைக்காமல் போவது மட்டுமின்றி தேவையான சேதாரத்தையும் உண்டு பண்ணி விட்டே போகும்.

1441. உலகில் எந்த ஒரு நல்ல விஷயம் நடக்கும் முன் ஒரு கெட்ட விஷயம் நடந்தே தீரும்.

1442. நல்ல விஷயமா? அப்படி ஒன்று நடக்கும் என்று யார் சொன்னது?

1443. ஒரு சிறு முட்டாள்தனம் வெகு தூரம் பயணிக்கும்!

1444. நகர்ந்து கொண்டு ஒரு பொருள் இருக்குமாயின் அதன் பயணம் தவறான பாதையிலேயே இருக்கும்.

1445. நகராமல் ஒரு பொருள் இருக்குமாயின் அது தவறான இடத்திலேயே இருக்கும்.

1446. நத்தைக்கும் அரசியல்வாதிக்கும் உள்ள ஒரே ஒரு வேற்றுமை, நத்தை அதன் எச்சிலை பின்புறம் விட்டுச் செல்லும்.

1447. கணினிகளை நம்ப முடியாது தான். ஆனால் மனிதர்களை அதை விடவும் நம்ப முடியாது.

1448. யாராவது கணினியைக் குற்றம் சொன்னால், அதன் பின்னர் இருவர் இருப்பார்கள். ஒருவர் அந்தக் குற்றத்துக்குப் பொறுப்பாளி. மற்றொருவர் குற்றம் சொன்னவர் தான்.

1449. எந்த ஒரு இயந்திரம் மனிதனை நம்பி இருக்கின்றதோ அதை நம்ப முடியாது.

1450. தவறுகளைத் தவிர்க்கும் நம்பகத்தன்மைக்காகச் செலவிடும் முதலீடு, தவறுகளால் ஏற்படும் நஷ்டத்தை விட அதிகமான பின்னரே வேலை செய்ய ஆரம்பிக்கும்.

1451. ஒரு பொருள் கண்டிப்பாய் இருக்க வேண்டுமாயின் அது இருக்கக் கூடிய சாத்தியக் கூறு குறைவு தான்.

1452. ஒரு பொருள் இருக்க வேண்டியிருந்து, அது உங்களிடம் இருக்குமாயின் அது உபயோகப்படுத்த முடியாததாகத் தான் இருக்கும்.

1453. எண்கள் மூலம் காணப்படுவது விடையேயன்றி, ஒரு பிரச்னையின் தீர்வைத் தராது.

1454. மக்களால் அதிகாரத்தை ஈர்க்க முடியும், அதிக நேரம் வைத்திருக்க இயலாது.

1455. உங்களால் கீழே விழுகின்ற போது கீழே இருந்து எதையாவது எடுக்க முடிந்தால் கீழே விழுவதிலும் அர்த்தம் உண்டு தானே?

1456. உங்களை முன்னேற்றப் பாதையில் எது கொண்டு செல்கின்றதோ அதன் மூலமே நீங்கள் வழுக்குவீர்கள்.

1457. ஒரு பத்திரிகை ஆசிரியரின் மேடைப்பேச்சுப் புகழும், அவர் பத்திரிகையின் புகழுக்கும் இருக்கும் தூரம், அவர் பேசும் ஊருக்கும், அவரது பத்திரிகை அச்சடிக்கும் ஊருக்கும் இடையே இருக்கும் தூரத்தின் எதிர்மறை விகிதமாக இருக்கும்.

1458. பழுக்காத பழமாய் வாங்கினால் அது பழுக்கும் போது உங்களுக்குச் சாப்பிடக் கிடைக்காது.

1459. பழுத்த பழமாய் வாங்கினால் சாப்பிடும் போது ருசிக்கும்படி பழுத்திருக்காது.

1460. உலகத்தில் பணமில்லாக் காசோலை போல் வேறெதுவும் வேகமாய்ச் செல்வதில்லை.

1461. மாலை நெருங்க நெருங்க நீங்கள் சென்றடைய வேண்டிய மலை உச்சியின் தூரம் நிலையாகவே இருக்கும்.

1462. இந்த அழகான நாளில் யாரும் சந்தோசமில்லாமல் இருப்பார்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது தான். ஆனால் அது தான் உண்மை.

1463. நீங்கள் தேவையான வேகத்தில் சென்றால், எந்த இடத்தையும் பத்து நிமிடங்களில் அடைந்து விட முடியும் தான்.

1464. வண்டியின் வேகம் மும்மடங்காகும் போது, வேகத்தடை பற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை.

1465. உலகின் மக்களில் இரண்டே பிரிவினர் தான் உண்டு. மக்களை இரண்டாகப் பிரிப்பவர்கள்,அவ்வாறு பிரிக்காதவர்கள்.

1466. முதல் முறை வெற்றி பெற முடியவில்லையா? கவலைப்படாதீர்கள். உங்களால் இதை விடத் தோற்கவே முடியாது.

1467. அனைவரும் கல்லறையில் ஒரே மாதிரி தான் புதைக்கப்படுகின்றனர்.

1468. வேலை தேடுவதைக் காட்டிலும் அதைத் தக்க வைத்துக் கொள்வது கடினமானது.

1469. யார் வேண்டுமாயினும் எந்த வேலையாயினும் செய்ய முடியும். அது அப்போது அவரது வேலையாய் இல்லாத பட்சத்தில்.

1470. இந்த உலகின் தத்துவங்கள் யாரும் நினைப்பதைக் காட்டிலும் சிக்கலானது. யாரும் நினைப்பதைக் காட்டிலும் எளிமையானது.


1471. ஒரு பொருள் மிக உபயோகமானது என்று கருதப்படுவதற்கும் அதன் உண்மையான உபயோகத்துக்கும் இருக்கும் விகிதம் எதிர்மறையாகவே இருக்கும்.

1472. எதையேனும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டுமாயின் நீங்கள் தேடலை ஆரம்பித்திருக்க வேண்டும்!

1473. நீங்கள் ஒரு சிறந்த பொருளை உருவாக்க வேண்டுமேன்றால், நீங்கள் ஏற்கனவே ஒரு தரமில்லாத பொருளை உற்பத்தி செய்திருக்க வேண்டும்.

1474. கார்க் கதவைத் திறக்கும் போது தவறுதலாக விழும் எந்தப் பொருளும் காருக்கு அடியில் யாருக்கும் எட்டாத அளவில் ஈர்த்துக் கொள்ளும் சக்தி காருக்கு உண்டு!

1475. முக்கியமான கட்டத்தில் தான் கிரிக்கெட் வீரர் பீல்டிங்கில் கோட்டை விடுவார்.

1476. முக்கியமான கட்டத்தில் கிரிக்கெட் வீரர் பீல்டிங்கில் கோட்டை விடவில்லை என்றால் அவர் பந்தை எறியும் போது கோட்டை விடுவார்!

1477. வாழ்க்கையின் இறந்த காலத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும்! ஆனால் புரியவேண்டியது எதிர்காலம் அல்லவா?

1478. ஒரு விஷயம் தவறாகப் போய் விட்டதே என்று வருந்தாதீர்கள். அவ்வாறு தவறாகப் போய்விடும் என்று ஏற்கனவே ஒருவர் யூகித்து வைத்திருப்பார்.

1479. ஒரு பொய்யை எத்தனை முறை பொய் என்று நிரூபித்தாலும் அதை நம்புவதற்கும் ஆட்கள் இருப்பார்கள்.

1480. நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருக்கும் போது நீங்கள் வேறொன்றை விரும்பிக் கொண்டிருப்பீர்கள்!

1481. ஒரு கெட்டது வந்து நமக்கு நல்லது செய்து விட்டதே என்று சந்தோசப்பட்டால், ஒரு நல்லது வந்து அதைக் கெடுத்து விடும்!

1482. எதிர்பார்த்த நிகழ்வுகள் எதிர்பாராமல் நிகழும்.

1483. ஏகமனதான தீர்மானம் என்ற ஒன்று இதுவரை கிடையாது. இனிமேலும் கிடையாது.

1484. நுகர்வோருக்கு என்று மட்டும் சொல்லி விட்டால் பொதுமக்கள் எதைக் கொடுத்தாலும் வாங்குவார்கள்.

1485. தெருவில் கிடக்கும் குப்பைக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் நேர் விகிதத் தொடர்பு உண்டு.

1486. புதுப் பொருள் ஒன்றைக் கண்டுபிடிக்கும் போது ஒரு தவறைச் சரி செய்ய முடியவில்லையென்றால், அதை அந்தப் பொருளின் சிறப்பியல்பாக்கி விடுங்கள்!

1487. வாழ்க்கை சண்டை போன்றது தான். களத்தில் இறங்காமல் அதை வெல்ல முடியாது.

1488. எந்த ஒரு சாமியாரும் போலி தான். போலி இல்லை என்று தான் அவர் நிரூபிக்க வேண்டி இருக்கும்!

1489. மேதைகளிடம் எதற்கும் கேட்டுக் கொள்ளுங்கள். அவர்கள் தான் எதை, ஏன், எப்போது செய்யக் கூடாது என்று சொல்வார்கள். அதை அப்போது சரியாகச் செய்யுங்கள்!

1490. சரியாகக் கணிக்காத சோதிடரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை. சரியாகக் கணிப்பவரைக் கண்டதும் சுட வேண்டும்!

1491. உங்கள் வானொலியில் நீங்கள் அதிகம் கேட்க விரும்பும் நிலையத்தை மட்டும் தெளிவாகக் கேட்க இயலாது.

1492. ஒரு தவறைச் சரி செய்வதற்கான நேரமும், அத்தவறைச் செய்ய எடுத்துக் கொண்ட நேரமும் எப்போதும் எதிர்மறையாகவே இருக்கும்.

1493. போதும் என்பது போதும் என்பதற்குப் பொருந்தாது.

1494. மக்களின் பலத்த போராட்டத்துக்குப் பின், இங்கே இருக்கும் வாகன நெரிசல் ஒரு கிமீ தூரத்துக்கு நகர்த்தி வைக்கப்படும்.

1495. இரண்டு தவறுகளுக்கும் தொடர்பு இல்லாவிட்டால் கூட இரண்டும் ஒரே நேரத்திலேயே நிகழும்.

1496. உயிரைப் பணயம் வைத்துச் செய்யும் செயல்களைச் செய்பவர்களே முன்னேறுகிறார்கள்.

1497. மூன்று முறை வாழ்க்கையில் தொடர்ந்து சரியாக ஊகிக்க முடிந்தால், கை கொடுங்கள்,நீங்களும் மேதை தான்.

1498. பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டுபிடித்தவர்களுக்கு எதிராகவே அதே கொள்கை பயன்படுத்தப்பட்டு பொய் என்று நிரூபிக்கப் படும்.

1499. உங்களுக்கு வரும் அநாமதேய விற்பனை அழைப்புக்களின் எண்ணிக்கை நீங்கள் எத்தனை அவசரமான அவசியமான செயல் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதைப் பொருத்தே அமையும்.

1500. வேலை என்பது புல்வெளியாக இருக்கலாம். ஆனால் பணம் தான் அதைப் பசுமையாய் வைத்திருக்க உதவுகின்றது.